Published:Updated:

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

Published:Updated:
மருத மரம்... இதயத்துக்கு வரம்!
##~##

''தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற தல விருட்சம் மருத மரம்! பக்தர்களின் சகல துன்பங்களையும் நீக்கி, எப்பிணியும் வராமல் காக்கும் மருத்துவக் குணம்கொண்ட மரம்!'' - நம்ம ஊர் மருதமலை முருகனில் ஆரம்பித்து மகாபாரத கிருஷ்ணன் வரையிலும் புராணங்கள் எங்கும் மருத மரத்தின் மகத்துவம் பிரபலம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத மரத்தின் பெயரால், திருநெல்வேலி மாவட்டத்தில் மருதூர் என்ற பெயரில், ஓர் ஊரே இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த செல்வம், 'ஒரு பெரிய மருத மரம் வெடிச்சு அதுக்குள்ள இருந்து சுயம்புவா வெளிய வந்த லிங்கம்தான் இந்த ஊர்ல குடிகொண்ட சிவபெருமான். அதனால்தான் அவருக்கு மருதீஸ்வரர்னு பெயரே வந்துச்சு. இந்த மருத மரத்துக்கு நிறைய மருத்துவக் குணம் இருக்கு. இதன்

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

இலை, பட்டை, பழம், விதை என எல்லாமே பயன் தருபவை. இதன் பட்டையைக் கஷாயம் வச்சுக் குடிச்சா, எந்த நோயுமே பக்கத்துல வராதுன்னு சொல்வாங்க'' என்றார் பெருமையாக.

மருத மரத்தின் மருத்துவக் குணம் குறித்து சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் பேசினோம். ''இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில், முக்கியமானது மருத மரம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது நிகரில்லாத மருந்து. வட இந்தியாவில் மருதம் பட்டைச் சூரணம் மிகவும் பிரபலம். பல நூற்றாண்டுகளாக இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள 'அர்ஜுனின்’(Arjunin) என்கிற வேதிப் பொருள் பயன்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். இதில், 'லிப்பிட் பெர்ஆக்சிடேஷன்’ (Lipid peroxidation)  நிறைந்து உள்ளதால் ரத்தம் உறைதலைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் மருத மரப் பட்டைக்கு உண்டு. ஆங்கில மருத்துவப்படி மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாலும் இதைத் துணை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை (தலா மூன்று) மென்று விழுங்கினால், உடனடியாகக் குணமாகும். இலை, பூ, காய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொதிக்கவைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும். இலையை அரைத்துப் பாலில் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால், பித்த வெடிப்புகள் நீங்கும். இதன் பழத்தை நீராவியில் வேகவைத்து, பிசைந்து புண்களில்வைத்துக் கட்டினால், புண்கள் விரைவில் ஆறும்.

மருதம் பட்டையைப் பொடித்து, இரண்டு கிராம் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மூட்டு வலி குறையும்.

மருதம் பட்டைக் கஷாயம் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோய் - ரத்தக் கொதிப்பு இவை இரண்டும் ஒருசேர ஒருவரைப் பாதித்து இருந்தால், அவருக்குப் பக்கவாதம்

மருத மரம்... இதயத்துக்கு வரம்!

வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், மருதம் பட்டைக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவந்தால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். சிறுநீரகப் பிரச்னைகள் விலகவும் சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகரிக்கவும் இந்தக் கஷாயத்தைத் தினமும் 120 மி.லி. அளவு தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவர வேண்டும்.

அந்தக் காலத்தில், உடலை உரமாக்கும் காய கல்ப மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பல் வலி தீர இந்தப் பட்டையைப் பொடியாக்கிப் பயன்படுத்தலாம். 'அஸ்ட்ரின்ஜென்ட்’ (Astringent) என்கிற துவர்ப்புத்தன்மைகொண்ட ரசாயனப் பொருள் இந்தப் பட்டையில் அதிகம் இருப்பதால் இதனைக் கஷாயமாகத் தயார் செய்து புண்களைக் கழுவினால், அவை விரைவில் குணமடையும். வயிற்றுப்போக்கு குணமாக இந்தக் கஷாயத்தை 120-மி.லி குடித்தால் போதும். பித்தம், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு, சரும நோய்கள் போன்றவற்றுக்கும் மருதம் பட்டைக் கஷாயம் சிறந்த மருந்து.

ஒரு லிட்டர் தண்ணீரில், 200 கிராம் மருதம் பட்டையைச் சேர்த்து 120 மில்லியாகும் வரை முதல் நாளே சுண்டக் காய்ச்சிவைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதோடு, மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்த்துவிட முடியும்'' எனப் பெரிய பட்டியலே போடுகிறார் வேலாயுதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism