Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

'பதினெட்டே நாட்களில் சிவப்பாவது எப்படி?’ என்பதில் ஆரம்பித்து, 'அம்பானி ஆவது எப்படி?’, 'ஆதீனமாவது எப்படி?’ என்பது வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு. வாழ்வின் அடுத்தடுத்த அசைவுகளைத் தீர்மானிக்கும் இந்த கலர் கனவுகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 படையெடுக்கும் பாம்புக் கூட்டம், மலை உச்சிப் பயணம், விரட்டிவரும் வாகனம் எனத் தூக்கத்தின்போது நம்மை விடாமல் துரத்தும் கனவுகளோ வேறு வகை. இந்தக் கனவுகள் ஏன் வருகின்றன? கனவுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா? வாழ்வில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான ட்ரெயிலர்தான் கனவா? - இப்படி எழும் கேள்விகள் ஏராளம். ஒருவருக்கு எப்போது தூக்கம் வருகிறது, எப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார் என்பனபோன்ற விஷயங்களை எளிதாக ஆராய்ந்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒருவர் எப்போது கனவு காண்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். வாழ்வின் நிகழ்வுகளோடு அவரவருக்கு ஏற்படும் அனுபவங்களே கனவுகளாக வெளிப்படுகின்றன. முழுக்க முழுக்க இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், 'நான் கனவு கண்டேன்’ என்று சம்பந்தப்பட்டவரே சொன்னாலே தவிர, கனவுகளை அடையாளம் காண முடியாது.

பெரும்பாலும் கனவுகள் எப்போதும் நினைவில் இருப்பது இல்லை. ஆனால், ஒரு சிலர் தான் ஏதோவொரு சமயத்தில் கண்ட கனவைக்கூட அழகாகக் கோர்வையாகச் சொல்லக் கேட்கலாம். 'கனவோட பாதியிலேயே எனக்கு முழிப்பு வந்துடுச்சு. அப்புறமா பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்துக் கனவை கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன்...’ என்று சொல்பவர்களும் உண்டு!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

ஒரு சில கனவுகள் நினைவில் நிற்பதுவும் மற்றவை மறந்துபோவதுமாக ஏன் இந்தக் குளறுபடி?

பொதுவாகக் கனவுகள் ஆழ்ந்த தூக்கத்தின்போது மட்டும்தான் வெளிப்படும் என்று நம்பப்பட்டுவந்தது. ஆனால், கனவு என்பது ஆழ்ந்தத் தூக்கத்திலும் வரலாம். ஆரம்ப நிலைத் தூக்கத்திலும் வரலாம்! விடியற்காலை 4 மணியில் இருந்து 5 மணி வரையிலான நேரத்தில் பெரும்பாலானோர் 'ரெம் ஸ்லிப்’ (REM Sleep) எனப்படும் ஆழ்நிலைத் தூக்கத்தில் இருப்போம். இந்தச் சமயத்தில் தோன்றும் கனவானது நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், நடுராத்திரி வேளையில் ஆரம்ப நிலைத் தூக்கத்தில் இருப்பதால், அப்போது தோன்றக்கூடிய கனவுகள் நம் நினைவு அடுக்குகளில் தெளிவாகப் பதியாது.

அடுத்த கேள்வி, நாம் காணும் கனவுகளுக்கு கலர் உண்டா அல்லது கருப்பு வெள்ளைதானா?

கனவில் வரும் மரம், செடி, கொடி, மனிதர்கள் என அனைத்து உருவங்களும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் தோன்றுகின்றன. ஏற்கெனவே நாம் பார்த்திருந்த அனுபவத்தில்தான் இலைகளுக்குப் பச்சை நிறம், மரத்துக்கு பழுப்பு நிறம், சட்டைக்குச் சிவப்பு நிறம் என்று கறுப்பு வெள்ளைக் கனவுகள் மீது வர்ணம் பூசி நினைவில் ஏற்றிக்கொள்கிறோம்.

பிறவியிலேயே பார்வை இழந்தவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. எந்த உருவத்தையும் பார்வையால் பார்த்தறியாத அவர்களது கனவில் மனிதன், மரம், செடி, கொடிகள் எந்த உருவத்தில் இருக்கும் என்ற சந்தேகம் இப்போது எழலாம். பார்வையற்ற அவர்களது உலகில், ஒலி மற்றும் சில சங்கேதக் குறியீடுகளே குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது உயிருக்கு உருவகமாக இருந்து, அந்த உருவகமே அவர்களது கனவில் உயிர்ப்பாகவும் வெளிப்படுகிறது.

தூக்கத்தின்போது கனவுகள் வெளிப்படுவது சாதாரண நிகழ்வுதானா அல்லது ஏதேனும் குறைபாடா என்ற கேள்வி நிறையப் பேருக்கு உண்டு. சாதாரணமாகக் கனவுகள் எல்லோருக்கும் வரக் கூடியவை. இதனால் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. எனவே கனவு வராமல் தடுக்கவோ சிகிச்சை எடுக்கவோ தேவை இல்லை. ஆனால், ஒரு சிலர் 'எனக்கு எப்போதுமே கெட்ட கனவாகத்தான் வருகிறது. பூதம் துரத்துகிறது, யாரோ ஒருவர் கத்தியால் என்னைக் குத்துகிறார். வியர்க்க விறுவிறுக்க பயத்தில் தூக்கம் கலைந்து எழுந்துவிடுகிறேன்’ என்று பதறுவார்கள். இதனை 'நைட்மேர்’ ((Nightmare) என்போம்.

வாழ்வியல் சம்பவங்களில் ஏதேனும் பய உணர்வு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக இவை போன்ற கனவுகள் தோன்றலாம். அதனால் இவை போன்ற கனவுகள் ஏன் வருகின்றன என்பதை முதலில் ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை கொடுக்க வேண்டி இருக்கும். குறிப்பிட்ட சில வகை மருந்து மாத்திரைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் இதுபோன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, இவர்களுக்கு மருந்து மாத்திரைகளில் மாற்றம் செய்து சிகிச்சை கொடுக்கலாம்.

அரிதிலும் அரிதாக சிலர், 'படுத்ததுமே எனக்குக் கனவுகள் வர ஆரம்பித்துவிடுகின்றன. தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் இந்தக் கனவுத் தொல்லையால் எனக்கு நிம்மதியான தூக்கமும் இல்லை. காலையிலும் சோர்வாகவே இருக்கிறது’ என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்துப் பிரச்னையைச் சரிசெய்ய முடியும்.

ஆராரோ ஆரிரரோ...

 காலை கனவு பலிக்குமா?

அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமாமே... உண்மையா என்றும் கேட்பார்கள். விஞ்ஞானத்தைப் பொருத்தவரையில், எல்லாக் கனவுகளும் ஒரே வகைதான். பகல் கனவு, சாயங்காலக் கனவு, ராத்திரிக் கனவு என்றெல்லாம் பிரித்துப் பார்க்கப்படுவது இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகத்தான் கனவுகள் இருக்கின்றன. 'ஆழ்ந்த தூக்கத்துக்கான ஓர் அறிகுறிதான் கனவு’ என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். மற்றபடி கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism