Election bannerElection banner
Published:Updated:

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்

மூளைக்காய்ச்சல் நோய், கடந்த ஜனவரி மாதம் முதல் பீகார் மாநிலத்தில் குழந்தைகளை மிகவும் பாதித்துவருகிறது. இந்நோய் தாக்கியதால், கடந்த மாதம் வரை 11 குழந்தைகள் இறந்துள்ளார்கள். ஆனால், இந்த மாதத்தில் திடீரென இந்த எண்ணிக்கை அதிகரித்து, 130 -ஐத் தாண்டியிருக்கிறது. மேலும், மூளைக்காய்ச்சல் நோய் தீவிரமடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்

பீகார் மாநிலத்தில், மத்திய மருத்துவ நிபுணர்கள் முகாமிட்டு ஆய்வுமேற்கொண்டனர். அப்போது, முசாஃபர்பூர் பகுதியில் ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ என்ற மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என்ற வேறொருவகையான மூளைக்காய்ச்சலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, மூளைக்காய்ச்சல் அதிகமாகப் பரவும் முசாஃபர்பூர் மாவட்டத்தில், லிச்சி பழத் தோட்டங்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த லிச்சி பழங்கள்தான் பீகாரில் மூளைக்காய்ச்சல் பரவக் காரணம் என்று கூறப்பட்டது. அதாவது, லிச்சி பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது, அதிலுள்ள `மெத்தலின் சைக்ளோபுரோபைல் கிளைசின்' (Methylene cyclopropyl glycine - MCPG) என்ற நச்சுப்பொருள் உடலில் சேரும். அது, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் பரவின. 

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்

இந்நிலையில், தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர், மருத்துவர் விஷால் நாத் இத்தகவலை மறுத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது...

“லிச்சி பழத்தில் எந்தவித நச்சுத்தன்மையும் மூளை அழற்சி பொருள்களும் இல்லை. ஆனால், சம்பந்தமே இல்லாமல் லிச்சி பழத்துடன் மூளைக்காய்ச்சல் நோயை தொடர்புபடுத்திவிட்டார்கள். முசாஃபர்பூர் பகுதியில் விளையும் லிச்சி பழங்கள்தான் இந்தியா முழுவதும் அனுப்பிவைக்கப்படுகின்றன. அங்கெல்லாம் மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் இங்கு மட்டும் வருகிறது என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவேண்டியது அவசியமாகிறது. 

லிச்சி பழத்தில் வைட்டமின் பி, இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. நான் 11 ஆண்டுகளாக லிச்சி பழங்களை ஆராய்ச்சி செய்துவருகிறேன். அந்தப் பழத்தில் இதுவரை எந்தவொரு பக்கவிளைவை ஏற்படுத்தும் காரணிகளையும் நான் கண்டதில்லை. இரவு உணவை உண்ணாமல் லிச்சி பழங்களை அதிகம் உண்டதால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது என்கிறார்கள். லிச்சி மட்டுமல்ல மாம்பழம், கொய்யா உள்ளிட்ட அமிலத்தன்மை வாய்ந்த பழங்களை வெறும் வயிற்றில் அதிகம் சாப்பிட்டாலே அசாதாரணமாக உணர்வோம். ஆனால், இது மரணத்தை ஏற்படுத்தாது.  

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்

`மெத்தலின் சைக்ளோபுரோபைல் கிளைசின்' எனும் நச்சுப்பொருள் லிச்சி பழத்தின் விதையில் இருக்கிறதே தவிர, பழத்தில் கிடையாது. அத்துடன், லிச்சி பழத்தின் விதையை யாரும் உட்கொள்ள மாட்டார்கள். மரணத்தை ஏற்படுத்தும் அந்த விதையைக் குழந்தைகள் உட்கொள்ளவும் வாய்ப்பில்லை. இந்த மூளைக்காய்ச்சல் நோய், ஜனவரி மாதத்திலிருந்தே குழந்தைகளைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில், லிச்சி பழம் அறுவடைக் காலம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.  ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் லிச்சி பழத்தைச் சாப்பிட்டதால், அவர்கள் எளிதாக மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார்கள் எனும் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. 

லிச்சி பழம் சாப்பிட்டால் மூளைக்காய்ச்சல் வராது - தேசிய லிச்சி பழ ஆராய்ச்சி மைய இயக்குநர்

இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். குழந்தைகளின் உயிரைக் காவுவாங்கும் மூளைக் காய்ச்சலுக்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் அரசு முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும். இல்லையென்றால், இந்நோய் உண்டாவதற்கான காரணத்தைக் கடைசிவரை நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்” என்றார்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு