Published:Updated:

பள்ளிக்கும் பாலிசி!

பள்ளிக்கும் பாலிசி!

பள்ளிக்கும் பாலிசி!

பள்ளிக்கும் பாலிசி!

Published:Updated:
பள்ளிக்கும் பாலிசி!
##~##

காலையில் செய்தித்தாளைத் திறக்கவே பயமாக இருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக்கொள்வதுபற்றிய பகீர் செய்திகள் தினம் தினம் பயமுறுத்துகின்றன. இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையா அல்லது பெற்றோர்களின் குறைபாடா என்கிற ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், குழந்தைகளுக்கான பாதுகாப்பை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விபத்துகள் என்பவை தவிர்க்க முடியாதவை. ஆனால், விபத்துகளால் பொருளாதாரரீதியாக ஏற்படும் பிரச்னைகளைக் குறைப்பதில் காப்பீட்டுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அரசுப் பள்ளிக்கூடங்களோ,  தனியார் பள்ளி நிறுவனங்களோ... எதுவாக இருந்தாலும், எத்தனை பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் காப்பீடு செய்திருக்கின்றன?  

குழந்தைகளுக்குப் பள்ளிகள் சார்பில் வழங்கப்படும் காப்பீடுகுறித்து பஜாஜ் கேப்பிட்டலின் துணைத் தலைவர் ரவி சொல்கிறார்.

''பலரும் 'மரணம் மட்டும்தான் விபத்து’ என்றே நினைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும்

பள்ளிக்கும் பாலிசி!

சமயங்களில்கூட குழந்தைகள் கீழே விழலாம், மைதானத்தில் விளையாடும்போது அடிபடலாம்... இப்படிக் குழந்தைகளுக்கு விபத்து நேர்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்தச் சமயங்களில், பள்ளி நிர்வாகம்தான் செலவு செய்கிறது. சிறு சிறு தொகையாகச் செய்யும் செலவுகள் அவர்களுக்கு ஒரு பிரச்னையாகத் தெரிவதில்லை.ஆனால், மொத்தமாக ஒரு இன்ஷூரன்ஸ் எடுக்க அவர்கள் யோசிக்கிறார்கள். இதுபோன்ற பாலிசியை பள்ளிகள் எடுப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன.

பொதுவாக, மருத்துவக் காப்பீடுகளில் ஒருவருக்கு அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். பள்ளிகளுக்கான காப்பீடு எடுப்பதன் மூலம், குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுசிறு விபத்துகளுக்குக் கூட க்ளைம் பெற முடியும். விபத்து பள்ளியில் நடக்க வேண்டும் என்று இல்லை, உலகின் எந்த இடத்தில் நடந்தாலும் அந்தக் குழந்தைக்கு க்ளைம் பெற முடியும். மேலும், இதில் குழந்தையின் பெற்றோரில் ஒருவரையும் சேர்த்துக்கொள்ள முடியும். குழந்தையின் பெற்றோரில் சம்பாதிக்கும் நபராக இருக்கும் அம்மா அல்லது அப்பாவை இந்த காப்பீட்டில் சேர்த்துக்கொள்ள முடியும். இதனால், காப்பீடு செய்யப்பட்ட பெற்றோருக்கு விபத்தினால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது மரணம் அடைந்தாலோ குழந்தையின் கல்வி தடைபடாமல் தொடரும்; எதிர்பாராத விதமாக குழந்தை இறந்தால், பாலிசி தொகை கிடைக்கும். ஓர் ஆண்டில் எத்தனை முறை விபத்து நடந்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் க்ளைம் கொடுப்பார்கள். இந்த பாலிசியை பள்ளிகள்தான் எடுக்க முடியும். அதேபோல,  பள்ளிகள்தான் க்ளைம் வாங்க முடியும். 'ஒரு மாதத்தில் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இத்தனை விபத்துக்கள் நடந்தன, அதற்கான செலவு இவ்வளவு’ என்பதுபோன்ற பட்டியலைக் கொடுத்தால் க்ளைம் கிடைத்துவிடும்'' என்றார் விளக்கமாக.

நிச்சயம் இத்தகைய காப்பீட்டுத் திட்டங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையம். 'அனைத்துப் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும்’ என்று விதி கொண்டுவரப்பட்டால், அது நிச்சயம் பலரின் கண்ணீரைத் துடைக்கும்!

படம்:ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism