Election bannerElection banner
Published:Updated:

உளறலும் ஒரு தியானம்தான்!

இது தமிழச்சி ரகசியம்இரா.சரவணன், படங்கள் : என்.விவேக்

உளறலும் ஒரு தியானம்தான்!
##~##
யதே ஏறாமல் இருக்க வரம் வாங்கி வந்தாரோ என்னவோ... எப்போது பார்த்தாலும் அப்படியே இருக்கிறார் அழகிய தமிழச்சி!

 'மஞ்சணத்தி’யாய் மலர்ந்து சிரிக்கும் தமிழச்சி இலக்கியம், அரசியல், கல்வி எனப் பல துறைப் பங்களிப்புகளோடு வலம் வந்தாலும், அழகே அவருடைய முதல் அடையாளம்! காரணம், 'ஆரோக்கியமே அழகு’ என்கிற அவருடைய ஃபார்முலா!

உளறலும் ஒரு தியானம்தான்!

''மறக்க நினைக்கிற அந்த கார் விபத்து மறுபடியும் மனக் கண்ணில் வந்துபோகுது. கண் இமைக்கிற நேரத்துல கார் விபத்து நிகழ்ந்துடுச்சு. ஸீட் பெல்ட் போட்டு இருந்த ஒரே காரணத்தால், உயிர் பிழைச்சேன். எங்கே இருந்து தைரியம் வந்துச்சோ... கார் கண்ணாடியை உடைச் சுக்கிட்டு வெளியே வந்தேன். சிகிச்சைக் குச் சேர்ந்தப்ப முதுகுத் தண்டில் கிராக் இருக்கிறதா தெரிய வந்தது. அப்போ நாடாளுமன்றத் தேர்தல் நேரம்... இடுப்பில் பெல்ட் போட்டு வலியைத் தாங்கிக் கிட்டால், தேர்தலில் வாய்ப்பு கிடைக் கும்கிற நிலை. வாய்ப்புக்காகவும்வெற்றிக் காகவும்தான் எல்லோரும் காத்திருக் கோம். ஆனால், ஒரு சின்ன கணத்தி லேயே, 'இந்த நேரத்தில் நமக்குத் தேவை வெற்றியா... இல்லை, ஆரோக்கியமா?’ன்னு யோசிச்சேன். நாற்காலி முக்கியம்தான். ஆனால், அதைவிட முதுகுத்தண்டு முக்கியம்னு தோன்றியது. உடலை வருத்திக் கொள்ள விரும்பாமல் ஓய்வே சரியான சாய்ஸ் என முடிவெடுத் தேன். ஆரோக்கியத்துக்கு நான் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்பதற்கு இந்த உதாரணம் போதும்!''

''எப்பவுமே அழகா இருக்கணும்கிற எண்ணம் எப்போ வந்தது?''

''மிகச் சரியா 17 வயதில்! மீனாட்சி கல்லூரியில் 'சாகுந்தலம்’ என்ற நாடகத்தில் சகுந்தலையா நடிச்சேன். அதில் எனக்கு முழுக்க முழுக்கப் பூக்களால் ஆன உடை. 'கொள்ளை அழகு’ன்னு பார்த்தவங்க பாராட்ட... 'அழகுங்கிறது காஸ்ட்லியான விஷயம் இல்லை’ங்கிறது அப்போதான்  புரிஞ்சது. தன்னை அழகுபடுத்திக்கிறது பிறரை ஈர்ப்பதற்காக இல்லை. அது நமக்கா னதுதான் என்பதை சங்க இலக்கியம் எனக்குப் புரியவெச்சது!''

''தினமும் உடற்பயிற்சிகள் செய்வீங்களா?''

''காலையில் 15 நிமிடங்கள் வாக்கிங்... 10 நிமிடங்கள் வீட்டிலேயே சைக்கிளிங். அப்புறம் ஓஷோவின் ஜிப்பர்ஸ் தியானம்... அதாவது, 10 நிமிஷம், 'லபோ அதா குந்தா வெளியா கம்னா ஹயா வாங்கோ பன்னா அபரம்’னு வாய்விட்டுச் சத்தமா சொல்வேன். அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்கிறீங்களா? ஸாரிங்க... எனக்கே தெரியாது. ஜிப்பர்னா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகள்னு அர்த்தம். சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை 10 நிமிஷங்கள் சொன்னா, அதுதான் ஓஷோவோட ஜிப்பர்ஸ் தியானம். ரொம்பத் தெளிவா சொல்லணும்னா, 10 நிமிஷம் பைத்தியம் பிடிச்ச மாதிரி உளறணும். மைண்ட்டை ட்ராப் பண்ற பயிற்சி அது. அவ்வளவுதான் நம்ம ஸ்பெஷல்!''

''சாப்பாடு விஷயத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்?''

''அப்படி எதுவும் கிடையாது. தேவைக்கு ஏற்பச் சாப்பிடுவேன். இயற்கையான உணவுக்கு எப்பவுமே முக்கியத்துவம் கொடுப்பேன்.

உளறலும் ஒரு தியானம்தான்!

25 வயசு வரைக்கும் காலையில எழுந்த உடனே வெறும் வயித்துல ஒரு உருண்டை வெண்ணெய் விழுங்குவேன். நம் தோலின் இயல்பான பளபளப்புக்கு அந்த ஒரு உருண்டை வெண்ணெய் போதும். அடுத்தபடியா, கால் டம்ளர் வெந்நீர்ல ஒரு ஸ்பூன் தேனும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறும் கலந்து குடிக்கணும். இது உடலைச் சுத்தமாக்கும் சூட்சுமம். காலை சாப்பாடு நல்லா சாப்பிடணும். மதிய

உளறலும் ஒரு தியானம்தான்!

சாப்பாட்டில் காய்கறிகளை அதிகமாக்கி, சாதத்தைக் குறைச்சுக்கணும். இதான் என் பழக்கம்!''

''அழகை விரும்பும் பெண்கள் பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்களை நோக்கி ஓடுறாங்களே...''

''என் தலைமுடிக்கு நான் ஷாம்பு பயன்படுத்தியதே கிடையாது. செம்பருத்தியையும் சீயக்காயையும் தாண்டிய மகத்துவப் பொருள் தலைமுடிக்கு வேற எதுவுமே இல்லை. இயற்கையோட வரத்தைப் புறக் கணிச்சுட்டு, ஹேர் மசாஜ், விட்டமின் ஆயில்னு தேடுறது தேவையற்ற வேலை. நம்ம அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும், இயற்கையால கிடைக்காத எதுவும் செயற்கையால கிடைக்காது!''

தமிழச்சி சொல்வதை ஆமோதிப்பதுபோல அவருடைய கன்னக் குழிகளும் சிரிக்கின்றன!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு