Published:Updated:

வேதனை, வலி நிறைந்த பிரசவத்தை யூடியூபில் ஒளிபரப்பிய பெண்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவர், தனது பிரசவத்தை யூடியூப் சேனலில் ஒளிபரப்பியிருக்கிறார். இதை 1.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

வேதனை, வலி நிறைந்த பிரசவத்தை யூடியூபில் ஒளிபரப்பிய பெண்!
வேதனை, வலி நிறைந்த பிரசவத்தை யூடியூபில் ஒளிபரப்பிய பெண்!

ஸ்திரேலியாவைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவர், தனது பிரசவத்தை யூடியூப் சேனலில் ஒளிபரப்பியிருக்கிறார். இதை, 1.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர், சாரா ஸ்டீவன்சன். 26 வயதாகும் இவரது கணவர் பெயர் சூரத். சாரா, தற்போது உடற்பயிற்சி தொடர்பான யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, தனது குழந்தை பிறப்பை வீடியோவாக எடுத்து, அதை யூடியூப் சேனலில் ஒளிபரப்ப திடீரென்று ஓர் ஆசை வந்தது. 

 இதுபற்றி தனது கணவர் சூரத்திடம் கூறினார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், அவருக்கு பிரசவ நேரம் நெருங்கியது. சாராவின் கணவர் மற்றும் அவரது தாய்,  தங்கை எமிலி, ஒளிப்பதிவாளர், உதவியாளர்கள் ஆகியோர் தயார்நிலையில் இருந்தனர். உடனடியாக சாரா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது.  இந்தக் காட்சி ஒளிப்பதிவுசெய்யப்பட்டு, யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. 

                                                                                                                                                                                             photocoutesy: dailymail   

பிரசவத்தின்போது, சுமார் 30 மணி நேரம் சாரா பட்ட வேதனைகளும், அவதியும் சொல்லி மாளாது. அவை அனைத்தும் அந்த ஒளிபரப்பின்போது காட்டப்பட்டன.  அதை சுமார் 1.3 லட்சம் பேர் பார்வையிட்டு தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். சாராவின் முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரசவத்தின்போது சாராவுக்கு அவரது கணவர் சூரத் உறுதுணையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சாரா கூறும்போது, '`குழந்தை பிறப்பின்போது ஏற்பட்ட வேதனை, வலி ஆகியவற்றை மறந்து அழாமல்  இருந்தேன். இதை என்னால் நம்பமுடியவில்லை. இந்த வீடியோவை இவ்வளவு பேர் பார்த்துப் பாராட்டியிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.