Published:Updated:

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

Published:Updated:
உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

'வருடக்கணக்காகத் தூங்காமல் இருக்கிறேன்’ என்று மனம் நொந்துபோன நபரிடம், 'உங்களுக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்பதை ஒரு டெஸ்ட் செய்து பார்த்துவிடுவோம்’ என்று கடந்த இதழில் கூறியிருந்தேன்.

'டெஸ்ட்’ என்றதும் 'என்னமோ ஏதோ’ என்று பதட்டமானவரை முதலில் சமாதானப்படுத்தினேன். பின்னர் ஆக்டி கிராப் (Acti Graph)  என்ற பிரத்யேக வாட்ச் ஒன்றை அவரது கையில் கட்டினேன். 'இந்த வாட்ச் இன்று முதல் ஒரு வாரம் வரையில் உங்கள் கையைவிட்டு அகலக் கூடாது. குளிக்கும் நேரம் கூட, இந்த வாட்சை உங்கள் கையிலேயே கட்டியிருக்க வேண்டும். உங்களுக்குத் தூக்கம் வருகிற உணர்வு ஏற்படும் நேரத்தையும் இந்த டைரியில் மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த வாரம் என்னை வந்து சந்தியுங்கள்’ என்று அனுப்பிவைத்தேன். கிளினிக்கை விட்டு வெளியே செல்வதற்குள் கையில் கட்டப்பட்ட வாட்சை பலமுறை பார்த்துக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

சரி... அது என்ன  ஆக்டி கிராப் வாட்ச்?

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

மனித உடல் அசைவுகளைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து பதிவு செய்துகொள்ளும் ஒரு வகை டிஜிட்டல் கருவி அது. நிம்மதியாகத் தூங்கும் நேரம் தவிர, நாள் முழுக்கப் பேச்சு, நடை, உடற்பயிற்சி என்று மனிதன் எப்போதும் அசைவிலேயே இருக்கிறான். எனவே, அந்த பேஷன்ட் அடுத்த ஒரு வாரத்தில், எப்போதெல்லாம் ஆக்டிவாக இருக்கிறார், அசைவற்று இருக்கிறார் என்பதை எல்லாம் அவரது கையில் கட்டியுள்ள அந்த 'வாட்ச்’ சென்சார்கள் நுணுக்கமாகப் பதிந்துவைத்துக்கொள்ளும். அவ்வளவுதான்!

அடுத்த வாரம் வந்தது.

முதல் ஆளாக வந்து சந்தித்தார் அந்த பேஷன்ட்.

அவர் கையில் கட்டியிருந்த  ஆக்டி கிராப் வாட்சை வாங்கி, அதில் பதியப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்துகொண்டேன். பகல் வேளைகளில் அவர் ஆக்டிவாக இருந்த நேரங்கள் எல்லாம் வரைபடத்தில், இ.சி.ஜி. கிராஃப் போன்று கருப்பு நிறக் கோடுகளாக நெருக்கமாகப் பதிவாகி இருந்தது. இரவு 12 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும் வரைபடத்தில், மிகச் சில கோடுகளே தென்பட்டன. அதாவது குறிப்பிட்ட அந்த இரவு வேளைகளில், தன்னையும் அறியாமல் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். அதனால் அவரது உடலில் அசைவுகள் இல்லை.

இன்னும் சிலர், 'தங்களுக்கு நல்ல தூக்கம் வருவது இல்லை’ என்று குறைபட்டுக்கொண்டு அவர்களாகவே மெடிக்கல் ஷாப்களில் தூக்க மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். எந்த மாத்திரையையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பக்க விளைவுகள் கட்டாயம் இருக்கும். அந்த வகையில், இது போன்று தொடர்ந்து தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் ஒரு கட்டத்தில், பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் 'ஸ்லீப் மெடிசின்’ மருத்துவரைத் தேடி வர நேரும். சரி... 'தூக்கம் வரவில்லை’ என்று சொல்லும் எல்லோருமே இதுபோன்ற ஆழ்மனக் குளறுபடிகளால்தான், அப்படி அறியாமல் சொல்கிறார்களா? உண்மையில், தூக்கம் வராமல் இருக்க வேறு காரணங்களே இல்லையா? அதற்கான பதில் அடுத்த இதழில். அது வரையிலும்.....

- ஆராரோ ஆரிராரோ

'நமக்கு நல்ல தூக்கம் வேணும்’ என்ற எண்ணத்தை மனதில் தீவிரமான ஒரு உறுதியாக எடுத்துக்கொண்டால், நல்லத் தூக்கம் நிச்சயம்!

உங்க தூக்கத்தை 'வாட்ச்' பண்ணுங்க!

• சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்தால் போதும். பின்னர் அதுவே வழக்கமாகிவிடும்.

• தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

• காபி, டீ போன்ற பானங்கள் விழிப்பு நிலையைத் தூண்டி, தூக்கத்தைத் துரத்தியடிக்கும். எனவே மாலை 4 மணிக்குப் பிறகு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டாம்.

• மது குடித்து உடனே தூங்கச் செல்வோருக்கு அரைத்தூக்கமும், அதிகாலைத் தலைவலியும் நிச்சயம்!