Published:Updated:

ஜிப்மரில் டாக்டர் திடீர் போராட்டம்: நோயாளிகள் அவதி

ஜிப்மரில் டாக்டர் திடீர் போராட்டம்: நோயாளிகள் அவதி
ஜிப்மரில் டாக்டர் திடீர் போராட்டம்: நோயாளிகள் அவதி

புதுச்சேரி: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிப்மரில் டாக்டர் திடீர் போராட்டம்: நோயாளிகள் அவதி

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அம்மாநில மக்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடையும் நோயாளிகளின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

##~~##
இந்த நிலையில், நேற்று மாலை டாக்டர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கப்பட்டார். இதனை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படுவதால் உள்நோயாளிகள், புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறவாழி

படம்: ஜெ.முருகன்