Published:Updated:

எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!

எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!

எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!

எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!

Published:Updated:
எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!
##~##

ழிக்கவே முடியாதபடி சில சம்பவங்கள் நம் மனதில் ஆழமாக ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒரு சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொந்த ஊரான ஆம்பூர் செல்வதற்கு டெல்லியில் இருந்து ஒரு குடும்பம் கிளம்பியது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரு ரயிலில் வந்து, அடுத்த சில மணி நேரத்தில் சென்னையில் இருந்து ஆம்பூருக்கு ஒரு ரயில்... என்று தெளிவான திட்டமிடலோடு டிக்கெட்டை ரிசர்வ் செய்து இருந்தனர். ஆனால், டெல்லியில் இருந்து ரயில் சில மணி நேரம் தாமதமாகவே சென்னை வந்துசேர்ந்தது. இதனால் ஏற்கெனவே, சென்னை - ஆம்பூர் செல்ல முன்பதிவு செய்திருந்த ரயில் கிளம்பிவிட்டது.

இதனால் பதற்றம் அடைந்த அந்த குடும்பத் தலைவர், முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கி அடுத்த ரயிலில் பயணம் செய்தார். ரயிலும் கிளம்பிவிட்டது. ஆனாலும், தவறவிட்ட ரயிலைப் பிடிக்க

எங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு!

முடியாத பதற்றம் காரணமாக அடுத்த சில நிமிடங்களில், அந்தக் குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு. சக பயணியான எனக்கு அப்போதுதான் மாரடைப்புக்கான பின்னணி புரிந்தது.  

அரக்கோணத்தில் அவரை ரயிலில் இருந்து இறக்கி ஆம்புலன்ஸில் கொண்டுசென்ற காட்சி இன்னும் என் மனதிலேயே இருக்கிறது.

மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்றாலும், பயணத்தின்போது உடல் நலப் பிரச்னைகளால் பதற்றம் பல மடங்கு கூடிப்போகும். உள்நாட்டுப் பயணத்திலேயே இவ்வளவு நெருக்கடி என்றால், வெளிநாட்டுப் பயணங்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆபத்துக்கு வாய்ப்புள்ள வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது பயணக் காப்பீடு (டிராவல் இன்ஷூரன்ஸ்) எடுத்துக்கொள்வது நல்லது.

ஏன் பயணக் காப்பீடு?

இந்தியாவில் எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த முடியாது. மேலும், இங்கிலாந்து, கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணக் காப்பீடு இல்லாமல் பயணம் செல்லவே முடியாது.

கிழக்கு ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும்போது பயணக் காப்பீடு கட்டாயம் கிடையாது என்றாலும், அந்த பாலிசியை எடுத்துகொள்வது நல்லது. காரணம், இந்தியாவைவிட வெளிநாடுகளில் மருத்துவச் செலவுகள் மிக அதிகம்.

எப்படி எடுப்பது?

ஹெல்த் பாலிசிபோலவே பயணக் காப்பீடுகளிலும் தனிநபர், ப்ளோட்டர் பாலிசிகள் இருக்கின்றன. பயணக் காப்பீட்டைப் பொறுத்த வரை, நாம் எத்தனை நாட்கள் பயணம் செய்கிறோமோ... அந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பயணக் காப்பீடு பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். அடிக்கடி வெளிநாடு செல்பவராக இருக்கும்பட்சத்தில் 'மல்ட்டி டிரிப்’ பாலிசிகளை எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக 6 மாதக் குழந்தை முதல் 70 வயதுப் பெரியவர்கள் வரை மருத்துவப் பரிசோதனை இன்றி பயணக் காப்பீடு பாலிசிகள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், 70 வயதைத் தாண்டியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்.

உரிமத் தொகையை வாங்குவது எப்படி?

நாம் பாலிசி எடுத்து இருக்கும் நிறுவனத்தின் டி.பி.ஏ. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். நாம் வெளிநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பு டி.பி.ஏ. எண்ணைக் குறித்துவைத்துக்கொள்வது நல்லது. அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் அவர்களைத் தொடர்புகொண்டு உரிமத் தொகையை வாங்கிக்கொள்ளலாம்.  கேஷ்லெஸ் (Cash less)  வசதி இங்கேயும் இருக்கிறது.

பிரீமியம் எவ்வளவு?

நாம் சுற்றுலா செல்லும் நாடுகளைப் பொறுத்து பிரீமியமும் வேறுபடும். காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து இந்த பிரீமியத்தில் மாற்றம் இருக்கும். குறைவான பிரீமியத்தில் அதிக அளவிலான பலன்கள் கொடுக்கும் பயணக் காப்பீடு பாலிசி எடுத்துக்கொள்வது மகிழ்ச்சி நிறைந்த பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

- அடுத்த இதழில்

 மருத்துவச் செலவுக்கு மட்டும் அல்ல!

நாம் செலுத்தும் பிரீமியம் மருத்துவச் செலவுகளுக்கு மட்டுமானது அல்ல; வேறு பல சலுகைகளையும் உள்ளடக்கியது. விமானம் காலதாமதமாக வருதல், பாஸ்போர்ட் - உடைமைகள் தொலைந்துபோதல், விபத்து, விபத்தின் காரணமாக ஏற்படும் மரணம், ஆம்புலன்ஸ் கட்டணம் போன்ற பல்வேறு இக்கட்டுகளில் இருந்தும் பயணக் காப்பீடு நிவாரணம் அளிக்கும். பாலிசி எடுப்பதற்கு முன்பே இந்த விபரங்களைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism