Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
##~##

லைப்பைப் பார்த்து மிரண்டுவிட்டீர்களா? தூக்கத்தில் பேசும் பழக்கம்கொண்டவர்கள் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களால் குழப்புவார்கள். தூக்கத்தில் பேசுவது, நடப்பது, பின்னர் தானாகவே படுக்கைக்குத் திரும்புவது எனப் பலரும் பலவிதமான செயல்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் ஒரு சம்பவம்...

''டாக்டர்... என் கணவருக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுராத்திரித் தூக்கத்தில் இருந்து எழுந்து நடந்தவர் பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 80-வது மாடிக்கு லிஃப்ட் ஏறிச் சென்றுவிட்டார்...' - ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக என்னிடம் விவரித்தார் வெளிநாடு வாழ் பெண்மணி ஒருவர்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

விழித்திருக்கும் வேளையில், ஒருவர் பேசுவதும் நடப்பதும் இயல்பான விஷயங்கள். ஆனால், தூக்க நிலையிலும் இதுபோன்ற செய்கைகளை ஒருவர் செய்தால், அதனை பாராசோம்னியா (Parasomnia)  பாதிப்பு என்கிறோம். குறிப்பாக, தூக்கத்தின்போது சுயநினைவின்றி இப்படி அனிச்சையாக நடந்து செல்வதை 'சோம்னாம்புலிசம்’ (Somnambulism - Sleep Walking)  என்கிறோம். இதுபோல் ஒருவர் தூக்கத்தில் அடுத்த குடியிருப்புக்குப் போய் லிஃப்ட் ஏறி 80-வது மாடிக்குச் செல்ல முடியுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும். ஆனால், 'இப்படி நடப்பதற்கும் வாய்ப்பு உண்டு’ என்பதே இதற்கான பதில். 'டெம்போரல் லோப் சீசர்’ (Temporal lobe seizure) எனப்படும் மூளை சம்பந்தப்பட்ட 'வலிப்பு நோய்’ ஏதேனும் இருந்தால், இதுபோல் 'நடக்க’ வாய்ப்பு உண்டு. வலிப்புப் பிரச்னை போன்ற வேறு சில காரணங்களாலும் இப்படி 'நடக்கலாம்’.

தூக்கத்தின்போது சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவதாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படலாம். இதைக் குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் இருக்கின்றன.

உடல் அசதியுடன் கூடிய ஆழ்ந்த தூக்கத்திலும், அதீத மனக் கவலையோடு தூங்கும்போதும் அதற்குச் சம்பந்தப்பட்ட சில வார்த்தைகளைச் சுயநினைவின்றிப் பேசுவது பலருக்கும் ஏற்படுகிற சாதாரணமான விஷயம்தான். சில சமயங்களில் அர்த்தமே இல்லாத உளறல்களாகவும் இருப்பது உண்டு. இப்படித் தூக்கத்தின்போது பேசுவதை 'சோம்னிலொகே’ (Somniloquy)  என்கிறோம். ஏதாவது ஓரிரு நாட்கள் இதுபோலத் தூக்கத்தில் பேசினால், எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால், தொடர்ச்சியாகப் பேச ஆரம்பித்தால்  சிகிச்சை தேவை. இதே வரிசையில், அரிதாக சிலருக்கு வித்தியாசமான பிரச்னையும் ஏற்படும். அதாவது, தூக்க நிலையிலேயே எழுந்து சென்று மூக்குப் பிடிக்கச் சாப்பிடும் பழக்கம்தான் அது. சர்க்கரைப் பிரச்னை, அல்சர் மாதிரியான வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களில் சிலருக்கு அர்த்த ராத்திரியிலும் பசி எடுப்பதால் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களது பிரச்னை வேறு. ஆனால், மூளை தூங்கிய நிலையில் இருக்கும்போதே சுயநினைவின்றி எழுந்து சென்று உணவு சாப்பிடுவது என்பது தூக்க நிலையில் ஏற்படும் பாதிப்பே. மூளை நரம்பில் உள்ள இரு வேறு ரசாயனங்களான ஓரெக்ஸின், ஹைபோக்ரடின் (Orexin, hypocretin) சம நிலையில் இல்லாதபோது இந்தப் பாதிப்பு ஏற்படும். இந்த ரசாயனங்களைச் சம நிலைக்குக் கொண்டுவருவதற்கான சிகிச்சை முறைகள் தற்போதைய மருத்துவத்தில் இல்லை. ஆனாலும், ஆழ்நிலைத் தூக்கத்தை வரவழைக்கும் சிகிச்சை முறைகளைக் கையாண்டு இவர்களது பிரச்னையைச் சரிசெய்ய முடியும்.

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... தூக்கம் என்பது நமது உடலுக்கான வெறும் ஓய்வு மட்டும் அல்ல... மீண்டும் மீண்டும் உடலைப் புத்துணர்வோடு இயங்கவைக்கும் ஆதார சக்தியும்கூட.

கடந்த 20 இதழ்களிலும் தூக்கம் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் அது குறித்த தெளிவான பதில்களையும் விரிவாகவே பார்த்தோம். நிம்மதியாகத் தூங்கி எழுபவரிடம் நீண்ட ஆரோக்கியம் குடிகொண்டிருக்கும் என்கிறது மருத்துவ உலகம். அதனால், ஆழ்ந்து தூங்குவோம்... ஆரோக்கியம் காப்போம்!

- முடிந்தது... ஸாரி, விடிந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism