Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

'தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்; இல்லையின்னா, செத்துப்போயிட்டான்னு எடுத்துட்டுப் போய் புதைச்சுட்டு வந்துடுவானுங்க’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். 'எப்போதும் விழிப்பு உணர்வுடனேயே இருக்க வேண்டும்’ என்ற அர்த்தத்தில் சொல்லப்படும் அனுபவ மொழி இது. மற்றபடி நன்றாகத் தூங்கிய பிறகு, யாருக்கும் இதுபோன்று கால் அசைவு இருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது காலை ஆட்டிக்கொண்டே இருப்பது, தூங்கும்போதும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுகமாக அசைத்தபடியே தூங்கிப்போவது என்பது சாதாரணமாகப் பலருக்கும் இருக்கிற பழக்கம்தான். ஆனால், ஒரு சிலர் 'கால்களை அசைத்துக்கொண்டே படுத்தால்தான், எனக்கும் தூக்கம் வருகிறது. ஒரே நிலையில் படுத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்க முடிவது இல்லை. கால்களுக்கு உள்ளே ஏதோ பூச்சி ஊர்ந்துபோவதுபோல் குறுகுறுக்கிறது. சில சமயங்களில், கால்கள் தானாகவே இழுத்துக்கொண்டு மரத்துப்போய்விடுகிறது. இதனாலேயே பக்கத்தில் படுத்திருக்கும் என் மனைவிக்கும் தூக்கம் கெடுகிறது டாக்டர்’ என்று வருத்தப்படுவார்கள். இன்னும் சிலர் 'என் கால் என்னவோ பண்ணுது. அதை என்னவென்று விவரித்துச் சொல்லக்கூட எனக்குத் தெரியவில்லை’ எனத் திணறுவார்கள். இந்தப் பிரச்னையை 'ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம்’ (Restless Leg Syndrome) என்போம்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

நம் மூளையில் சுரக்கும் 'டோபமைன்’ என்ற சுரப்பி சரிவர வேலை செய்யாதபோது, இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். இவர்கள் இரவு முழுவதும் காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்குவார்கள். கால் அசைவு என்பதும் ஒரே ரிதமாக இல்லாமல், திடீர் திடீரென எட்டி உதைப்பது போன்ற முரட்டு அசைவுகளாக இருப்பதால், பக்கத்தில் படுத்திருப்பவரின் நிலைமையும் படு திண்டாட்டமாகிவிடும். இப்படி இரவு முழுக்க கால் ஆட்டிக்கொண்டே இருப்பதால், காலையில் எழுந்ததும் புத்துணர்வுக்குப் பதிலாக உடல் களைப்புதான் அதிகமாக இருக்கும். மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டவரைப் போல, கால்கள் சோர்ந்து அவதிப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இதுபோன்று கால்கள் இழுத்துக்கொள்ளும் உணர்வு இருக்கும்; இதனால் தூக்கத்தின் அளவும் அவர்களுக்குக் குறைவாகவே இருக்கும். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாத சர்க்கரை நோயாளிகளுக்கும்  சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த 'ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம்’ ஏற்படும் வாய்ப்பு அதிகம். தவிர முதுகு வலி - கால் வலி உள்ளவர்கள், ரத்த சோகை போன்ற இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வரலாம்.

எனவே, 'இரவில் நிம்மதியானத் தூக்கம் இல்லை; கால்கள் மரத்துப்போகிறது, இழுத்துக்கொள்கிறது’ போன்ற குறையோடு வருபவர்களுக்கு சர்க்கரை, ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதைத்தான் முதலில் பரிசோதிப்போம். அப்படி இருந்தால், அவற்றைச் சரி செய்துகொள்வதற்கான மருத்துவச் சிகிச்சைகளை ஆரம்பிப்போம். 'தூக்கத்தில் கால் ஆட்டும் பழக்கம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது’ என்பதைக் கண்டறிய 'பாலி சோம்னோகிராம்’ (Restless Leg Syndrome) எனப்படும் ஸ்லீப் டெஸ்ட் இருக்கிறது. பிரச்னையின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகள் அளிக்கப்படும்.

டோபமைன் சுரப்பு இல்லாததால் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்வதற்கு எனத் தனியாக மருந்து மாத்திரைகள் இருக்கின்றன. இவை டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், நாளடைவில் ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோமில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு நிம்மதியானத் தூக்கமும் கிடைக்கும்.

'தூக்கப் பிரச்னைக்கும் பெண்களுக்கும் அதிகத் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறதே.... உண்மையில் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தூக்கம் சார்ந்தப் பிரச்னைகள் அதிகம் இருக்கிறதா டாக்டர்?’ என்ற கேள்வி இப்போது உங்களுக்குள் எழலாம்.

உண்மைதான்... தூக்கம் விஷயத்தில், பெண்களுக்கு ஒருசில பிரச்னைகள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும், ஆண்களைப் போல் வெளிப்படையாக வந்து அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவது இல்லை என்பதால், இதுகுறித்த விஷயங்களும் வெளியில் தெரிவது இல்லை.

எனவே அடுத்த இதழில், பெண்களுக்கான தூக்கப் பிரச்னைகள் குறித்து விரிவாகவே பதில் சொல்கிறேன்...

- ஆராரோ ஆரிராரோ

 'ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம்’ தீர சில வழிகள்!

மாலை வேளையில், குளித்து முடித்து கால்களில் எண்ணெய், தைலம் போன்றவற்றைத் தடவி நன்றாக நீவிவிடலாம்; அல்லது மசாஜ் செய்துகொள்ளலாம். காபி, டீ போன்ற உற்சாகப் பானங்கள் அருந்துவதை எந்த அளவுக்குக் குறைத்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம்’ பிரச்னையும் குறைய வாய்ப்பு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism