Published:Updated:

`கல்குவாரி தண்ணீரைக் குடித்தால் என்னாகும்?' - மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

'நீரின்றி அமையாது உலகு' என்று மழைக்கும் மழைநீர் சேமிப்புக்கும், அரசும் மக்களும் மரியாதை தராததன் விளைவு, இன்று மக்கள் குடங்களுடன் தண்ணீர் லாரிக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இப்படி கல்குவாரியில் இருந்து எடுக்கப்படுகிற தண்ணீரைக் தொடர்ந்துக் குடித்து வந்தால், ஆரோக்கியப் பிரச்னைகள் ஏதாவது வருமா... சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம். 

`கல்குவாரி தண்ணீரைக் குடித்தால் என்னாகும்?' - மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

''பாறைகளில் ஊறிய நீரில்  கால்சியம், ஆக்சிலேட் மாதிரியான தாது உப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், தண்ணீரின் அடர்த்தியும் அதிகமாகத்தான் இருக்கும். வயிற்றில்  தேவையில்லாத வாயு உருவாவதோடு, சிறுநீரகத்தில் கற்களும் உருவாகலாம். இவற்றைத் தவிர, கல்குவாரித் தண்ணீரில் எலி மாதிரி சின்னச் சின்ன உயிரினங்கள் செத்துக் கிடந்து, அந்தத் தண்ணீரை பொது மக்களும் பயன்படுத்தினால், எலிக் காய்ச்சல் மாதிரி விஷக்காய்ச்சல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்தத் தண்ணீரை வீட்டில் வடிகட்டி, காய்ச்சிக் குடிப்பது மட்டுமே முழுமையான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகாது. குடிநீர் வாரியம், இதை முறைப்படி சுத்திகரித்துத் தருகிறபட்சத்தில், கல்குவாரித் தண்ணீர் பொதுமக்களுக்கு பக்கவிளைவுகள் தராது என்று நம்பலாம்'' என்கிறார்.

Vikatan