Published:Updated:

விழா எடுக்கலாம் களாவுக்கு!

விழா எடுக்கலாம் களாவுக்கு!

விழா எடுக்கலாம் களாவுக்கு!

விழா எடுக்கலாம் களாவுக்கு!

Published:Updated:
விழா எடுக்கலாம் களாவுக்கு!
##~##

ருத்துவத் தொன்மை வாய்ந்த மரம் களா. இலை தொடங்கி வேர் வரை இந்த மரத்தின் அத்தனை பாகங்களுமே ஆரோக்கிய வங்கிகள்தான். களா மரத்தின் முந்தையத் தாவரவியல் பெயர்: கரைசா கராண்டஸ்(Carrissa Carrandus).தற்போது கரைசா கஞ்செஸ்டா          (Carrissa Congesta) என்கிறார்கள். கிளா, கிளாய் என்பன இதன் வேறு பெயர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது முட்புதர்க் காடுகளிலும் வேலி ஓரங்களிலும் வளரும். 10 முதல் 15  அடி உயரம் வரை வளரும். களாக் காய் பச்சை நிறமும் செந்நிறமும்கொண்டது. பழுத்த பின்பு கருமை நிறம் அடையும். இதன் இலை பட்டுப் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. களாக்காய் ஊறுகாய் சுவை மிகுந்தது. களாவின் பழத்தில் இருந்து ஒருவிதமான பிசுபிசுப்பான திரவம் வரும். இது ஜெல்லி மற்றும் ஜூஸ் வகைகள் தயாரிக்கப் பயன்படும். பழம் தோல் பதனிடவும், சாயம் ஏற்றவும் உதவும். களா மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சீப்பு, கரண்டி போன்றவை தயாரிக்கலாம். வேரினை அரைத்துப் பசையாக்கிப் பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தலாம்.

விழா எடுக்கலாம் களாவுக்கு!

களா மரத்தின் வேர் முதல் இலை வரையிலான மருத்துவ மகத்துவங்களை விவரிக்கிறார் திருச்செந்தூர் அரசு சித்த மருத்துவமனையின் உதவி மருத்துவர் க.செந்தாமரைச் செல்வி.

இலை: இலைகளை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாகும் வரை கொதிக்கவைத்துக் காலை, மாலை தினமும் குடித்துவந்தால், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், வாத நோய்கள், குறிப்பாக மூட்டுவாதம், பக்கவாதம், காது நோய்கள், கழிச்சல் மற்றும் பல் நோய்கள் தீரும்.

இலைகளை நீரில் இட்டுக் கொதிக்கவைத்து அதில் வாய் கொப்பளித்துவந்தால், பல் மற்றும் ஈறு நோய்கள் குணமாகும். இலைகளை உலர்த்திப் பொடி செய்து அரை கிராம் வீதம் நாள் ஒன்றுக்கு இரண்டு முறைகள் குழந்தைகளுக்குக் கொடுத்தால், இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கும். இலைப் பொடியினை அரை முதல் ஒரு கிராம் பசு வெண்ணெயில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட மூல நோய் தீரும்.

விழா எடுக்கலாம் களாவுக்கு!

பூ: கண் நோய்களைக் குணப்படுத்தும். பூவைக் கசக்கி, சாறு எடுத்து விடியற்காலையில் மூன்று துளிகள் வீதம் கண்ணில் விட்டுவந்தால், கண் படல நோய்கள் அனைத்தும் தீரும். கண்களில் பூ விழுந்திருந்தாலும் குணமாகும்.

காய்: மிளகாய்த் தூள், கறிமஞ்சள் தூள், உப்பு, பூண்டு, மிளகு, வெந்தயம் இவற்றைக் கலந்து, காயோடு பிசைந்து புளித்த மோரில் இட்டு வெயிலில்வைத்து நீர் சுண்டிய பிறகு கடுகு, நல்லெண்ணெய் விட்டுத் தாளித்து உணவுடன் உட்கொண்டால் நன்கு பசி ஏற்படும். உணவு எளிதில் செரிக்கும். புளித்த மோரில் உப்பு சேர்த்து ஊறவைத்தும் தயிருடன் சேர்த்துப் பச்சடி செய்தும் சாப்பிடலாம்.

பழம்: இரைப்பைக்கு வலு உண்டாக்கும். பசியைத் தூண்டும். பழத்தில் வைட்டமின் சி அதிகம். எனவே, வைட்டமின் சி குறைபாட்டால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களைக் குணப்படுத்தும். உடம்பு வலியை நீக்கி, உடலுக்குச் சக்தி உண்டாக்கும். மேலும் மூட்டு வலி, தொண்டை வலி, தலை பாரம், கழிச்சல் போன்றவையும் குணமாகும். பித்தத்தைக் குறைத்து உடல் வெப்பத்தையும் தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்.

பழத்தில் இரும்புச் சத்து உள்ளதால், ரத்தசோகை குணப்படும். பழச்சாற்றினால் புண்களைக் கழுவினால், உடனே ஆறும். அனைத்து விதமான தோல் நோய்களும் சரியாகும். பழச்சாற்றினைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைத் தடவினால், சொறி சிரங்கு, படர்தாமரை, மதுமேகப் புண்கள் போன்ற தோல் நோய்கள் குணமாகும். அதே சமயம், பழத்தை அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் வாயு பெருகும்.

வேர்: துவர்ப்புச் சுவை உடையது. வேரை உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை இரண்டு வேளை அரை முதல் ஒரு கிராம் அளவு உண்டுவந்தால், வயிற்று வலி தீரும். இதில் சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) மற்றும் கார்டியாக் க்ளைகோசைட்          (Cardiac glycoside) உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இந்தப் பொடியை இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

வேரை நீர்விட்டுக் காய்ச்சி 30 முதல் 45 மி.லி. இரண்டு வேளை கொடுத்துவந்தால், பிள்ளை பெற்றவுடன் உண்டாகும் சூதக அழுக்கு தீரும். சுருக்கமாகச் சொன்னால், களா மரம்... ஓர் இயற்கை மருந்துக் கடை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism