Published:Updated:

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!
News
எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பு மற்றும் கால் எலும்புகளை இணைக்கும் பகுதி. மூட்டுவலி உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் ஏற்படலாம் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் மூட்டுவலி என்பார்கள்.

முதுமையில் மூட்டுத்தேய்மானம் ஏற்பட்டு காலப்போக்கில் அது மூட்டு வலியாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைக்கு இந்த நிலை மாறி, இளைஞர்கள், குழந்தைகள்கூட இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதிப்படுவதைக் காணமுடிகிறது. வாழ்க்கைமுறை மாற்றம், மாறிவிட்ட உணவுப்பழக்கம் போன்றவற்றால் மூட்டு வலிகள் மட்டுமல்லாமல் புதிதுபுதிதாக வேறு சில நோய்களும்கூட உருவெடுத்து வருகின்றன.

உடல் இயக்கத்துக்கு எலும்பு, நரம்பு, தசைகள் ஆகியவற்றின் பங்கு அதிகம். நிற்கவும், உட்காரவும் உடல் வளைந்து கொடுக்கவும் உதவக்கூடியவை மூட்டுகள். இதில் குறிப்பாக முழங்கால் மூட்டுகள் மிகவும் முக்கியமானவை. மூட்டு எலும்பின் அசைவுக்கு உதவக்கூடியவை அதன்மேல் காணப்படும் ஜவ்வுகள்.

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடலின் எடையைத் தாங்கும்வகையில் மூட்டுகள் வலிமையுடன் இருக்கும். முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பு மற்றும் கால் எலும்புகளை இணைக்கும் பகுதி. மூட்டுவலி உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் ஏற்படலாம் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் மூட்டுவலி என்பார்கள்.

மூட்டுவலி ஏற்பட  உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டு ஜவ்வு கிழிதல், கிருமித்தொற்று, யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது, காசநோய், மூட்டுத் தேய்மானம் போன்றவை முக்கியக் காரணங்களாகும். ஹார்மோன் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, பரம்பரை, மன அழுத்தம், மூட்டுக்கிண்ணம் விலகுதல் போன்றவற்றையும்கூட காரணமாகச் சொல்லலாம். காலையில் எழும்போது மூட்டுகளை அசைக்க முடியாத அளவில் கடுமையான வலி, கால்களை நீட்டவோ மடக்கவோ சிரமப்படுவது, மூட்டுகள் உஷ்ணமாக இருப்பதும்கூட மூட்டு வலிக்கான அறிகுறிகளாகும். இவைதவிர மூட்டில் வலியுடன் சேர்ந்த வீக்கம், உடல் சோர்வு, அசதி, காய்ச்சல், நடந்த பிறகோ வேலைசெய்த பிறகோ மூட்டில் வலி ஏற்படுதல் போன்றவை மூட்டுவலி ஏற்பட்டதற்கான பொதுவான அறிகுறிகளாகும்.

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

மூட்டு வலிக்குப் பக்கவிளைவுகள் இல்லாத பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக காயகல்ப சிகிச்சை, பஞ்சகர்மா சிகிச்சை, யோகா, நடைபயிற்சி ஆகியவற்றைச் சொல்லலாம். வாழ்க்கைமுறை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நமது பாரம்பர்ய உணவுப்பழக்கத்தை மீட்டெடுப்பதும்கூட ஆயுர்வேத சிகிச்சையின் ஒரு அங்கமாக உள்ளது. 

மூட்டுவலிக்காக வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் வீட்டில் செய்யக்கூடிய எளியப் பயிற்சிகள்மூலம் மூட்டு வலிக்குத் தீர்வுகாண முடியும். அவற்றைப் பார்ப்போம்.

* சிறிதளவு கறுப்பு எள்ளைக் கால் டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த அந்த நீரைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

* வேப்பம் பூ, வாகைப்பூ தலா ஒரு கைப்பிடி எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் அரை டீஸ்பூன்வீதம் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

* அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு சமஅளவு எடுத்து மையாக அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம், மூட்டு வீக்கம் குறையும்.

எள், வேப்பம் பூ, முடக்கத்தான் கீரை... மூட்டுவலிக்குத் தீர்வாகும் எளிய உணவுகள்!

*  குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை தலா ஒரு கைப்பிடி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கசாயமாக்கிக் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

* வேப்பிலை, வில்வஇலை, துளசி, அறுகம்புல், வெற்றிலையை நன்றாகச் சுத்தம்செய்து, உலர வைத்துப் பொடியாக்கவேண்டும். இதில் இரண்டு கிராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தாலும் மூட்டு வலி குறையும்.