Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

ரு காலத்தில் மருத்துவர் பணியையும் ஓட்டுநர் பணியையும் கால நேரம் இல்லாத உத்தியோகங்கள் என்பார்கள். இதுவோ ஷிஃப்ட் யுகம். தொழிற்சாலைகளில் தொடங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை கால நேரம் இல்லாமல் இயங்குவது காலத்தின் கட்டாயம். ஒரு வாரம் காலை ஷிஃப்ட் என்று காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை பணிக்குச் செல்பவர்கள், அடுத்த வாரமே பகல் ஷிஃப்ட் என்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பணிக்குச் செல்ல வேண்டி இருக்கும்; மூன்றாவது வாரம் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு ஷிஃப்ட் பார்க்க வேண்டி இருக்கும். சில இடங்களில் இந்த ஷிஃப்ட்டுகளே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மாறும்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விமானத்தில் பயணம் செய்யாமலேயே நேரக் குளறுபடிப் பிரச்னையை (ஜெட்லாக்) ஏற்படுத்திவிடக்கூடியது இந்தப் பணிச் சூழல். இரவு முழுக்க விழித்திருந்து கடினமாக உழைத்தாலும்கூட, பகலில் நிம்மதியாகத் தூங்கி ஓய்வு எடுக்கும் சூழல் இவர்களில் பலருக்கும் இல்லை. காரணம், தூக்கத்தைக் கெடுக்கும் பகல் நேர பளிச் வெளிச்சம்... அதனைத் தொடர்ந்து உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் நேரக் குளறுபடிகள்; இவை தவிர நண்பர்கள் உரையாடல், செல்போன் அழைப்புகள் எனப் புறச் சூழல் குறுக்கீடுகளாலும் பகல் நேரத் தூக்கமானது பலருக்கும் துக்கமாகவே மாறிவிடுகிறது. குறைந்துபோகும் பகல் நேரத் தூக்கத்தினால் சோர்ந்துபோகும் உடல்நிலை, மறுபடியும் இரவில் பணி செய்வதற்கான உற்சாகத்தையும் இழந்துவிடுகிறது. இதே நிலை தொடரும்போது, 'சைக்கோ சோஷியல் ப்ராப்ளம்’(Psycho social problem) எனப்படும் உளவியல் பிரச்னை ஏற்படுகிறது. பகலில் வேலைக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பிக் குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழித்து, இரவில் நிம்மதியாகத் தூங்கி எழும் நண்பர்களின் சமூகச் சூழலோடு தங்களுடைய பணிச் சூழலை ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைகொள்ளும் மனநிலைதான் 'சைக்கோ சோஷியல் ப்ராப்ளம்’.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

'தினமும் நடு இரவில் விழித்திருந்து வேலை பார்க்கிறோம். வீட்டுக்கு வந்து அரைகுறையாகத் தூங்கி எழுகிறோம். பூங்கா, கடற்கரை, திரைப்படம் என்று வெளியே சென்று பொழுதுபோக்க முடியவில்லை. யாருடனும் மனம்விட்டுப் பேச நேரம் கிடைப்பதில்லை...’ என்பன போன்ற மன அழுத்தமும் தனிமை உணர்வும் இவர்களிடையே தலைதூக்கும். 'குடும்பச் சூழலில் இருந்து நாம் விலகிப் போகிறோமோ...’ என்கிற ஒருவிதமான பயமும் பதற்றமும் தோன்றும். செய்துவரும் வேலையின் மீதும் ஒருவித சலிப்பு உணர்வு தோன்றும். இவை எல்லாமே மனரீதியிலான பாதிப்புகள். இவை அல்லாமல், இளம் வயதிலேயே ரத்த அழுத்தத்தில் பிரச்னை, மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்ற உடல்ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இந்தப் பிரச்னை வழிவகுத்துவிடும். வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் இந்தப் பாதிப்புகளால் ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள் பெண்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வே இல்லையா?

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

கண்டிப்பாகத் தீர்வு உண்டு. அதற்காக மாத்திரை மருந்துகள் எல்லாம் சாப்பிட வேண்டியது இல்லை. வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்துகொண்டாலே போதும். அதாவது 'இரவில் விழிப்பு, பகலில் தூக்கம். இதுதான் இன்னும் சில வருடங்களுக்கு நம்முடைய வாழ்க்கை’ என்பது உறுதியாகிப்போனால், அதற்கேற்றபடி நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மைப் பொருத்தவரையில், இரவுதான் காலை நேரம். இரவில் எல்லோரும் கொஞ்சமாக சாப்பிட்டுத் தூங்கிவிடுவார்கள். ஆனால், நாம் அப்போதுதான் வேலைக்குச் சென்று கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம். எனவே, இரவுச் சாப்பாட்டை திருப்தியான அளவுக்கு நன்றாகச் சாப்பிட்டு முடித்து உற்சாகத்துடன் பணிக்குக் கிளம்ப வேண்டும். பணிச் சூழலில், இரவு 1 அல்லது இரண்டு மணி அளவில் மதிய சாப்பாட்டுக்கு இணையான ஆரோக்கிய உணவினைச் சாப்பிட்டாக வேண்டும்.

சாதாரணமாகப் பகல் நேர வேலை பார்ப்போர் பணி முடிந்து வீடு திரும்பியதும் இரவுச் சூழல் வந்துவிடுவதால், தானாகவே அவர்களது உடல்நிலையும் தூக்க நிலைக்குத் தயாராகிவிடும். ஆனால், இயற்கைக்கு மாறாக இரவில் விழித்திருந்து விடியும் வேளையில் வீடு திரும்புகிறவர்கள் நிம்மதியான தூக்கம் தூங்குவதற்கு வசதியாக சூழ்நிலையையும் உடல் நிலையையும் மாற்றிக்கொண்டால், எந்தத் தொந்தரவும் எட்டிப் பார்க்காது.

சரி, இரவு நேரம்தான் பணி என்று ஆகிவிட்டால் இப்படிச் சமாளிக்கலாம். மாறி மாறி ஷிஃப்ட் பார்ப்பவர்கள் தங்கள் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது? அடுத்த இதழில் சொல்கிறேன். அது வரை...

- ஆராரோ ஆரிராரோ...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism