Published:Updated:

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

Published:Updated:
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
##~##

''சிலர் கைகளையும் விரல்களையும் குறை சொல்ல முடியாதபடி சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் விரல் நகங்கள் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அழுக்காகவும் சொத்தையாகவும் நிறம் மற்றும் வடிவம் மாறியும் மற்றவர்களின் முகச்சுளிப்புக்கு ஆளாகும். எந்தச் சிகிச்சைக்காக மருத்துவரை நாடினாலும் அவர் நோயாளியின் நகங்களைத்தான் முதலில் கவனிப்பார்'' - சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் தோல் சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான கே.மனோகரன் நகச்சுத்தம்குறித்து விரிவாகப் பேசுகிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நகங்களால் என்ன என்ன தொற்று, எப்படி ஏற்படுகிறது?''

''தோல் சம்பந்தமான 10 சதவிகித வியாதிகள் வருவதற்கு ஆரோக்கியம் இல்லாத நகங்களே காரணம். முதியவர்கள்தான் நகச் சுத்தமின்மை பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால், நகத்தைச் சுற்றி வீங்குவது, சீழ் பிடிப்பது, நகம் தடித்துப்போவது, நகச்சுத்தி ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குறிப்பாகப் பாத்திரம் துலக்குவது, துவைப்பது என்று ஈரத்தோடு அதிகம் புழங்கும் இல்லத்தரசிகளின் நகங்கள் எளிதில் பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகின்றன. இயல்பான நிறம் மாறி இருப்பதும் தடித்துப்போய் இருப்பதும் நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். ரத்தம், சீழ் வடிவதும் நகம் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதற்கான அடையாளங்களே. நகத்தின் நிறம் மற்றும் வடிவம் மாறுவது, நகத்தைச் சுற்றி உள்ள சதையின் வீக்கம் ஆகியவை கிருமித்தொற்றின் வெளிப்பாடுகள்.

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நகம் கடிப்பது, விரல் சூப்புவது அல்லது அடிக்கடி தண்ணீரில் புழங்குவது மற்றும் காயம் போன்ற காரணங்களால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நகங்களைச் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படாது. ஈரமான நகங்களிலேயே நோய்த்தொற்று அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக நீளும் நகங்களை நறுக்கிவிடுவது நல்லது. குளித்து முடித்த பிறகு நகங்களை வெட்டுவது எளிதாக இருக்கும். விரல் நகங்களையும் அதன் அருகில் இருக்கும் சதையையும் கடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படிக் கடித்தால் வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும் நகத்தில் இருப்பவை வாய்க்குள்ளும் போக நேரிடும். நாக்குப்பூச்சித் தொற்றுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது அசுத்தமான நகங்கள்தான். எனவே, நகங்களை ஒட்ட வெட்டுவதும் அடிக்கடிச் சுத்தப்படுத்துவதும் அவசியம்.''

''சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடுகின்றனவே?''

''பரம்பரை, வேதிப்பொருட்களின் பயன்பாடு போன்றவையே இதற்குக் காரணம். பார்ப்பதற்கு அருவருப்பை எற்படுத்தும் விதமாக இவை இருக்கும். பாத்திரம் மற்றும் பெயின்ட் பிரஷ்களைக் கழுவும்போது கை உறைகளை அணியும் வழக்கம் மேலை நாடுகளில் இருக்கிறது. நாமும் இதைப் பின்பற்றலாம்.''

''நகங்களில் சில சமயம் வெண்புள்ளிகள் தோன்றுகின்றனவே?''

''இதில் பயப்பட ஏதும் இல்லை. அடிபட்டாலோ அல்லது நக அடுக்குகளுக்கு இடையில் காற்றுக் குமிழி உருவானாலோ வெண்புள்ளிகளாகத் தோன்றும். ஆனால், இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.''

''நகத்தின் வளர்ச்சி எப்போதும் ஒரே சீராக இருக்குமா?''

''நகங்கள் கெராடின் என்ற புரத அடுக்குகளால் ஆனவை. சராசரியாக நாள்தோறும் 1 மி.மீ. நீளம் வளரக் கூடியவை. தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக் குறைபாடு, சில வகையான மருந்துகளை

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

எடுத்துக்கொள்வது, வயதாவது போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையும்.''

''நகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?''

''நீளமான நகங்கள், நகத்தின் உரிமையாளரை மட்டும் அல்ல மற்றவர்களையும் காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் பல வேலைகளைச் செய்ய இடைஞ்சலாக இருப்பவை நீளமான நகங்களே. அடிக்கடி உடைவதும் நடக்கும். எனவே நகங்களை நீளமாக வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.

விரல் நகங்களுக்கும் சதைக்கும் இடையில்தான் கிருமிகள் ஏராளமாக இருக்கும். எனவே, நன்கு சோப் போட்டுக் கழுவ வேண்டும்'' என்றார் மருத்துவர் மனோகரன்.

நகங்கள் பாதுகாப்புக் குறித்து திருச்சி ரேஷ்மி அழகு நிலைய உரிமையாளர்  ஆர்.நிர்மலா சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

'வெதுவெதுப்பான சோப்புக் கரைசலில் விரல் நகங்களை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மென்மையான பிரஷ்ஷினைக் கொண்டு அழுக்குகளை நீக்கவும். சுத்தமான பஞ்சு மூலம் துடைக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இப்படிச் செய்யவும்.

க்யூட்டிகிள் கிரீம் கொண்டு நகங்களை மசாஜ் செய்வது நல்லது.

தரமான நகப் பூச்சுக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

நகம் வெட்டுவதற்கு முன்னரும் வெட்டிய பின்னரும் பயன்படுத்திய கருவிகளை சுத்தப்படுத்துவது நல்லது.

நகப்பாலீஷ் நகத்துக்கு வலு சேர்க்கிறது. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். நகம் வறண்டு போய் இருந்தால் பாலிஷ§க்குப் பதிலாக மாய்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.பல சமயங்களில் நகப் பராமரிப்பு என்பது ஓர் ஆடம்பரமாகக் கருதப்படுகிறது. அது ஓர் அவசியத் தேவை என்பதை மக்கள் உணரவேண்டும்.' என்றார் அழகியல் நிபுணர் நிர்மலா.

'கை சுத்தம்’ நாணயத்துக்கான சொல் மட்டுமல்ல. நல்ல ஆரோக்கியத்துக்கு அடையாளமான பழக்கமும்கூட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism