Published:Updated:

இளம்பெண்ணின் கண்ணிலிருந்து 4 ஈக்கள் அகற்றம்!

இளம்பெண்ணின் கண்ணிலிருந்து 4 ஈக்கள் அகற்றம்!
இளம்பெண்ணின் கண்ணிலிருந்து 4 ஈக்கள் அகற்றம்!

தைவான் நாட்டில் ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து தேனீ வகையைச் சேர்ந்த 4 ஈக்களை மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர். தைவான் பிங்டுங் பகுதியைச் சேர்ந்தவர் ஹீ என்ற பெண். 20 வயதாகும் அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நிலத்தில் களைகளை அகற்றும்பணியில் ஈடுபட்டிருந்தார்.

Photo Courtesy: AsiaWire

அப்போது திடீரென வீசிய காற்றால் புழுதியும், மணலுமாக அப்பகுதி முழுவதும் ஒரே புகைமண்டலமாகக் காட்சியளித்துள்ளது. அந்தச் சூழலில் ஹீயின் கண்ணில் ஏதோ ஒரு பூச்சி விழுந்ததுபோன்று தெரிந்திருக்கிறது. இதனால் கண்ணில் உறுத்தல் ஏற்பட்டதால் நீரால் கண்களைக் கழுவினார். ஆனாலும் கண்கள் சிவந்து நீர் கொட்டியது. 

இரவு முழுவதும் கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மறுநாள் அங்குள்ள பூயின் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார். அவரை பரிசோதித்த கண் மருத்துவர்கள் ஹீயின் கண்ணில் தேனீ வகையைச் சேர்ந்த நான்கு ஈக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அந்த ஈக்களை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து அவர் வலியிலிருந்து விடுபட்டார்.  

``தேனீ வகையைச் சேர்ந்த இந்த ஈக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,280 அடிக்கு கீழே உப்பு நீரில் உயிர் வாழக்கூடியவையாகும். அவை எப்படியோ காற்றில் பறந்து வந்து அந்தப் பெண்ணின் கண்ணில் விழுந்துள்ளது. உடனடியாக அகற்றியதால் கருவிழியில் அவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் நான்கு மணி நேரம் அவை கண்ணில் இருந்திருந்தால் பார்வையில் பிரச்னை ஏற்பட்டிருக்கும். தற்போது அவர் குணமாகி விட்டார்'' என்று கண் மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் ஹங்க் சி டிங் தெரிவித்தார்.