Published:Updated:

நமக்கென ஒரு பாலிசி!

நமக்கென ஒரு பாலிசி!

நமக்கென ஒரு பாலிசி!

நமக்கென ஒரு பாலிசி!

Published:Updated:
##~##

கோ பே பாலிசியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மூத்தக் குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசி இது. 

இதில் விசேஷம் என்னவென்றால், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் செலவை எதிர்கொள்ளும்போது, அந்தச் செலவில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை மட்டும்தான் காப்பீட்டு நிறுவனம் தரும்; மீதியை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். உதாரணமாக, ரூ. 1,00,000 பில் என்றால், நீங்கள் ரூ. 30,000 செலுத்தினால், காப்பீட்டு நிறுவனம் ரூ. 70,000 மட்டும் செலுத்தும். அதேபோல, பாலிசி எடுக்கும்போது, உங்களுக்கு இருக்கும் நோய்கள் சார்ந்த பாதிப்புகள் என்றால், செலவுத் தொகையில் 50 சதவிகிதம்தான் கொடுப்பார்கள். மீதியை நீங்கள்தான் செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன் இப்படி?

நமக்கென ஒரு பாலிசி!

மருத்துவக் காப்பீட்டுத் துறையில் போலி க்ளைம்கள் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதே முக்கியமான காரணம். இந்தத் திட்டத்தில் நீங்களே ஒரு தொகையை மருத்துவமனைக்குக் கட்டும்போது அது உண்மையான செலவாகத்தானே இருக்க முடியும்? எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்!

ஆனால், மூத்த குடிமக்களுக்கும் இதில் லாபம் இருக்கிறது. மூத்த குடிமக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. மேலும் பிரீமியம் குறைவு. கிட்டத்தட்ட சாதாரணமான பாலிசியைவிட 40 சதவிகிதம் வரை இதில் பிரீமியம் குறைவு.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். 'எங்கள் அலுவலகத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. அதில் என் அப்பா, அம்மாவுக்கும் கவரேஜ் கிடைக்கிறது. இதற்கு மிகக் குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். மேலும் மொத்த க்ளைமும் எனக்குக் கிடைத்துவிடும். பிறகு ஏன், 'கோ பே’ பாலிசியை என் பெற்றோருக்கு எடுக்க வேண்டும்?’ என்று தோன்றலாம்.

நண்பர் ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் குரூப் பாலிசி எடுத்திருந்தார். திடீரென இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், புது வேலைக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டார். புது நிறுவனத்தில் அவர் வேலைக்குச் சேர ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தார்கள்.

ஒரு மாதம் ஓய்வாக இருக்கலாம் என்று சுற்றுலா கிளம்பிவிட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் அவரது அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட, மொத்தச் செலவையும் நண்பரே ஏற்க வேண்டியதாயிற்று.

இதுபோன்ற சமயங்களில்தான் 'நமக்கென்று ஒரு பாலிசி இருந்திருக்கலாமே’ என்று தோன்றும். எனவே, முதியவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த வகையான 'கோ-பே’ பாலிசிகளை நீங்களும் எடுக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism