Published:Updated:

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek
ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

இந்தாண்டு 'Make the Time... Take the Time' என்ற செய்தியை முன்னிறுத்தி 'சர்வதேச ஆண்கள் உடல்நல வாரம்' அனுசரிக்கப்படுகிறது. 

லக அளவில், தங்கள் உடல்நலன்மீது அக்கறை கொள்ளாத ஆண்கள் நிரம்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது முதல் புகை, மதுவென உடல்நலனுக்கு ஒவ்வாத விஷயங்களை அளவில்லாமல் பயன்படுத்துவது வரை இந்திய ஆண்கள் காட்டும் அலட்சியம், பெரிய பல பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. உடல்நலன் மட்டுமல்ல... மனநலனிலும் ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை. 

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

ஆண்கள், அவர்களது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் தந்தையர் தினத்துக்கு முந்தைய வாரம், 'சர்வதேச ஆண்கள் உடல்நல வாரம்' (International Men's Health Week) அனுசரிக்கப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்துக்கு முந்தைய திங்கள்கிழமை தொடங்கும் இது, தந்தையர் தினத்துடன் முடிவடையும். தந்தையர் தினம் என்பது, பொதுவாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் வரும். இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி வருகிறது. எனவே, ஜூன் 10-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை ஆண்களுக்கான உடல்நல விழிப்புணர்வுக்கான வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 'Make the Time... Take the Time' என்ற செய்தியை முன்னிறுத்தி 'சர்வதேச ஆண்கள் உடல்நல வாரம்' அனுசரிக்கப்படுகிறது. 

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

"ஆண்கள் தங்கள் உடல் நலனில் எப்படியெல்லாம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?"

பொதுநல மருத்துவர் அர்ஷத் அகிலிடம் கேட்டோம். 

``இளைஞர்களின் உணவுப்பழக்கம் குறித்து நிறைய விவாதிக்க வேண்டும். பல இளைஞர்களுக்கு உணவு தொடர்பான போதிய

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

விழிப்புணர்வு இல்லை. துரித உணவுகள், அளவுக்கதிகமாக டீ, காபி அருந்தும் பழக்கம், வறுத்துச் சமைக்கும் உணவின்மீதான அளவுகடந்த ஈர்ப்பு என உணவு நெறிமுறை இல்லாமல் அவர்கள் இருக்கின்றனர். பணிக்குச் செல்பவர்களில் 75 சதவிகிதம் பேர் நேரத்துக்கு உணவு உண்பதில்லை அல்லது ஒழுங்கான நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை. சிலர் பிரெட் ஆம்லெட் மற்றும் ஒரு கப் டீயை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த உணவையும் காலைக்கும் மதியத்துக்குமான பிற்பகல் வேளையில் சாப்பிடுவர். அடுத்தது, மாலை நேரங்களில் டீ, போண்டா, பஜ்ஜி சாப்பிடுவது, நள்ளிரவில் அடுத்த வேளை உணவு எனத் தொடர்கிறது.

இதுபோன்ற உணவுப்பழக்கம் எல்லோருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், 30 வயதைத் தாண்டியவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம். வாழ்வியல் நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற உணவுப்பழக்கங்களே திறவுகோலாக இருக்கின்றன. எனவே, இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரிவிகித உணவு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நேரத்துக்குச் சாப்பிடுவதை மிகச்சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவின் மீதான அலட்சியம், இன்றைய இளைய தலைமுறை பெண்கள் மத்தியிலும் இருக்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் உணவில் போதிய கவனம் செலுத்துகிறார்கள் என்றே சொல்லலாம். 

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

இன்றைக்குப் பல டயட் முறைகள் பிரபலமாகி வருகின்றன. ஆனால், எல்லா டயட்களையும்விடச் சிறந்தது, சரிவிகித உணவு மட்டுமே. அடுத்ததாக உடற்பயிற்சி. அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன்மூலம் வாழ்வியல் பாதிப்புகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். தினமும் அதிக உடலுழைப்பு உள்ள உடற்பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. காலை நேரத்தில் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும். 

ஆண்களில் பலருக்கு இன்றைக்குத் தொப்பையும் உடல்பருமனும் பெரும்பிரச்னையாக இருக்கின்றன. நான்கில் மூன்று ஆண்கள் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அவர்களுக்கு, அடிவயிற்றுப் பகுதிக்கான பயிற்சிகள் கட்டாயம் தேவை. பொதுவாகவே அனைத்து ஆண்களும் வருடத்துக்கு ஒருமுறை `மாஸ்டர் ஹெல்த் செக்-அப்' செய்துகொள்ள வேண்டும். `ஹெல்த் செக்-அப்'  செய்ய முடியாதவர்கள் ரத்தச்சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, இ.சி.ஜி போன்றவற்றை மட்டுமாவது செய்துகொள்ள வேண்டும். 

பணியிடத்திலோ, வீட்டிலோ மனஅழுத்தம் நிறைந்த சூழல் இருந்தால் 30 வயதுக்குப் பிறகு, வருடத்துக்கு ஒருமுறை இ.சி.ஜி செய்ய வேண்டியது அவசியம். மனஅழுத்தத்தை எதிர்கொள்ளத் திணறும்போது, பல ஆண்கள் மனநல மருத்துவரை அணுகத் தயங்குவார்கள். தயக்கத்தை உதறிவிட்டு, மருத்துவரை அணுகுங்கள். மனநலமும் உடல்நலனின் ஓர் அங்கம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், `பி.எஸ்.ஏ' (PSA - Prostate-specific antigen) எனப்படும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனையை வருடத்துக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அவர்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

உடல் பருமனாக இருக்கும் ஆண்கள் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். பெண்களைவிட ஆண்களுக்கு ரத்தஅழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், 6 மாதத்துக்கு ஒருமுறை ரத்தஅழுத்தப் பரிசோதனைகள் செய்வது நல்லது. இன்றைய சூழலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக, அறையின் உள்ளே அமர்ந்துகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வைட்டமின் சி, டி, பி 12 போன்ற குறைபாடுகள் வரலாம் என்பதால், அதற்கான பரிசோதனைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

ஆண்களில் பலருக்கு வெளியிடங்களில் சாப்பிடும் பழக்கம் அதிகமிருக்கும் என்பதால், சிறுநீரகக்கல் உண்டாகவோ, வாய்வுத் தொந்தரவுகள் ஏற்படவோ வாய்ப்புண்டு. எனவே, அவர்களெல்லாம் கட்டாயம் `அல்ட்ரா சவுண்ட் அப்டமன்' (Ultrasound abdomen Test) பரிசோதனையை வருடத்துக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைகள் இருந்தால் அடிக்கடி அடிவயிற்றில் வலி, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. எந்தப் பிரச்னையையும் முதல் நிலையிலேயே கண்டறிந்தால், அதைச் சரிசெய்வது எளிது. அறிகுறிகள் எதுவும் தென்பட்டால், அதை உதாசீனப்படுத்தாதீர்கள். ஆண்களுக்கு மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருக்குமென்பதால், இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, வருடத்துக்கு ஒருமுறை ட்ரெட் மில் பரிசோதனை செய்து தங்களது இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்! #MensHealthWeek

வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்புகள், ரத்தஅழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் எத்தகைய சூழலிலும் மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கக் கூடாது. மேலும், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால் அதைக் கைவிட வேண்டியது அவசியம். உடலில் சேரும் நச்சுகளை நீக்கத் தண்ணீர் சிறந்த மருந்தாகும். ஆனால், பல ஆண்கள், போதிய அளவு தண்ணீர் குடிப்பதில்லை. நம் உடலுக்குத் தண்ணீர் அவசியம் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். 

பெரும்பாலான ஆண்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் செலுத்தும் கவனத்தை, தங்களது ஆரோக்கியத்தில் செலுத்துவதில்லை. உங்களது ஆரோக்கியம்தான், குடும்பத்தின் மகிழ்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதை நீங்கள் உதாசீனப்படுத்தினால், உங்கள் குடும்பத்தையே உதாசீனப்படுத்துவதற்குச் சமம். எனவே, உங்களுக்கான நேரத்தை, இனியாவது ஒதுக்குங்கள்" என்கிறார் அர்ஷத் அகில்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு