Published:Updated:

சென்னையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம்

விகடன் விமர்சனக்குழு
சென்னையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம்
சென்னையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம்
சென்னையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம்

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகம் என்ற பெயரில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் தினந்தோறும்  ஏழை, எளிய மக்கள் சாப்பிட படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். 10 ரூபாய்க்கு வயிறார சாப்பிட்டும் செல்கின்றனர் மக்கள்.

##~~##
இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று சாப்பிட்ட 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவரும் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.