Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

ம்பளம் முதல் பைக் வரை எல்லாவற்றையும் மற்றவர்களோடு ஒப்பிடுவதால் பிரச்னை வருவது இயல்புதான். அதிலும், உடல்ரீதியான செக்ஸ் நடவடிக்கைகளை மற்றவர்களோடு  ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டால் இல்லற வாழ்க்கையில் பெரும் குழப்பம் நிகழும். 

என்னிடம் வந்த 40 வயதுக்காரர் ஒருவர், ''சார்... என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அடிக்கடி பல பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பான். ஒரே நாள்ல ரெண்டு மூணு தடவை எல்லாம் அந்த மாதிரிப் பெண்களுடன் கூடுவேன்னு சொல்றான். என்னால் அப்படி முடியலையே...'' என்றார் ஏக்கமும் பொறாமையுமாக.

ஒரு தம்பதி மாதத்துக்கு இத்தனைத் தடவை, வாரத்துக்கு இத்தனைத் தடவை கூட வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அப்படி கணக்குப் பார்த்து செக்ஸில் ஈடுபட்டால் அது இனிமையான இல்லறத்துக்கு அழகல்ல. திருமணமான புதிதில் ஓரிரு வருடங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு உடலுறவுகொள்ளும் நிலை இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. செக்ஸ் ஈடுபாடு என்பது போகப் போகக் குறைந்துகொண்டே வந்து, நாளடைவில் ஒரு சமநிலைக்கு வந்துவிடும்.

குட் நைட்!

'திருமணமான முதல் ஆண்டில் மாதத்துக்கு 18 தடவையும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாதத்துக்கு 15 தடவைகளும்  தம்பதிகள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் மாதம் ஒன்பது தடவைகளும், பின்னர் வரும் ஐந்தாண்டுகளில் மாதம் நான்கு தடவைகளும்,  கடைசியில் மாதந்தோறும் இரண்டு தடவைகளும் உடலுறவுகொள்வதாக... இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதுதான் சரியான கணக்கு, இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும் என்று எவரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். செக்ஸ் என்பதே விருப்பம் சார்ந்தது; எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல.

ஆரம்ப காலங்களில் செக்ஸில் பெரு விருப்பம் இருக்க வயது, புதியன தேடல் எல்லாம்தான் காரணம். இது நாளடைவில் குறைவதற்குக் காரணம் உலக அளவில் - தம்பதிகள் அனைவருக்கும் செக்ஸுவல் சலிப்பு (Sexual boredom) நிலை ஏற்படுவதுதான். ஒரே முகம், ஒரே இடம், ஒரே உறவு நிலை, ஒரே மாதிரி செயல்பாடுகள்தான் காரணம். இதை விஞ்ஞானரீதியாக அணுகினால் கூலிட்ஜ் எஃபெக்ட் (Coolidge effect) எனப்படும் கோட்பாட்டின்படி, 'தொடர்ந்து நடைபெறும் ஒரே மாதிரியான செயல்பாட்டினால்... உற்சாகமான விளைவுகள் ஏற்படாது’ என்பதுதான்.

தங்கள் வாழ்வில் இந்த செக்ஸுவல் சலிப்பு  தலைத்தூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  படுக்கும் இடத்தை மாற்றுவது, முன் விளையாட்டுகளில் வித்தியாசமாக ஈடுபடுவது, ரிலாக்ஸ்டாக எங்காவது வெளியே சென்று வருவது, பெட்ரூமை அழகாக வைத்துக்கொள்வது... போன்றவை செக்ஸுவல் நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியைத் தூண்ட உதவி செய்யும்.

முன்பு இருந்த செக்ஸ் நாட்டம் பலருக்குக் குறைந்துகொண்டு வருவதற்கு வீட்டுச் சூழல், பொருளாதார நிலை, குடும்பப் பிரச்னை, தம்பதிகளுக்குத் தனிமை கிடைக்காமை போன்ற பல காரணங்கள்.

வாழ்க்கையில் அதுவரையில் முக்கியத்துவம் தந்த விஷயங்களில் இருந்து (Priority shift)மாறி, வேறு சிலவற்றுக்கு முக்கியத்துவம் தருவது, 'குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு செக்ஸ் நாட்டத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று கருதுகிற சமுதாயத்தின் தவறான நம்பிக்கை, 'பிள்ளை பெரியவனாயிட்டான்... பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. இனிமே நமக்கு என்ன உடல் சுகம்...’ என்று தம்பதிகள் தாங்களாகவே செக்ஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் விழுந்துவிடுகிறார்கள்.  இவை எல்லாமும்கூட செக்ஸுவல் நடவடிக்கைகளை பாதிக்கச் செய்யும்.

எத்தனை தடவை உடல் உறவுகொள்வது என்கிற எண்ணிக்கையில் எதுவுமே இல்லை. உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் அது இன்பகரமானதாக, திருப்திகரமானதாக அமைந்ததா என்பதுதான் முக்கியம். செக்ஸ் என்பது 'நம்பர் கேம்’ கிடையாது.

செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைந்துகொண்டே வருவதை எண்ணி எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி அந்தக் கவலையே பிரச்னையாக இருந்தால் செக்ஸாலஜிஸ்டை பார்ப்பதுதான் நல்லது.

<table cellspacing="0" cellpadding="0" align="right" border="0">
    <tbody>
        <tr>
            <td>##~##</td>
        </tr>
    </tbody>
</table>