Published:Updated:

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!

Published:Updated:
##~##

காட்டாமணக்கின் பூர்வீகம் அமெரிக்கா. போர்ச்சுகீசியர்கள் இதை ஆசியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இயற்கை எரிபொருள் இதன் விதைகளில் இருந்தே எடுக்கப்படுகிறது. சோப்பு, மெழுகுவத்தி, புண்ணாக்கு போன்ற பொருட்களைச் செய்யவும் காட்டாமணக்கு உதவுகிறது. இந்தியாவின் வறண்ட பகுதிகள் அனைத்திலும் நன்கு வளரக் கூடியது. சிறிய வகை மரமான இது சுமார் 10 அடி உயரம் வரை வளரும். 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழ்நாள் கொண்டது. உயிர்வேலி அமைக்கச் சிறந்த மரம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. 

இதன் விஞ்ஞானப் பெயர் ஜட்ரோஃபா கர்கஸ்(Jatropha curcas).  ஜட்ரோஃபா என்றாலே 'மருந்து சாப்பிடுவது’ என்று லத்தீன் மொழியில் அர்த்தம். இதில் இருந்தே காட்டாமணக்கில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். காட்டாமணக்கில் இருக்கும் 'ஜெட்ரோப்ஃபைன்’ என்னும் வேதிப்பொருளுக்குப் பல மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொண்டி அரசு சித்த மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் சந்திரிகாவைச் சந்தித்து காட்டாமணக்கின் மருத்துவப் பயன்கள்குறித்துக் கேட்டோம்.

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!

''கடலாமணக்கு, ஆதளை, அதலை, காட்டுக்கொட்டை, வெள்ளைக் காட்டாமணக்கு ஆகிய பெயர்களும் காட்டாமணக்குக்கு உண்டு.

காட்டாமணக்கின் இலை, இளம்தண்டு, இளம் கிளைகள், பால், பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

இலை: இலையினால் மேகக்கட்டி, புண், வயிற்றுக்கட்டி, சிரங்கு, தலைவலி, வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், பால்வினை நோய்களையும் கட்டுப்படுத்தும். இலையுடன் கீழாநெல்லியைச் சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் உண்ண, மஞ்சள் காமாலை குணமாகும். இலையில் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறு சம்பந்தமான நோய்கள் குணமடையும். இலையை அரைத்துக் கொப்புளங்களின் மேல்வைத்துக் கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும். இலையை வதக்கி, பால் ஊட்டும் தாயின் மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு அதிகமாகும்.

இளம்தண்டு: இதனைக் கொண்டு பல் துலக்க, பல்வலி குணமாகும்.

இளம் கிளைகள்: காயங்களின் மீது அரைத்துப் பூசுவதால் ரத்தக் கசிவு நிற்கும். காயங்கள் விரைவில் ஆறும். நீர்க்கடுப்பைக் குணமாக்கும். பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

பால்: இலைக்காம்பு மற்றும் இளம் தண்டுகளில் இருந்து வெளிப்படும் பால் வெள்ளை, மேகக்கட்டி, வயிற்றுவலி ஆகியவற்றைக் குணமாக்கும். காயம்பட்டு ரத்தம் வெளிப்படும் இடத்தில் பாலைப் பூசுவதால் ரத்தம் நிற்கும். காயம் விரைவில் ஆறும். பூஞ்சைத் தொற்றால் வரும் வண்டுகடி எனப்படும் படர்தாமரை குணம் அடையும். புண்கள் மீது பாலை வெளிப்பூச்சாகப் பூச அவை குணமாகும். கீல்வாதத்துக்கு வெளிப்பூச்சாகப் பூச வீக்கமும் வலியும் குறையும்.

பட்டை: பட்டையை நீர் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கத் தொழுநோய் கட்டுப்படும்.

விதை: விதையை வறுத்து உண்டால் மலச் சிக்கல் தீரும். குழந்தைகளுக்கு இது ஏற்புடையது அல்ல. எனவே, குழந்தைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்: விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மற்ற தைலங்களுடன் சேர்த்துப் பூசத் தோல் நோய்களும் கீல்வாதமும் குணமாகும். பால் ஊட்டும் தாய்மார்களின் மார்பகங்களில் பூசினால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

வேர்: வேர்ப் பட்டையுடன் பெருங்காயமும் மோரும் சேர்த்துக் கொடுக்க செரியாமை, வயிற்றுப்போக்கு குணமாகும்.  பாம்புக்கடி நஞ்சுக்கு, நஞ்சு முறிவு மருந்தாகக் காட்டாமணக்கு வேர் செயல்படுகிறது.'

எண்ணெய் மட்டும் அல்ல... எல்லாம் தரும் காட்டாமணக்கு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism