Published:Updated:

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB
``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

மீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் `ஹெபடைடிஸ் பி' (Hepatitis B) என்னும் கல்லீரல் அழற்சி நோயால்  தான் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிருந்தார். அதன்பிறகு, சமூக ஊடகங்களில் அந்த நோய் பேசுபொருளானது.  

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB


`ஹெபடைடிஸ் பி' பற்றிய விழிப்புணர்வுக்கான உலகச் சுகாதார மையத்தின் தென்கிழக்காசியப் பகுதியின் விளம்பரத் தூதராக அமிதாப் பச்சன் இருக்கிறார். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றபோது, ``ஹெபடைடிஸ் பி' பாதிப்பால் தனது கல்லீரல் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள  25 சதவிகித கல்லீரலுடன்தான் நான் உயிர் வாழ்ந்து வருகிறேன். வழக்கமான மருத்துவப் பரிசோதனை ஒன்றின்போதுதான் எனக்கு நோய் முற்றிய நிலையில் இருப்பது தெரிந்தது. என்னைப் போல இங்கு ஏராளமானோர் இந்தநோயின் பாதிப்பு தெரியாமலே வாழ்கிறார்கள். அதனால், கல்லீரல் முற்றிலும் செயலிழந்து உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. என்னுடைய முகமே இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் என்பதால் இதுபற்றி நான் பொதுவெளியில் பேசுகிறேன்' என்று அமிதாப் தெரிவித்திருந்தார்.

கல்லீரல் அழற்சி நோயால் உலக அளவில் தினமும் 4,000 பேர் உயிரிழக்கின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். இதற்குக் காரணம் நோயின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே. `பெரும்பாலும் வேறு ஏதாவது காரணங்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்யப்படும் நேரங்களிலோ, வேறு நோய்க்கான சிகிச்சைக்குச் செல்லும்போதுதான் இந்தப் பாதிப்பை பலர் அறிந்துகொள்வதாக' மருத்துவர்கள் கூறுகின்றனர். 

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

உண்மையில், `கல்லீரல் அழற்சி நோய்' எவ்வளவு ஆபத்தானது, ஒருவருக்கு என்னென்ன காரணங்களால் இந்த நோய் வரலாம், அதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன என்பது குறித்து கல்லீரல் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸிடம் கேட்டோம். 

``உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் சேமித்து, பின்னர் சக்திகளாக மாற்றி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் முக்கியமான

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

பணியை கல்லீரல் செய்து வருகிறது. அத்துடன் ரத்தத்தில் தங்கியுள்ள தேவையற்ற ரசாயனங்களையும், நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்களையும் வடிகட்டும் வேலை என நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியப் பணிகளையும் கல்லீரல் செய்கிறது. 

ஹெப்படைடிஸ் `பி'யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மற்றவர்களுக்குச் செலுத்தப்படுவதாலும் இந்த வைரஸ் அதிகமானோருக்குக் கடத்தப்படுகிறது. முக்கியமாக,`ஹெபடைடிஸ்-பி' வைரஸ் (HBV) தொற்றுக்கான பரிசோதனைகளுக்கான வசதிகள் குறைவாக இருக்கும் நாடுகளில் அல்லது பரிசோதனையே  செய்யப்படாத நாடுகளில்தான் இந்த வைரஸின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இத்தகைய பாதிப்பு உள்ளவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலை இருக்கிறது. இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்ற உண்மை தெரியாததே அதற்குக் காரணம். 

அதிகமான மதுப்பழக்கம், உடலுக்குத் தீமை ஏற்படுத்தும் நச்சுகள் உடலுக்குள் செல்வதுபோன்ற காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு `கல்லீரல் அழற்சி நோய்'  வரலாம். ஆனால், வைரஸ் பாதிப்பில்தான் அதிகமாக `கல்லீரல் அழற்சி நோய்' வருகிறது. இந்த நோய்க்குப் பல்வேறு `ஹெபடைடிஸ்' வைரஸ்கள் காரணமாக இருக்கின்றன. இந்த வைரஸ்களில் ஒன்றுதான் `ஹெபடைடிஸ்-பி’. இதைத்தான் `பி’வகை கல்லீரல் அழற்சி நோய் என்கிறோம். இந்த நோய், பாதிக்கப்பட்டவரின் ரத்தம், விந்து உள்ளிட்ட உடல் திரவங்கள் மூலம் மற்றவருக்குப் பரவலாம். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு  வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். முக்கியமாக, மருந்து செலுத்தும் ஊசி, சவரக்கத்தி போன்றவற்றை நோயால் பாதிக்கப்பட்டவரிடம் பயன்படுத்தியபிறகு முறையாகச் சுத்தம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால் இந்த வைரஸ் பரவும். 

கல்லீரல் அழற்சி நோய்க்கு ஆளானோர், காலதாமதம் செய்யாமல் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், கல்லீரல் தீவிரமாக பாதிக்கப்படுவதை தடுக்கலாம். ஆனால், தங்களுக்கு இந்த நோய் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. 

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

நல்ல தூக்கம், உணவு, ஓய்வு இருந்தும் கடுமையான உடல் சோர்வு இருந்தால் இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது என்று பொருள். சிலருக்கு இந்த நோயின் பாதிப்பு காரணமாக மஞ்சள்காமாலை ஏற்படும். இல்லையென்றால், இந்த நோய் தொற்றி பல ஆண்டுகள் ஆகியும்கூட நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதற்குள், கல்லீரல் சிரோசிஸ் (Cirrhosis) அல்லது கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உண்டாக்கும்.

வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் மூலம் `ஹெபடைடிஸ்-பி’வைரஸை முற்றிலும் நீக்க முடியாது. அப்படியே நீக்க முயன்றாலும் ஏகப்பட்ட பக்க விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேறு வழி இல்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், கல்லீரலை தானம் செய்பவர்களின் எண்ணிக்கையைவிட அதற்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். 

``75 சதவிகிதம் கல்லீரல் பாதிப்போடு வாழ்கிறேன்"- அமிதாப் பச்சன் #HepatitisB

உயிருடன் இருப்பவரின் 50 சதவிகித கல்லீரலை எடுத்து மற்றவருக்குப் பொருத்த முடியும். தானம் கொடுத்தவருக்கும், தானம் பெறுபவருக்கும் கல்லீரல் வளர்ச்சி அடைந்துவிடும். 80 சதவிகிதத்துக்கும் மேலாகக் கல்லீரல் பாதிப்பு இருந்தால் மட்டுமே கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம். மற்றபடி, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அவசியமில்லை. உரிய மருத்துவ சிகிச்சை மூலம் வாழும் காலத்தை நீட்டிக்க முடியும். இந்த நோய்க்குத் தடுப்பூசிகள்  இருக்கின்றன. பிறந்த குழந்தைகளுக்கும், இந்த நோய் தொற்றும் அபாயத்தில் இருப்பவர்களுக்கும் சரியான தடுப்பு மருந்து அளித்தால் நோய் ஏற்படாமல் தடுக்கலாம்" என்கிறார்.