பெரும்பாலான பால்வினைநோய்கள் உடலுறவின்மூலமாகவே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். சிகிச்சைக்கு வரும் சிலர், ‘ஒருநாள் அந்த டாய்லெட்டை யூஸ் பண்ணினேன்... அதனால வந்திருக்கும்’, ‘அந்த லாட்ஜ்ல கொடுத்த துண்டுல உடம்பைத் துடைச்சேன். அதனால வந்திருக்கும்’ என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையில் அவற்றுக்கெல்லாம் வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், ‘ஓகே, ஓகே... இருக்கலாம்’ என்று கடந்துவிடுவேன்.

சில பால்வினை நோய்கள், பாலியல் தொடர்பு இல்லாவிட்டாலும்கூட பரவும். உடலுறவுகொள்ள வேண்டும் என்பதில்லை. தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல், ஓரல் செக்ஸ் மூலமாகக்கூட பரவும். பிறப்புறுப்புப் பேன், சொறி போன்ற பிரச்னைகள், இருவர் உடல்பட அணைத்துக்கொள்வதன் மூலமாகவே பரவிவிடும். ஹெர்பிஸ் நோய் வந்தவர்கள், நோய் பாதித்த இடத்தைத் தொட்டுவிட்டு, தன் உடலிலேயே வேறொரு பாகத்தைத் தொட்டால், அந்த இடத்திலும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களின் உதடு, நோய் பாதித்த இடத்தில் பட்டால் உதட்டிலும் பாதிப்பு பரவலாம்.

கொனோரியா மூன்று இடங்களில் வரும். பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை. கொனோரியா பாதித்த ஓர் ஆணிடம், ஒரு பெண் ஓரல் செக்ஸ் வைத்துக்கொண்டால் அந்தப் பெண்ணுக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்படலாம். அதே பெண், வேறோர் ஆணுடன் ஓரல் செக்ஸ் வைத்துக்கொண்டால் அந்த ஆணின் பிறப்புறுப்பில் கொனோரியா பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சரி, ஒருவருக்கு பால்வினைநோய் இருக்கிறது. அவரது ரத்தத்தில் அந்த நோயை உருவாக்கிய கிருமி இருக்கிறது. இது மற்றவருக்கு எப்படிப் பரவும்... பிறப்புறுப்பிலோ, அதன் அருகிலோ இந்த நோயால் உருவான புண்கள் இருக்கும்பட்சத்தில் அவற்றிலிருக்கும் கிருமிகள், அவரோடு உடலுறவுகொள்பவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உள்ளே போகலாம். இவருக்கும் காயமிருந்து அதன் மூலம் தொற்று உருவாகலாம்; உடலுறவின்போது சிறு காயங்கள் ஏற்பட்டு, அவற்றுக்குள் கிருமி புகுந்து நோயை உருவாக்கலாம்; உடலுறவுத் திரவங்கள் மூலமாகவும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவலாம்.

கொனோரியா வந்தால், உடனே தெரிந்துவிடும். வலியெடுக்கும்; சீழ் வரும்... உடனே மருத்துவரை நாடி வந்துவிடுவார்கள். ஹெர்பிஸைக்கூட வலியின் மூலம் கண்டறிந்துவிட முடியும். சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டவரால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சிபிலிஸில் மூன்று நிலைகள் உண்டு. பிரைமரி சிபிலிஸ் (Primary Syphilis), செகண்டரி சிபிலிஸ் (Secondary Syphilis), டெர்ஸரி சிபிலிஸ் (Tertiary Syphilis). பிரைமரி சிபிலிஸ் வந்தால், பிறப்புறுப்பில் சிறிய புண்கள் வரும். ஆனால் வலியே இருக்காது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் அது அடுத்தகட்டத்துக்குப் போய்விடும். கிளமெடியா வந்தால் பிறப்புறுப்பில் சீழ்க் கசியும். அதைச் சரியாக கண்டுபிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் பிரச்னையில்லை. விட்டால், சிக்கலாகிவிடும். பாதிப்பு அப்போது தெரியாது. ஆணோ, பெண்ணோ இந்த நோய்களைப் பெற்று வெகு எளிதாக தங்கள் துணைக்குப் பரப்பிவிட முடியும்.

ஹெபடைட்டிஸ் பி என்பது ஒருவகை வைரஸ். இதனால் ஏற்படும் பாதிப்பு கல்லீரலைத் தாக்கும். இது பல காரணங்களால் ஏற்படும். நோய்த்தொற்றால் ஏற்படலாம். மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாததால் ஏற்படலாம். விஷம் உடலில் கலப்பதால் ஏற்படலாம். உடம்பு தன்னை எதிர்த்துச் சில ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதால் வரலாம். மது அருந்துவதால் ஏற்படலாம். நோய்த்தொற்றால் ஏற்படும் ஹெபடைட்டிஸ் என்பது வைரஸ் மூலம் வருவது.

இந்த வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ, ஹெச் எனப் பல வகைகள் உள்ளன. ஏ, ஈ ஆகிய இரண்டும் உணவு மூலமாகப் பரவும். பி, சி இரண்டும் ரத்தம் அல்லது உடலிலிருந்து வெளியேறும் நீர்மங்கள் மூலமாகப் பரவும். குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெளிப்படும் உடலுறவு திரவங்கள் மூலம். ஹெபடைட்டிஸ் பி ஒருவரைத் தாக்கினால்,100-ல் 30 பேருக்கு மஞ்சள்காமாலையாக வெளிப்படும். 70 பேருக்கு வந்ததே தெரியாமல் போய்விடும். காய்ச்சல் வரும், லேசாக உடம்பு வலியிருக்கும், தானாகவே சரியாகிவிடும். மஞ்சள்காமாலையாக வெளிப்படும் 30 பேரில் 20 பேருக்கு ஆறு மாதங்களுக்குள் உடல் தானாகவே கிருமியை வெளியேற்றிவிடும். 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே, கிருமி உள்ளேயே உட்கார்ந்துகொண்டு, ‘க்ரானிக் ஹெபடைட்டிஸ்’ என்ற அடுத்தநிலைக்குச் சென்றுவிடும்.

கிராமப்புறங்களில் மஞ்சள்காமாலை வைத்தியத்திற்கென்றே பெயர்பெற்ற நாட்டு வைத்தியர்கள் இருப்பார்கள். சூடு வைப்பார்கள். நோய் குணமானதுபோல் தோன்றும். ஆனால், இயல்பாகவே ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தாக்கி மஞ்சள்காமாலை வந்தால், 70 சதவிகிதம் பேருக்குச் சூடுவைக்காமலே குணமாகிவிடும். குழந்தைகளைப் பொறுத்தவரை நிலைமை வேறு. தாயிடமிருந்து குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி பரவினால் 90 சதவிகிதம் பேருக்கு க்ரானிக்காக மாறிவிடும். 10 சதவிகிதம் பேருக்குத்தான் தானாக குணமாகும்.

சரி, இந்த ஹெபடைட்டிஸ் பி கிருமி உள்ளே புகுந்து என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?

அடுத்த இதழில் விரிவாகப் பார்க்கலாம்!

- களைவோம்...