Published:Updated:

சந்தனத்துக்கு வந்தனம்!

சந்தனத்துக்கு வந்தனம்!

சந்தனத்துக்கு வந்தனம்!

சந்தனத்துக்கு வந்தனம்!

Published:Updated:
சந்தனத்துக்கு வந்தனம்!
##~##

ந்தனம் என்றாலே நறுமணம்தான்.  மணத்துடன் மருத்துவக் குணங்களும் நிரம்பியதுதான் சந்தன மரம். இன்னும் சில ஆச்சரியங்களும் சந்தன மரத்தில் உண்டு. இது நீர் மற்றும் தாது உப்புக்களைத் தானாக பூமியில் இருந்து உறிஞ்சாது; பக்கத்தில் உள்ள பிற மரங்களில் தன்னுடைய வேரை ஊடுருவச் செய்து அவற்றில் இருந்து சத்துக்களைத் திருடிக்கொள்ளும். ஆம், சந்தனம் ஓர் ஒட்டுண்ணி மரம். இந்த மரத்தின் அருகே சென்றால் எந்தவிதமான வாசனையும் வராது. முதிர்ந்த மரங்களின் தண்டுப் பகுதியை அறுக்கும்போது மட்டும்தான் வாசம் வெளிவரும். இதை வைரம் என்பார்கள். சந்தன மரத்தின் தாவர இயல் பெயர் சன்டாலம் ஆல்பம் (Santalum album). கர்நாடக மாநிலத்தில் மைசூர், கூர்க் போன்ற பகுதிகளிலும் கோயமுத்தூர், சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் சந்தன மரங்கள் அதிகம். வறண்ட தட்பவெப்ப நிலைகொண்ட முட்புதர்க் காடுகளில் செழித்து வளரும். பசுமை மாறாத வகையைச் சேர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்குநேரி அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் நா.சுப்புலட்சுமி சந்தனத்தின் மருத்துவ குணங்களை விளக்கினார்.

சந்தனத்துக்கு வந்தனம்!

பட்டை: சந்தனப் பட்டையைப் பசும்பாலில் அரைத்துக் குடித்து வந்தால், மேகவெட்டை குணமாகும்.

சிராய்: கந்தக ரசாயனம் என்னும் மருந்தில் சந்தனச் சிராய் சேர்க்கப்படுகிறது. இது மேக நோய், வெள்ளைப்படுதல், தோலின் நிற மாற்றம் போன்றவற்றைக் குணமாக்கும். 64 வகை சுரங்களை நீக்கக்கூடிய நில வேம்பு சேர்க்கப்பட்ட குடிநீரில் சந்தனச் சிராய் ஒரு சேர்மானப் பொருளாகப் பயன்படுகிறது. நில வேம்புடன் சேர்த்துத் தயாரித்த குடிநீர், சிக்குன்குன்யா நோய் பரவியபோது அதைக் குணமாக்கும் சிறந்த மருந்தாகப் பயன்பட்டது. சிற்றரத்தையுடன் சேர்த்துத் தயாரித்த குடிநீர், இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை நீக்கும். அரக்குத் தைலத்தில் சந்தனச் சிராய் சேர்க்கப்பட்டு, கப நோய்களுக்கும் சுரத்திற்கும் மருந்தாகிறது.

தண்டு: தண்டுப் பகுதியை அரைத்து எடுக்கப்படும் சந்தனத்தைப் பன்னீருடன் கலந்து, தேள் கடிக்கும் அடிபட்ட வீக்கங்களுக்கும் பற்றுப் போடலாம். எலுமிச்சம் பழச் சாறுடன் சந்தனத்தைச் சேர்த்து அரைத்துப் பூசினால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர்தாமரை குணமாகும். சில வகைத் தேமல்களுக்கும் இது சிறந்த மருந்து. தேனுடன் சேர்த்து அரைத்துத் தலையில் பற்றுப்போட்டால், காய்ச்சலால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

சந்தனத்துக்கு வந்தனம்!

தூள் : சந்தன மரத்தின் வைரப் பகுதியை ரம்பம் கொண்டு அறுக்கும்போது உதிர்வதுதான் சந்தனத் தூள். இளநீருடன் இதைக் கலந்து உண்ண ஆண்மை பெருகும்.

வேர் : சந்தன வேர் சுரம், கபம், மற்றும் தோல் நோய்களைக் குணமாக்கும் சித்த மருந்துகளில் பயன்படுகிறது.

எண்ணெய்  : வைரப் பகுதி மற்றும் வேர் ஆகியவற்றை நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கிளம்பும் ஆவியைக் குளிரவைத்து சந்தன எண்ணெய் தயாரிக்கிறார்கள். இதனுடன் கடுகு எண்ணெயைச் சேர்த்துப் பூசி வந்தால், முகப் பருக்கள் நீங்கும். தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து இது. (சந்தன எண்ணெய் மிகவும் வீரியமானது. நேரடியாகத் தோலில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.) ஓம நீர் சேர்த்து அருந்தினால், அடிக்கடி ஏற்படும் மார்பகச் சளி மற்றும் தானாகவே சிறுநீர் வெளியேறுதல் போன்றவை குணமாகும்.

விதை எண்ணெய் : விதையை அரைத்தும் ஓர் எண்ணெய் எடுப்பார்கள். இதனுடன் கடுகு எண்ணெயைக் கலந்து பூசி வந்தால், சரும நோய்கள் குணமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism