Published:Updated:

'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' டி.என்.ஏ பற்றி 'தடம்' திரைப்படத்தில் பேசப்பட்ட தகவல்கள் உண்மையா?

'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' டி.என்.ஏ பற்றி 'தடம்' திரைப்படத்தில் பேசப்பட்ட தகவல்கள் உண்மையா?
'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' டி.என்.ஏ பற்றி 'தடம்' திரைப்படத்தில் பேசப்பட்ட தகவல்கள் உண்மையா?

மீபத்தில், அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தடம்'. ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த இந்தப்படத்தில் எழில், கவின் ஆகிய வேடங்களில் நடித்துள்ளார் அருண் விஜய். இவர்கள் இருவரும் 'ஐடென்டிகல் ட்வின்ஸ்' (Identical Twins). அதாவது ஒரே உருவ அமைப்பைக் கொண்ட 'ஓருரு இரட்டையர்'. படத்தின் கதைப்படி, 'ஐடென்டிகல் ட்வின்ஸ்' ஆக இருக்கும் இவர்களில் ஒருவருக்கு பிரச்னை வந்தால் ஒரே உருவ அமைப்பைக் கொண்ட இருவரும் சேர்ந்து அந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இப்படம். இருவரும் இரட்டையர்களாக இருப்பதால் அவர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் குற்றவாளி யார், நிரபராதி யார் என்பதைக் கண்டறிய முடியாது. இந்தியாவில் நடைபெறும் 1000 பிரசவங்களில் 9 பிரசவத்தில் இரட்டையர் பிறப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


இரட்டையர் வகைகள், 'ஓருரு இரட்டையர்' உருவாதல், தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, மரபியல் ஆராய்ச்சி நிபுணர் அரவிந்த் ராமநாதன் கூறுகையில், 
"இரட்டையரில் 'Identical twins', 'Non-Identical Twins' என்று இரு வகை உண்டு. ஒரு உயிரணு ஒரு கருமுட்டையோடு இணைந்த பின் கருவுற்ற முட்டையிலுள்ள செல் இரண்டாகப் பிரியும். இவ்வகையில் பிறக்கும் இரு குழந்தைகளும் பெண்களாகவோ, ஆண்களாகவோ மட்டுமே இருக்கும். ஒரு குழந்தை பெண்ணாகவும் மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த வகை இரட்டையர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் குணாதிசயங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்படி உருவாகும் இரட்டையரை 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்'  (Identical Twins) என்கிறோம். 

இதுமட்டுமன்றி, இரண்டு உயிரணுக்கள் இரண்டு கருமுட்டைகளோடு தனித்தனியாக இணையும் பொழுது இரண்டு கருக்களுமே தனித்தனியாக வளர்ந்து இரண்டு குழந்தைகளாக உருவாகின்றன. இவ்வகையில் பிறக்கும் இருகுழந்தைகளில் ஒரு குழந்தை பெண்ணாகவும், மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்கலாம். அல்லது இரு குழந்தைகளும் பெண்ணாகவோ, ஆணாகவோ கூட இருக்கலாம். இந்த வகை இரட்டையர்களின் மரபணுக்கள் வெவ்வேறாக இருக்கும்.

இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் குணாதிசயங்களும் மாறுபட்டதாக இருக்கும். இவ்வகை குழந்தைகளை, 'நான் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Non-Identical Twins) என்பார்கள். இருவருக்கும் தனித்தனியாக ரத்தம் செல்லும். ஒரே கருவிலிருந்தாலும் இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக வளர்வார்கள். உலகம் முழுவதும் இவ்வகை இரட்டையர்தான் அதிகம். சராசரி குழந்தைகளை விட, இரட்டையர் பிறக்கும்போது உடல் எடை சற்று குறைவாகவே இருக்கும்.

'ஐடென்டிகல் ட்வின்ஸா'க இருப்பவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொண்டால் 99.99% ஒரே விதமான முடிவுகளைத்தான் பெற முடியும். மரபணு ஒரே மாதிரியாக இருந்தாலும், கைரேகையில் வித்தியாசம் காணப்படும். இதற்குக் காரணம் இருவரும் ஒரே கருமுட்டையில் வளர்ந்தவர்கள்" என்கிறார் அரவிந்த் ராமநாதன். 


'ஐடென்டிகல் ட்வின்ஸா'க இருப்பவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொண்டால் 99.99% ஒரே விதமான முடிவுகளைத்தான் பெற முடியும். மரபணு ஒரே மாதிரியாக இருந்தாலும், கைரேகையில் வித்தியாசம் காணப்படும். இதற்குக் காரணம் இருவரும் ஒரே கருமுட்டையில் வளர்ந்தவர்கள்" என்கிறார் அரவிந்த் ராமநாதன். மரபணு ஒன்றுபோல இருத்தல், இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மருத்துவ உண்மைகள் என்று பல்வேறு கேள்விகளுக்கு சென்டர் ஃபார் மெடிக்கல் ஜெனட்டிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் உத்ரா சடகோபன் பதிலளித்தார். 

"நம் உடலில் உள்ள செல் ஒன்றில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. மரபணு என்னும் உட்கரு குரோமோசோமில்தான் உள்ளது. அப்பா, அம்மாவின் குணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கும் மரபணுதான் இந்த டி.என்.ஏ ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் சேர்ந்து கரு உருவாகும்போது, அவற்றில் இருக்கின்ற குரோமோசோம்கள் இரண்டாகப் பிரியும்.

இந்த நிகழ்வுக்கு 'மியோசிஸ்’ (Meiosis) என்று பெயர். பொதுவாக, இந்த நிகழ்வில் 23 ஜோடி குரோமோசோம்கள்  இரண்டு இரண்டாகப் பிரிந்து 46 குரோமோசோம்களாக மாறும். ஒரு கரு முட்டையும், உயிரணுவும் இணைந்து கருத்தரிக்கும் பொழுது, ஒரு முழுமையான செல்லாக மாறுகின்றது. இந்த செல் உருவான சில மணி நேரங்களில், ஒரு செல் இரண்டாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும் பிரிய ஆரம்பித்து, கை, கால்கள், தலை என்று குழந்தை முழுவதுமாக வளர்கிறது. ஒரே கருமுட்டையில் பிறக்கும் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்-ன் நிறம், உயரம், சாயல், மரபணு என்று அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். 

குழந்தைக்காகப் பெண்கள் அதிக காலம் காத்திருக்கும்போது, வயது ஏற ஏற, அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு இரட்டையர் பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கருத்தரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள், மாத்திரை காரணமாகவும் இந்த வாய்ப்பு உருவாகிறது.

சோதனைக் குழாய் குழந்தை போன்ற செயற்கைக் கருத்தரித்தல் முறைகளாலும் பலருக்கு இரட்டைக் குழந்தைப் பிறக்கிறது. அதேபோல், ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால் அடுத்த பிரசவத்திலும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு உருவாகலாம்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் 58 பேர்களில் ஒருவர் என்ற விகிதத்திலும், இரட்டைக் குழந்தைகளின் தந்தைகளில் 116 பேர்களில் ஒருவர் என்ற விகிதத்திலும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது.

இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கும் இதே விகிதத்தின்படி, இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டு குழந்தைகளின் மரபணு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களின் மனநிலை வேறுபடலாம். இருவரும் ஒரே சூழ்நிலையில் வளர்ந்தாலும், இவர்களின் பழக்கவழக்கம், செயல்பாடு ஆகியவை வெவ்வேறாக இருக்கும். 

தனியாகப் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் இரட்டையர்  22 சதவிகிதம் அதிகமாக இடதுகை பழக்கம் கொண்டவர்கள். மேலும், சாதாரணக் குழந்தைப் பிறக்கும் காலத்தைவிட  50 சதவிகிதம் இரட்டையர், 37 வாரத்துக்கு முன்பே பிறந்து விடுகின்றனர். இப்போது வரை இரட்டையர்களை எங்குப் பார்த்தாலும் ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறோம். அதிலும் ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரியான உடல், கண், காது என்று நுணுக்கமாக ஆராய்வோம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் தெரியும், அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்று" என்கிறார் உத்ரா சடகோபன்.