Published:Updated:

ரத்த அழுத்தப் பிரச்னையைத் தடுக்கும் மாதுளை! - ஆய்வில் தகவல் 

ரத்த அழுத்தப் பிரச்னையைத் தடுக்கும் மாதுளை! - ஆய்வில் தகவல் 
ரத்த அழுத்தப் பிரச்னையைத் தடுக்கும் மாதுளை! - ஆய்வில் தகவல் 

ந்தியாவில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் நாம் செய்யும் வேலையில் ஏற்படும் மன அழுத்தம்தான். இது தவிர நமக்கு ஏற்படும் தலைவலி காரணமாகவும் ரத்த அழுத்தப் பாதிப்பு உண்டாகிறது. இது தொடர்ந்தால் உடலுக்கு ஆபத்து நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தநிலையில், ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் தன்மை மாதுளை பழத்தில் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தினர். அதில், `தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்’ என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்தது.

இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கு தினமும் 500 மி.லி அளவு மாதுளை ஜூஸ் நான்கு வாரங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. பின்னர், அவர்களிடம் மருத்துவ ஆய்வு மேற்கொண்டபோது அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறைந்திருந்தது தெரியவந்தது.
இதற்குக் காரணம், மாதுளம் பழத்தில் உள்ள வைட்டமின் - சி மற்றும் பாலிபீனால்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கின்றன.

மேலும், அதில் உள்ள பொட்டாசியம், சோடியம், போலிக் அமிலம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. `ஒரு கிளாஸ் கிரீன் டீ, ஒயின் ஆகியவற்றில் உள்ளதைவிட மாதுளை ஜூஸில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இந்த ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் அருந்தினால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்’ என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.