Published:Updated:

செண்பகமே... செண்பகமே!

செண்பகமே... செண்பகமே!

செண்பகமே... செண்பகமே!

செண்பகமே... செண்பகமே!

Published:Updated:
செண்பகமே... செண்பகமே!
##~##

செண்பகம் என்றால் நறுமணம் என்று அர்த்தம். நறுமணம் மிக்க மலர்களைத் தருவதால், செண்பக மரம் என்று பெயர். 'களிப்புறு நறுமண மரம்’ என்ற பெயரும்கூட உண்டு. இதனுடைய தாவர இயல் பெயர் மைக்கீலியா சம்பகா (Michelia champaca). இந்தியாதான் பூர்வீகம் என்றாலும் இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் என்று பல்வேறு ஆசிய நாடுகளிலும் பரவி இருக்கிறது. பூக்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். பூக்களைத் தண்ணீர் நிறைந்த பாத்திரங்களில் போட்டுவைத்தால், நாள் முழுவதும் இனிய வாசம் அந்த அறையில் தவழ்ந்துகொண்டே இருக்கும். முதிர்ந்த மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கும், இலைகள் பட்டுப் புழுக்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றன. மணத்தைப்போலவே... மகத்துவமான மருத்துவக் குணங்களிலும் செண்பகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் க.ஜெயலட்சுமி செண்பக மரத்தின் மருத்துவக் குணங்களைப் பட்டியலிட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''செண்பக மரத்தின் பூக்கள், வேர், வேர்ப்பட்டை போன்ற பல பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை.  

இலை: இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேனைக் கலந்து கொடுத்தால், வயிற்று வலி நீங்கும். துளிர் இலைகளைக் கசக்கித் தண்ணீரில் போட்டுக் கண்ணில் விட்டுவந்தால், பார்வை தெளிவடையும். இலையில் நெய்யைத் தடவி ஓமத்தூளையும் கலந்து தலையில் வைத்துக் கட்டினால், குளிர்ச்சி கிடைக்கும். தலைவலி இருந்தால் கட்டுப்படும்.

செண்பகமே... செண்பகமே!

பூக்கள்: பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவர ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். சிறுநீர் பிரிதலை அதிகரிக்கும். வெள்ளைப்படுவதைக் கட்டுப்படுத்தும். தோல் நோய்களுக்கு அருமருந்து இது. தோலில் பாதிப்பு உள்ள பகுதியில் அரைத்துப் பூசினால், நல்ல பலன் கிடைக்கும். முழங்கால் மற்றும் முழங்கை வலி இருந்தால், பூக்களை எண்ணெயில் மசித்துப் பற்றுப்போட்டால், வலி உடனே குறையும். மூக்கடைப்பு, சளி இருந்தால், தலையில் பற்று போடலாம். குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், வயிற்று உப்புசம் போகும்.

விதை : விதையின் எடையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் இருக்கிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் பல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. எண்ணெயை வயிற்றின் மேல் தடவினால், வாயுவை அகற்றும். பாதங்களில் ஏற்படும் சேற்றுப் புண் மீது தடவினால், குணமாகும்.

செண்பகமே... செண்பகமே!

மரப்பட்டை: அல்கலாய்டுகள் என்னும் வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன. பட்டையை நன்றாகப் பொடி செய்து குடிநீரில் இட்டு அரை அவுன்ஸ் முதல் ஒரு அவுன்ஸ் வரை குடிக்கக் கொடுத்துவந்தால், நாள்பட்ட வயிற்று வலி குணமாகும். காய்ச்சல் இருந்தால் அதுவும் தணியும். நெஞ்சில் இருக்கும் சளியை வெளிக்கொண்டு வரும். கர்ப்பச் சிதைவைத் தூண்டும் குணம் இருப்பதால், கர்ப்பிணிகள் இதைச் சாப்பிடக் கூடாது.

வேர்: இளம் வேருடன் மிளகையும் சேர்த்து அரைத்து மாதவிலக்கானதற்குப் பிறகு மூன்று தினங்கள் உண்டு வந்தால், தாம்பத்ய உறவுகொண்டாலும் கருத்தரிப்பு நடக்காது. ஆனால், மருத்துவரின் மேற்பார்வையிலேயே இதை உண்ண வேண்டும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். எளிதாக மலம் வெளியேற வகை செய்யும்.

வேர்ப் பட்டை: காஸ்டுனோலைடு மற்றும் பார்தினோலைடு ஆகிய இரண்டு வேதிப் பொருட்கள் வேர்ப் பட்டையில் உள்ளன. இவற்றுக்குப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism