Published:Updated:

`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்
`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

உடல் பருமன் மற்றும்  பற்களில் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆய்வொன்றை சென்னை தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 40 வயதைத் தாண்டிய 500 பேர் கண்காணிக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பல் பொருத்தியவர்களைத் தவிர, பல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சைபெற்றவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். பல்லில் தீவிரமான நோய்த் தொற்றுப் பிரச்னைகளால் பாதிக்கப்படாதவர்கள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள் போன்ற வாழ்வியல் பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வயது மற்றும் எடையின் அடிப்படையில் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 260 பேர் பெண்கள், 240 பேர் ஆண்கள். பெண்களைப் பொறுத்தவரை, 133 பேர் உடற்பருமனுடனும் ஆண்களில் 73 பேர் உடற்பருமனுடனும் இருந்தனர். அதன் அடிப்படையில், பற்களில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அல்லது பற்களை இழந்தவர்களுக்கு பி.எம்.ஐ மாற்றம் ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கத்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், வயதுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதையும் பரிசோதித்துள்ளனர் ஆய்வாளர்கள். ஆனால், அப்படியான தொடர்பு எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பொருளாதாரப் பின்புலம், புகைப்பழக்க அளவீடுகள் போன்ற அனைத்துமே கருத்தில் கொள்ளப்பட்டது. அந்த வகையில், உடல் பருமனான பெண்களில் 70 சதவிகிதத்தினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு, ஜர்னல் ஆஃப் பார்மசி மற்றும் பயோஅலைடு சயின்ஸ் (Journal of Pharmacy and Bioallied Sciences) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

`பல் போனால், உடல் எடை கூடும்!' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்

முடிவுகுறித்து ஆய்வாளர்கள் தரப்பில் கூறும்போது, ``உடல் பருமன் அதிகரிப்புக்கும் பல் இழப்புக்கும் நிச்சயமாகத் தொடர்புள்ளது. ஆனால், அந்தத் தொடர்பு என்னவென இப்போதைக்கு எங்களால் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொருவரின் உணவுப் பழக்கவழக்கம்தான் இதன் பின்னணியாக இருக்குமென நாங்கள் நினைக்கிறோம். 500 பேருக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வு, விரைவில் விரிவாக்கப்படும். அப்போது, காரணங்கள் யாவும் தெளிவாகத் தெரிந்துவிடும்'' என்று தெரிவித்துள்ளனர். 

Vikatan