Published:Updated:

சித்த மருத்துவமும், மகத்துவமும்!

சித்த மருத்துவமும், மகத்துவமும்!
சித்த மருத்துவமும், மகத்துவமும்!

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது சித்தர் வாக்கு. பசியாற்றும் உணவே, உயிர்காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இந்தக் கருத்தாக்கத்தைக் கொண்டு இயங்கிவருவது சித்த மருத்துவம். இயற்கை மருத்துவம் எனச் சொல்லப்படும் சித்த மருத்துவத்தின் மருந்துகளை சித்தர்கள் மூலிகை, தாது மற்றும் சீவப் பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர். 

சித்த மருத்துவமும், மகத்துவமும்!

நமது உடல் பஞ்ச பூதக் கலவை என்பது சித்தர்களின் கருத்து. நம் உடலை வாதம் (காற்று), பித்தம் (தீ), கபம் (நீர்) ஆகிய உயிர்த்தாதுக்கள்தான் இயக்குகின்றன என்கின்றனர். இவை அனைத்தும் ஒன்று, அரை, கால் என்கிற மாத்திரை விகிதத்தில் அமைந்திருக்கும். அதன் விகிதம் மாறும்போது நோய் உண்டாகும். நாம் உண்ணும் உணவுகளின் சுவை, அவற்றின் தன்மை, வீரியம் போன்றவற்றைப் பொறுத்தும் நோய் உண்டாகக்கூடும். மேலும், சித்த மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரேமாதிரியான மருத்துவமுறை கையாளப்படுவதில்லை. வாத, பித்த, கப உடலமைப்பைப் பொறுத்தே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது.

சித்த மருத்துவமும், மகத்துவமும்!

சித்த மருத்துவத்தின் பயன்கள்

சித்த மருத்துவ முறையில் நாடி மூலமாகவும் நீர்க்குறி, நெய்க்குறி மூலமாகவும் நோயின் தன்மை மற்றும் காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறு நோய் முதல் பெரு நோய் வரை அனைத்துக்கும் சித்த மருத்துவம் மூலம் தீர்வு உண்டு. நீரிழிவு நோய், ஆஸ்துமா, புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை, தூக்கமின்மை, மஞ்சள் காமாலை, நாட்பட்ட தோள் நோய்களான சோரியாசிஸ், வெண்படை மற்றும் உடல் பருமன் என எந்தவித நோய்க்கும் சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு. சித்த மருத்துவத்தின் முக்கிய அம்சம், அதன் மருந்துகளால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதுதான். 

சித்த மருத்துவமும், மகத்துவமும்!

Dr. S.செந்தில் குமார் M.D. (Siddha)

சித்தா மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அவசரத்திற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஆங்கில மருத்துவ மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம், இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. சித்தா மருந்துகளை எடுத்துக்கொண்டால் பத்தியம் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அதையே சித்த மருத்துவத்தில் பத்தியம் என்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடனும், பரிசோதனை முறைகளுடனும்தான் இன்றைய சித்த மருத்துவம் இருக்கிறது‌. மருத்துவமனைகளாக மட்டுமன்று சித்தா ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருவதே சித்த மருத்துவத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

அகத்தியா சித்தா நலமனை

இயற்கை அன்னையின் வரப்பிரசாதம் `சித்த மருத்துவம்' என்கிற பொன்மொழியைக் கொண்டு செயல்பட்டு வருகிறது `அகத்தியா சித்தா நலமனை' (Agathiya Siddha Wellness Clinic). மூலிகை மசாஜ், நீராவிக் குளியல் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சை மையமான அகத்தியா நலமனை, சித்தா ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக கடலூரில் தலைசிறந்து விளங்கிவருகின்றது. இங்கு, முதுகுத் தண்டு பிரச்னைகள், கழுத்து, இடுப்பு எலும்புத் தேய்மானம், முழங்கால் வலி போன்றவற்றிற்கு வர்ம முறைப்படி மூலிகை மசாஜ் செய்யப்படுகிறது. நாட்பட்ட நோய்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் மூலம் சித்தா ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வாதம் மற்றும் மூட்டுவாத நோய்கள், நரம்பு & தசை நோய்கள், முகவாதம், பக்கவாதம், அலர்ஜி, ஆஸ்துமா, சுவாச நோய்கள், டெங்கு முதலிய காய்ச்சல்கள், கருப்பை & ஹார்மோன் கோளாறுகள், மூளைவளர்ச்சி குறைபாடுகள், குழந்தையின்மை, நீரிழிவு நோய், உடற்பருமன், தூக்கமின்மை/மன அழுத்தம் போன்ற அனைத்துவிதமான நோய்களுக்கும் அகத்தியா சித்தா நலமனையில் தீர்வு காணலாம். புற்றுநோய், எய்ட்ஸ், இதயநோய் போன்றவைகளுக்கும் அகத்தியா நலமனையில் சிகிச்சை தரப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நமக்குப் பெரிதும் சவாலளிக்கக்கூடிய நோய்களாக இருக்கும் `தொற்றா' நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நமது உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தத் தொற்றா நோய்களின் தீவிரத்துக்கு காரணமாக விளங்குகின்றன. இது தவிர சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று பாதித்துள்ள நோய் மன உளைச்சல். இதற்கு யோகா, தியானம் & மூச்சுப் பயிற்சிகள் மூலம் தீர்வு தருகிறது அகத்தியா நலமனை. 

நோயாளிகளுக்கு தேவையான 70-க்கும் மேற்பட்ட மருந்துகள் அகத்தியா நலமனையிலேயே தயாரிக்கப்படுகிறது. நோய்களுக்குத் தீர்வுகண்டு நலம் காக்கும் அகத்தியா நலமனை கடலூர், பண்ரூட்டி & பாண்டிச்சேரியிலும் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  
கடலூர்: நெல்லிக்குப்பம் ரோடு, (மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில்), செம்மண்டலம், கடலூர்-607001. முன்பதிவுக்கு: போன்: 04142-291994, செல்: 95785 23205


பாண்டிச்சேரி: நெ.79, வைசியால் தெரு, சுசிலாபாய் பள்ளி எதிரில், பாண்டிச்சேரி, போன்: 0413-4901522, 96777 06766.
பண்ருட்டி: ஸ்ரீ முருகன் சித்தா கிளினிக், நெ.36, இந்திராகாந்தி சாலை(பஸ் நிலையம் பின்புறம்), பண்ருட்டி. போன்: 04142-320022, 98650 34523

Email: agathiyasiddha@yahoo.co.in