மின்னணுப் பொருட்களைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களின் விலையும் கூடிக்கொண்டேபோகிறது. மருத்துவச் செலவுகள் வருடத்துக்கு 15 சதவிகிதம் அளவுக்கு அதிகரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தச் சூழ்நிலையில் மருத்துவக் காப்பீடும்கூட சில சமயங்களில் போதுமானதாக இல்லை.

நண்பர் ஒருவர், மூன்று லட்ச ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்திருந்தார். மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்த காரணத்தால், எளிதாக சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். ஆனால், ஒரு வார சிகிச்சைக்கு ரூ. 2.5 லட்சம் வரை செலவாகிவிட்டது. 'பட்ட காலிலேயே படும்’ என்பதுபோல அடுத்த சில மாதங்களில் பள்ளியில் படிக்கும் அவரது மகன் 'டூ வீலர்’ கற்றுக்கொள்ளும்போது கீழே விழுந்து, தலை, இடது கை மற்றும் இடது காலில் பலத்தக் காயம். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் சிகிச்சை, மருத்துவமனைச் செலவுகள் எனச் சுமார் ஒரு லட்சம் செலவாகிவிட்டது.

ஏற்கெனவே மருத்துவக் காப்பீட்டில் 2.5 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டதால் மீதம் ரூ. 50,000 மட்டும் காப்பீடு நிறுவனம் மூலம் க்ளைம் கிடைத்தது. எனவே, மகனின் சிகிச்சைக்காகக் கையில் இருந்த பணத்தைப் போட்டுத்தான் செலவு செய்ய வேண்டி இருந்தது.

இந்தச் சூழ்நிலைகளில் நமக்கு இரண்டு விஷயங்கள் தோன்றும். முதலாவது 'எல்லாம் விதி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும்’. இரண்டாவது, 'அடுத்த முறைக் கூடுதலான தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்’.

கூடுதல் தொகைக்குப் பாலிசி எடுக்கலாம். ஆனால், ப்ரீமியம் அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு, மூன்று லட்ச ரூபாய்க்கு, பாலிசிக்கு (ஃப்ளோட்டர் - கணவன் மற்றும் மனைவி ஒரு குழந்தை) ஆண்டுக்கு ரூ. 4,000 ப்ரீமியம் செலுத்திய நண்பர் ஐந்து லட்சம் ரூபாய் பாலிசி என்றால் ரூ. 8,000-க்கு மேல் ப்ரீமியமாக செலுத்த வேண்டி இருக்கும். அதாவது ப்ரீமியம் இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். இதைக் கருத்தில்கொண்டே 'டாப் அப்’ பாலிசிகளைக் காப்பீடு நிறுவனங்கள் கொண்டுவந்தன.

'டாப் அப்’ என்றால், ஏற்கெனவே எடுத்திருக்கும் பாலிசித் தொகையை அதிகப்படுத்த முடியாது. ஆனால், 'டாப் அப்’ பாலிசி மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆகும் செலவுகளை க்ளைம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்து, சிகிச்சைக்கு நான்கு லட்சம் ரூபாய் செலவானால், கூடுதலாக செலவான ஒரு லட்சத்தையும் 'டாப் அப்’ பாலிசியில் க்ளைம் செய்துகொள்ளலாம்.

பொதுவாக இதுபோன்ற 'டாப் அப்’ பாலிசிகளில் ப்ரீமியமும் மிகக் குறைவு. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

உதாரணத்துக்கு, முதல் இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் 'டாப் அப்’ பாலிசியில் க்ளைம் வாங்க முடியாது என்ற அடிப்படையில், ஐந்து லட்ச ரூபாய்க்கு 'டாப் அப்’ பாலிசி எடுத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு முறை சிகிச்சைக்கு ரூ. 1.5 லட்சம், அடுத்த முறை சிகிச்சைக்கு ஒரு லட்சம் என மொத்தம் ரூ. 2.5 லட்சம் செலவாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் சூழ்நிலையில், 'டாப் அப்’ பாலிசியின் மூலம் இரண்டு லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாக இருக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் க்ளைம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு க்ளைம் கிடைக்காது. 'ஒரே சமயத்தில் இரண்டு லட்ச ரூபாய்’ என்ற தொகையைத் தாண்டி இருந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். இப்படிப்பட்ட பிரச்னையையும் சரிசெய்யும் நோக்கில், 'சூப்பர் டாப் அப்’ பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இந்த 'சூப்பர் டாப் அப் பாலிசி’கள் விதிமுறைப்படி மொத்தத் தொகையான இரண்டு லட்சம் ரூபாய் என்ற எல்லையைத் தாண்ட வேண்டுமேத் தவிர, ஒரே சிகிச்சையில் தாண்டியாக வேண்டிய தேவை இல்லை.

தேவை இருப்பவர்கள் இதையும் யோசிக்கலாம்!

- அடுத்த இதழில்