Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 34வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 34வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

லேரியா கிருமிகளின் தன்மையைக் கடந்த இதழில் பார்த்தோம். உலகைப் பேரச்சத்தில் ஆழ்த்திவரும் தொற்றுநோய்களில் ஒன்றான மலேரியா, அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது. அதிலும் ‘ஃபால்ஸிபேரம்’ கிருமி மிகவும் விபரீதமானது. உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.   

தொற்று நோய்களின் உலகம்!

‘ஃபால்ஸிபேரம்’ கிருமி நிறைய குட்டிகளைப் போடும். உடலிலிருக்கும் சிறு சிறு ரத்தக்குழாய்களில் நிரம்பி, பாதைகளை அடைத்துக் கொள்ளும். சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளிலுள்ள ரத்தக்குழாய்கள் இந்தக் கிருமிக்கு மிகவும் பிடித்தமானவை. இதனால் அந்த உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்தக் கிருமியால் வரும் மலேரியாவிலும் கடுமையான குளிருடனான காய்ச்சல் ஏற்படும். மூளையிலுள்ள ரத்தக்குழாய்களை அடைத்துக் கொள்வதால் சில நேரம் மயக்கம்கூட ஏற்படும்.  அதை ‘செரிபிரல் மலேரியா’ என்போம்.  இதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. ரத்தக்குழாய்களில் இருப்பதால், சிறிதளவு ரத்தம் எடுத்துச் சோதித்தாலே கண்டுபிடித்துவிட முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!



‘ஓவேல்’ அல்லது ‘வைவாக்ஸ்’ கிருமிகள் மூலம் மலேரியா வந்தால் குளோரோகுயின் மாத்திரைகள் போதும். ‘ஃபால்ஸிபேரம்’ கிருமிக்கு மருந்து எதிர்ப்புத்திறன் அதிகம். குளோரோகுயின், மாத்திரைகளுக்குக் கட்டுப்படாது. கிருமியின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் பாதிப்பது ‘வைவாக்ஸ்’ கிருமிதான். அதனால், பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது. ஆங்காங்கே ‘ஃபால்ஸிபேரம்’ கிருமியின் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. `ஃபால்ஸிபேரம் கிருமி என்று கண்டறிந்தால், இரண்டு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் தர வேண்டும்’ என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. 

தொற்று நோய்களின் உலகம்!

மலேரியா, குணப்படுத்தக்கூடிய நோய். ‘ஃபால்ஸிபேரம்’ கிருமி மூலம் வரும் மலேரியா, சரிவர சிகிச்சையளித்தால் குணமாகிவிடும். குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. ‘வைவாக்ஸ்’ கிருமி சில சேட்டைகள் செய்யும். மருந்து கொடுத்தால், ரத்தத்திலிருக்கும் கிருமிகள் செத்துவிடும். கல்லீரலில் ஒண்டியிருக்கும் கிருமிகள் அழியாது. அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் ரத்தத்தில் சேர்ந்து குட்டிபோடத் தொடங்கிவிடும். அதனால்,  குளோரோகுயின் மாத்திரைகளோடு சேர்த்து, கல்லீரலிலிருக்கும் கிருமிகளையும் அழிக்க, வேறு சில மருந்துகளைச் சேர்த்துத் தர வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சரிவர எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மலேரியாவின் தாக்கம் அதிகரிக்கலாம். ‘ஃபால்ஸிபேரம்’ கிருமி மருந்து எதிர்ப்புத்திறன்கொண்டது. அதனால், அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க வேண்டும்.  மலேரியாவுக்கான அறிகுறி, கடும் குளிருடனான காய்ச்சல். சிறுநீரகம், மூளை பாதித்தால் அதற்குரிய அறிகுறிகளும் தென்படலாம். மலேரியாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்துவருகின்றன. அவ்வப்போது சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா கிருமிகளை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். இப்போது கியூ.பி.சி என்றொரு சோதனை வந்திருக்கிறது. இதில் 100 மடங்கு உறுதியாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

வழக்கமாக வட இந்தியாவில் ஜூன் மாதம் மலேரியா பரவ ஆரம்பிக்கும். தமிழகத்தில் செப்டம்பர்- அக்டோபரில் ஆரம்பித்து, ஜனவரி வரை அதன் தாக்கம் இருக்கும். `தமிழகத்தில் மலேரியா உறுதி செய்யப்பட்டால், உள்ளாட்சி அமைப்புக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்பது விதிமுறை. மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகளெல்லாம் பிறகு... ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சத்தான உணவுகள், சுத்தமான சுற்றுப்புறம், மகிழ்ச்சியான மனநிலை... இவை இருந்தால் மலேரியா அல்ல, எல்லாவிதத் தொற்றுநோய்களையுமே தடுக்க முடியும். 

- களைவோம்...