Published:Updated:

''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''

அக்குபஞ்சர் அதிசயங்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ருந்து மாத்திரைகள் இன்றி உடலில் உள்ள உயிர்ச் சக்தியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு குணம் அளிக்கும் மாற்று மருத்துவ முறைகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதில், முக்கிய இடத்தில் இருப்பது அக்குபஞ்சர். தொடு சிகிச்சைமுறையைக்கொண்ட இந்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக நாள்பட்ட நோய்களுக்கு.   

ஊசியைப் பயன்படுத்தாமல், வெறும் தொடுதல் மூலம் சிகிச்சை அளித்து வரும் அக்குபஞ்சர் டாக்டர் க.தனசேகரன் விரிவாகப் பேசிய விஷயங்கள் அப்படியே இங்கே...

'உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மருத்துவ முறை அக்குபஞ்சர். எனவே, இது மாயமந்திரம் இல்லை; முழுமையான அறிவியல். அக்குபஞ்சர் என்ற லத்தீன் வார்த்தை... அக்கியூட்டஸ், பஞ்சுரா

''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''

என்று பிரிக்கப்படும். இதற்கு குத்துதல் என்பதுடன், சரியான எண்ணத்தோடு தூண்டுதல் என்றும் பொருள். அக்குபஞ்சரில் நீடில், விரல் மூலம் தொடுதல் என்ற இரண்டின் மூலமும் தூண்ட முடியும்.

உலோகங்களின் காலம் என்பது கி.மு.200-ம் தான். ஆனால் அதற்கு முன்னதாகவே அக்குபஞ்சர் முறை உள்ளது. கி.மு. 1000த்துக்கு முற்பட்ட காலத்தை அக்குபஞ்சரின் பொற்காலம் என்று சீனர்கள் கூறுவார்கள். உலோகங்கள் பயன்பாடே இல்லாத அந்தக் காலத்தில் தொடுதல் மூலமே சிகிச்சை அளித்துள்ளனர்.

நீடிலைத் தவிர்த்து மேலும் பல முறைகளில் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது மோக்ஸா (விளிஙீகி) என்ற வத்தி போன்ற பொருள். இந்த வத்தியை எரியவைத்து, அந்த சூட்டை உடல் புள்ளிகளுக்கு அருகில் காட்டுவதன் மூலமும் தூண்ட முடியும். எலெக்ட்ரிக்கல் ஸ்டிமுலேட்டர், நீடிலிங் கன், கம்ப்யூட்டர் மெர்டியன் டயக்னோசர் என்று இப்போது நிறைய வந்துவிட்டன.

ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் ஆகியவை உடல், ரசாயன மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. அக்குபஞ்சரோ உடல், ரசாயன மாற்றத்திற்கு அடிப்படையான உயிர் சக்தி ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டறிந்து, மென்மையான தொடுதல் மூலம் சிகிச்சை அளிக்கிறது. உயிர் சக்தி புள்ளியைத் தூண்டுவதற்கு மென்மையான தொடுதலே போதுமானது. இதற்கு நாடியே பிரதானம்.

நம்முடைய உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. இதயம், சிறுகுடல், இதய மேல் உறை, மூவெப்ப

''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''

மண்டலம் ஆகியவை நெருப்பு மூலகம்.  மண்ணீரல், இரைப்பை ஆகியவை நிலம் மூலகம். நுரையீரல், பெருங்குடல் ஆகியவை காற்று மூலகம். சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகியவை நீர் மூலகம். கல்லீரல், பித்தப் பை ஆகியவை மரம் (ஆகாயம்) மூலகம்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனி சக்தி ஓட்டப் பாதை உண்டு. ஒவ்வொரு சக்தி ஓட்டப் பாதையிலும் பஞ்ச பூதப் புள்ளிகள் உள்ளன. இந்த பஞ்சபூதப் புள்ளிகள்தான் பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து உள் உறுப்புகளுக்கு சக்தியைக் கொடுக்கின்றன. அதனால், அந்த உள் உறுப்புகள் தங்களின் செயல்பாட்டுக்கு இந்தச் சக்தி ஓட்டத்தையே நம்பி உள்ளன. அதில் ஏற்படும் பாதிப்புகளால் சக்தி ஓட்டப் பாதையில் பிரச்னை வருகிறது. ஒவ்வொரு புள்ளியில் ஏற்படும் பாதிப்புக்கும் வெவ்வேறு விதமான பிரச்னைகள் வரும்.

நாடிப்பிடித்துப் பார்க்கும்போது இந்தப் பஞ்ச பூத புள்ளிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் உணரப்படும். இந்தச் சக்தி ஓட்டப் பாதையின் மினியேச்சர் கையிலேயே உள்ளது. அங்கு தொட்டு, இந்தப் பஞ்சபூதப் புள்ளிகளில் ஏற்பட்டுள்ள தடையை அந்தந்த புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் சரிசெய்யலாம் என்பதுதான் இந்தியஅக்குபஞ்சர் மருத்துவ முறை.

உடல் உறுப்பு பாதிப்புக்கு ஆளாகும்போது அதுபற்றிய முன்னெச்சரிக்கையை உடல் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் சுவையும் ஒன்று. ஒருவர் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்தே அவருக்கு உள்ள பாதிப்பையும் அறியலாம். புளிப்புச் சுவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்னை இருக்கும். கர்ப்பிணிகள் மாங்காய் போன்ற அதிக புளிப்பான உணவைச் சாப்பிடுவார்கள். உடலில் உள்ளக் கழிவுகளை அகற்றும் தொழிற்சாலை கல்லீரல். கர்ப்பிணிகளுக்கு அவர்கள் உடலின் கழிவுடன் சேர்த்து,  சிசுவின் கழிவையும் வெளியேற்றும்போது அதற்குக் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. இதன் அறிகுறியாகத்தான் புளிப்புச் சுவை மீது விருப்பம் தோன்றும்.

இப்படி நம்முடைய உடல் ஒவ்வொரு பாதிப்பைச் சந்திக்கும்போதும் வெவ்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை நாம் கவனிக்காமல் புறக்கணிக்கும்போதுதான் பெரிய பிரச்னையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. சிறுநீரகச் செயல் இழப்பு முதல் புற்றுநோய் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும் அக்குபஞ்சரில் தீர்வு உள்ளது. ஒரு நல்ல மருத்துவரை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் அக்குபஞ்சர் உங்கள் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வைத் தரும்!''

''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு