Published:Updated:

வீட்டுக்கு ஒரு வேங்கை!

வீட்டுக்கு ஒரு வேங்கை!

வீட்டுக்கு ஒரு வேங்கை!

வீட்டுக்கு ஒரு வேங்கை!

Published:Updated:
வீட்டுக்கு ஒரு வேங்கை!
வீட்டுக்கு ஒரு வேங்கை!

ல ஆலயங்களில் தல விருட்சமாக வேங்கை மரம் இருக்கும். மருத்துவக் குணங்களில் அசாத்திய ஆற்றல் படைத்த வேங்கை மரத்தை நலவிருட்சம் என்றாலும் தகும். உலகையே அச்சுறுத்தும் சர்க்கரை நோயை சரிக்கட்டவும், உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவும் இயற்கை அளித்த அபூர்வ வரம்... வேங்கை மரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாட்டி எடுக்கும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ சக்திகொண்ட மரம் இது.

''சுந்தரர் அருளிய தேவாரம் ஏழாம் திருமுறையில், திருநன்னிலம் சிவன் கோயிலைப் பற்றியும் அங்கு இருந்த வேங்கை மரங்களைப் பற்றியும் ஒரு பதிகம் பாடப்பட்டு இருக்கிறது. அதனால், இப்போது நாங்களே கோயிலில் வேங்கை மரத்தை வளர்க்கிறோம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வேங்கை மரப் பட்டைக் கஷாயம் ரொம்ப நல்ல மருந்து!'' என்கிறார் திருநன்னிலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.

வேங்கை மரத்தின் மூலிகைப் பயன் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் சிலிர்ப்போடு பேசினார். ''வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் (Pterosylebene) என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்து இருக்கிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் வேங்கைப் பட்டையை அரைத்துப் பொடியாக்கி சாப்பிடலாம்; அல்லது           4 டம்ளர் அளவு தண்ணீரில் வேங்கைப் பட்டைப் பொடியைக் கலந்து, ஒரு டம்ளர் அளவுக்கு அதைக் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகவும் குடிக்கலாம். சிறுநீரகம், கண், இதயம், நரம்பு போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் வேங்கைப் பட்டை சூரணம் மிகவும் நல்லது. களைப்பு, உடல் பலவீனத்தைப் போக்கி, உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கவல்லது. இதில் உள்ள துவர்ப்புத் தன்மை தோல் சுருக்கம் அடைதல், மூட்டுத் தேய்வு போன்ற வயோதிக மாற்றங்கள் வேகமாக நடைபெறாமல் மட்டுப்படுத்தும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை எண்ணெய்த் தயாரிப்பிலும் வேங்கைப் பட்டைக்குத் தனி இடம் உண்டு!'' என்கிறார் வியப்பாக.

சித்த மருத்துவர் அருண் சின்னையா, ''தொற்று நோய்களுக்கும் மகத்தான தீர்வாக இருக்கிறது வேங்கை மரம். எனவே, ஊருக்கு பத்து வேங்கை மரங்களாவது வளர்க்க வேண்டும். வேங்கைப் பட்டையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால், இதன் பட்டைக் கஷாயம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்பு சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்தும். இரும்புச் சத்தை அதிகரிக்கப் பயன்படுத்தும் மருந்துகளிலும் இந்தப் பட்டையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் வேங்கை மரப்பட்டையின் வீரியம் அதிகம். வேங்கைப் பட்டை, சீரகம், சோம்பு, மஞ்சள் கலந்து கொதிக்கவைத்த கஷாயத்தை ஒரு மாதத்துக்கு

வீட்டுக்கு ஒரு வேங்கை!

தினமும் அரை டம்ளர் என்ற அளவில் குடித்துவந்தால், தேமல், கருந்தேமல், படை, சொறி, படர்தாமரை, கட்டி போன்ற சரும நோய்களும் குணமாகும். வேங்கைப் பட்டை, மருதம் பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், ஆவாரம் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ, கடுக்காய் பூ, மகிழம்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் கலந்து அரைத்து பொடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமையால் உண்டாகக் கூடிய சருமத் தடிப்புகளுக்கும் வேங்கைப் பட்டைக் கஷாயம் நல்ல மருந்து.

உடல் முழுவதும் கொழுப்புக் கட்டிகள் உருவாகி அவஸ்தைப்படுபவர்களுக்கு நவீன மருத்துவ முறைப்படி அறுவைச் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். ஆனால், உடல் முழுக்க உருவாகி இருக்கும் இந்தக் கட்டிகளுக்கு எத்தனை இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இதற்கு சிறந்த தீர்வு வேங்கை மரத்தின் இலையும், பூவும். வேங்கை இலை, வேங்கைப் பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் தேவையான அளவு எடுத்து, வெந்நீரில் கரைத்து, உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும். வேங்கைப் பட்டையைத் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகப் பருகினால், சீதபேதி, உஷ்ணபேதி போன்றவை உடனே குணமாகும்'' என்கிறார் வேங்கையின் தூதுவராக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism