Published:Updated:

விதிகள்... விதிவிலக்குகள்

விதிகள்... விதிவிலக்குகள்

விதிகள்... விதிவிலக்குகள்

விதிகள்... விதிவிலக்குகள்

Published:Updated:
விதிகள்... விதிவிலக்குகள்

ங்கெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றனவோ... அங்கெல்லாம் விதிவிலக்குகளும் சேர்ந்தே இருக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளும் அப்படித்தான். நாம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டதாலேயே, க்ளைம் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. 'சில நேரம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவு செய்ய முடியாது, சில சமயம் குறிப்பிட்ட வியாதிக்கு சிகிச்சை எடுக்க முடியாது’ என்று பல விஷயங்கள் இதில் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

எப்போது க்ளைம் பெறலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதிகள்... விதிவிலக்குகள்

பாலிசி எடுத்து இருந்தாலும் முதல் 30 நாட்களுக்குள் க்ளைம் பெற முடியாது. ஒருவேளை விபத்து நடந்து அதற்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுக்க வேண்டியது இருந்தால் மட்டுமே, க்ளைம் பெற்றுக்கொள்ளலாம். பாலிசி எடுத்து 30 நாட்களுக்கு மேல் ஆனாலும், ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு க்ளைம் வாங்க முடியாது. பாலிசியைப் பொறுத்து, வந்திருக்கும் நோயைப் பொறுத்து சில வருடங்களுக்குப் பிறகு க்ளைம் பெறலாம். சில நோய்களுக்கு, முதல் வருடத்தில் இலவச சிகிச்சை பெற முடியாது. சில நோய்களுக்கு, மூன்று வருடங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல க்ளைம் கிடைப்பது என்பது, காப்பீடு நிறுவனம் மற்றும் நோயைப் பொறுத்து மாறுபடும். அதனால்தான் மருத்துவக் காப்பீடு பாலிசிகளைத் தவறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஒருவேளை புதுப்பிக்க மறந்தால், மீண்டும் புது பாலிசிதான் எடுக்க வேண்டும். அப்போதும் இதேபோல எல்லா விதிமுறைகளும் இருக்கும்.

விதிகள்... விதிவிலக்குகள்!

நம்மிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறது என்பதற்காக சிறிய நோய்களுக்கு எல்லாம் க்ளைம் பெற முடியாது. உதாரணத்துக்கு, சாதாரண காய்ச்சல் சிகிச்சைக்காக க்ளைம் வாங்க முடியாது. அதாவது, மருத்துவமனைக்குச் சென்று வந்தாலே க்ளைம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மருத்துவக் காப்பீடு மூலம் க்ளைம் பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக சில நோய்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அவசியம் இல்லாமல் போகலாம். உதாரணமாக, கண் அறுவைச் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தச் சிகிச்சைகளுக்கு  க்ளைம் கிடைக்கும்.

மருத்துவமனைகளிலும் ஒரு பிரச்னை இருக்கிறது. காப்பீடு நிறுவனங்களின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் மருத்துவமனைகள் என்றால் பிரச்னை இல்லை. ஆனால், பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், 'சிகிச்சை பெற்ற இடம் மருத்துவமனைதான்’ என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும், கிளினிக்குகளில் சிகிச்சை எடுத்துவிட்டு க்ளைம் வாங்க முடியாது. குறிப்பிட்ட அளவு படுக்கைகள் இருந்தால் மட்டுமே அவற்றை மருத்துவமனைகள் என்று காப்பீடு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

உட்பிரிவுகள்!

நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்து இருப்பீர்கள். 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களின் மொத்த பில் தொகையும் ஒரு லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கிறது என்றாலும், நீங்கள் செலவு செய்த தொகை முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதற்குக் காரணம் சில உட்பிரிவுகள். அதாவது உங்களது பில் தொகையில், ரூம் வாடகை, பரிசோதனைச் செலவுகள் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டு இருக்கும்.

ஆனால், பாலிசி தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்தான் ரூம் வாடகைக்கு ஒதுக்கப்படும் (ஒரு நாளைக்கு). அதற்கு மேல் அதிக வசதிகொண்ட ரூம்களை எடுக்கும்போது மீதித் தொகைக்கு க்ளைம் கிடைக்காது.

இதேபோல, பாலிசித் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம்தான் ஆம்புலன்ஸ் செலவுக்கு ஒதுக்கி இருப்பார்கள். நோய் இருக்கிறதா; இல்லையா? என்பதைக் கண்டறிவதற்கு செய்யப்படும் சோதனைகளுக்கும் க்ளைம் கிடைக்காது. அதேநேரம், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தாலும் வீட்டில் இருந்து எடுத்துக்கொள்ளும் தொடர் சிகிச்சைக்கு க்ளைம் வாங்கிக்கொள்ளலாம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த முறையில், 60 நாட்களுக்கான செலவுத் தொகை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற முடியாது. வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டுமானால், அதற்கு வேறு பாலிசிகள் இருக்கின்றன. எதற்கும் பாலிசி எடுக்கும் முன்பு அதில் இருக்கும் சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டு எடுப்பது நல்லது.

'பயணக் காப்பீடு’ பற்றி முழுமையான தகவல்கள்...         - அடுத்த இதழில்...

க்ளைம் கிடையாது!

கீழ்க்காணும் நோய்களுக்கு நிரந்தரமாகவே க்ளைம் கிடைக்காது.

1. எய்ட்ஸ்

2. பல் சீரமைப்பு

3. காஸ்மெட்டிக் சர்ஜரி

4. மன நலம் சார்ந்த நோய்கள்

5. பிரசவம் (தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகளில் பிரசவத்துக்கு க்ளைம் கிடையாது. ஆனால், குரூப் பாலிசி எடுத்திருந்தால், பிரசவத்துக்கு க்ளைம் கிடைக்கும். மேலும், புதிதாகப் பிறக்கும் குழந்தையும் இந்த குரூப் பாலிசியில் தானாகவே சேர்க்கப்பட்டுவிடும்.)

6. அக்குபங்சர், மேக்னட்டோ தெரபி போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism