Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

'இன்னைக்கு காலையில எட்டு மணியில் இருந்து மதியம் இரண்டு மணி வரைக்கும் நீங்க தூங்கி ஆகணும். நாளைக்கு மதியம் இரண்டு மணியில் இருந்து நைட் எட்டு மணி வரையிக்கும் தூங்கணும்’ என்றெல்லாம் நேரம் குறிப்பிட்டு யாரேனும் உங்களைக் கட்டாயப்படுத்தினால், உங்களுக்குத் தூக்கம் வருமா? பயம்தான் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆனால், நடைமுறையில் ஆலைத் தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், காவல் துறையினர் என அநேகம் பேர் தினம் தினம் இந்தத் திடீர் மாற்றங்களை அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக மருத்துவப் பணியில் இருக்கும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட பலரும்கூட இந்த 'ஷிஃப்ட் ஒர்க்’ முறை காரணமாக அடிக்கடித் தங்களது வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்தத் திடீர் மாற்றங்களை எளிதாக ஏற்றுக்கொள்பவர்களுக்குப் பிரச்னை ஏதும் இல்லை. 'சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள முடியும்’ என்ற மன உறுதியோடு இருப்பவர்கள் இவர்கள். அதாவது, உலக நடப்புகளை எல்லாம் உடனடியாக 'ஷட் டவுன்’ செய்துவிட்டுத் தூங்கிவிடுகிற திறமை படைத்தவர்கள். ஆனால், இந்த மாற்றங்களுக்குள் எல்லாம் தன்னைப் பொருத்திக்கொண்டு செயல்பட முடியாதவர்களுக்கு எல்லாமே தலைகீழாகிவிடும். தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வராது; விழித்திருக்க வேண்டிய நேரத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு வரும்.

இன்று காலைப் பணி, நாளை இரவுப் பணி, அடுத்த நாள் மாலைப் பணி என அனுதினமும் மாறிக்கொண்டே வரும் ஷிஃப்ட் ஒர்க் முறையில் இந்தப் பிரச்னைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இனிவரும் காலங்களிலும் இதுதான் நம் பணிச்சூழல் என்பது உறுதியானால், இவற்றை எளிதாக எதிர்கொள்ள சில வழிமுறைகளை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒரு ஷிஃப்ட் ஒர்க் என்றில்லாமல், தொடர்ச்சியாக ஒரு வாரம் வரையிலும் காலை ஷிஃப்ட்; அதற்கடுத்த வாரம் முழுவதும் மாலை ஷிஃப்ட் என வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சுழற்சி முறை ஷிஃப்ட் ஒர்க்கும்கூட காலை, மாலை, இரவு என்ற ஒழுங்கான வரிசை முறையிலேயே இருப்பது நல்லது.

ஷிஃப்ட் முறை மாறவிருக்கும் நாளில், வரப்போகிற ஷிஃப்ட் முறைக்கு ஏற்ப நமது உணவு முறை மற்றும் சூழ்நிலைகளையும் மாற்றிக்கொள்வது அவசியம். உதாரணமாக இன்றில் இருந்து இரவுப் பணிக்குச் செல்லவிருக்கும் சூழ்நிலையில், 'பரவாயில்லை.... நேற்று மாதிரியே இன்றைக்கும் இரவுச் சாப்பாட்டைக் குறைவாகவே எடுத்துக்கொள்வோம். நாளையில் இருந்து  திருப்தியாக சாப்பிட்டுக்கொள்ளலாம்’ என்பதுபோல் தள்ளிப்போடுவது பல்வேறு தொடர் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏற்கெனவே பல முறை கூறியதுபோல் காஃபி, டீ போன்ற உற்சாக பானங்கள் குடிப்பதையும் தூங்குவதற்கு நான்கு மணி நேரம் முன்பாகவே நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அது தூக்கமின்மை போன்ற குளறுபடிகளை ஏற்படுத்திவிடும்.

பொதுவாகக் காலை ஷிஃப்ட் பணியின்போது வீடு, நட்பு வட்டம், பொழுதுபோக்கு எனச் சமூகச் சூழலோடு இணைந்து நேரம் கழிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும். ஆனால், மாலை மற்றும் இரவுப் பணியின்போது இந்தச் சூழல்கள் பொருத்தமாக அமையாது. இந்த மாற்றங்களையும் மனதளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொண்டால் 'சைக்கோசோஷியல் ப்ராப்ளம்’ (Psychosocial problem) வருவதற்கான வாய்ப்பு இல்லை.

- ஆராரோ ஆரிராரோ

 இரவுப் பணியை எளிதாக ஏற்றுக்கொள்ள சில வழிமுறைகள்!

இரவுப் பணியின்போது ஜங்க் ஃபுட் உணவு வகைகளைச் சாப்பிடாதீர்கள். இது, பசியை மந்தப்படுத்துவதோடு உடல்நிலைப் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இரவு இரண்டு மணிக்கு மேல், காபி, டீ போன்ற உற்சாக பானங்களை அருந்தாதீர்கள். இவை மூளையின் விழிப்பு உணர்வைத் தூண்டச் செய்து உங்களது பகல் நேரத் தூக்கத்தைப் பாழாக்கிவிடும்.

இரவுப் பணி முடிந்து காலையில், பேருந்தில் வீடு திரும்புபவர்கள், இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கண்களின் மீது கைக்குட்டையை வைத்து மறைத்தபடி தூங்கிக்கொண்டே பயணிக்கலாம்.

இரவுப் பணி முடிந்ததும் காலையில் நீங்களே தனியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் பழக்கம் பாதுகாப்பானது அல்ல. எனவே, 'கார் பூலிங்’  (car pooling) முறையில், உங்களது நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து அலுவலகம் - வீட்டுக்குச் சென்றுவரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு, எரிபொருள் சிக்கனம் என்று பல நன்மைகள் இதில் உண்டு.

காலை உணவை இரவுச் சாப்பாட்டுக்கு இணையாகக் குறைந்த அளவிலேயே முடித்துக்கொள்ளுங்கள். மேலும், எளிதில் தூக்கம் வருவதற்கு ஏதுவாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். காலை உணவு சாப்பிட்ட பிறகு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் தூங்கச் சென்றுவிடுங்கள்.

தூங்கச் செல்வதற்கு முன்னதாக செல்போன் இயக்கத்தை நிறுத்திவிடவும். 'அடுத்த ஆறு மணி நேரத்துக்கு என்னை யாரும் எழுப்ப வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்லலாம். மதிய உணவுக்காக எழுந்திருப்பது தொடர்ச்சியான தூக்கத்தைப் பாதிக்கும். தூங்கும் அறையில் வெளிச்சம் உட்புகாதவாறு ஜன்னல் திரைச்சீலைகளை நன்றாக இழுத்து விட்டுக்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism