'இந்த இரவு விடியாமலே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று காமத்தின் கோயிலைச் சாமத்தில் திறந்துவைப்பவர்கள் பேசுவதாக நாம் இலக்கியத்தில் படித்திருப்போம். பணம், பொருள் போன்றவற்றில் மனிதனின் மனசு 'போதும்’ என்கிற பிரேக்கைப் பிடிப்பதே இல்லை. இது செக்ஸுக்கும் பொருந்தும். செக்ஸ் நடவடிக்கையில் நீண்ட நேரம் ஈடுபட வேண்டும் என்பதுதான், பல தம்பதிகளின் வேட்கை. ஆனால், இயற்கை எல்லாவற்றுக்கும் ஓர் எல்லைக்கோட்டை வரைந்துதானே வைத்திருக்கிறது. துரிதஸ்கலிதம் என்று சமஸ்கிருதத்திலும், விந்துமுந்துதல் என்று தமிழிலும் சொல்லப்படும் ஆணின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் பிரச்னையைப் பற்றிப் பார்ப்போம்.

உடலுறவின்போது பெண்ணுக்கு மனம் மற்றும் உடல்ரீதியாக திருப்தி கிடைப்பதற்கு முன்பே ஆணுக்கு விந்து வெளியேறிவிடுவதற்குப் பெயர்தான் விந்துமுந்துதல். உலக அளவில் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களைவிட விந்துமுந்துதல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம்.

விலங்குகள் தங்கள் சுகத்துக்காக செக்ஸில் ஈடுபடுவது இல்லை. ஹார்மோன்களின் சுரப்பு காரணமாகத் தங்களுடைய உடல் தினவைத் தீர்த்துக்கொள்ளத்தான் கூடலில் ஈடுபடும். அவ்வாறு உறவில் ஈடுபடும்போது இந்த ஆண் விலங்கைவிட வலிமையான இன்னோர் ஆண் விலங்கு வந்துவிட்டால், அதனைச் சமாளிக்க இந்த ஆண் விலங்கால் முடியாமல் போய்விடலாம். எனவேதான், சீக்கிரத்தில் உறவில் ஈடுபட்டு, உடன் விந்துவை வெளியேற்றிவிடுகிற நிலையை இயற்கை படைத்தது.

ஆனால், மனிதன் என்று வரும்போது, செக்ஸ் என்பது சந்ததி உருவாக்க மட்டும் அல்ல; சுகத்துக்காகவும்தான்.

நவீனப் பாலியல் மருத்துவத்தின் தந்தைகளாகக் கருதப்படும் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், உடலுறவின்போது பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்தி இயங்கும்போது, இரண்டு நிமிடங்களுக்குள் அனைவருக்குமே விந்து வெளியாகிவிடும் என்பதைக் கண்டறிந்தனர்.

சில பேர், 'நான் ஒரு மணி நேரம் உறவில் ஈடுபட்டேன்... ரெண்டு மணி நேரம் உறவில் ஈடுபட்டேன்...’ என்றெல்லாம் சொல்வார்கள். நேரடியான உடலுறவுச் செயல்பாட்டை மட்டும் அல்ல; அன்பான பேச்சு, முன் விளையாட்டுகள்(ForePlay) அனைத்தையும் சேர்த்து அப்படி அவர்கள் சொல்லி இருக்கலாம். உண்மையில் அவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடவே முடியாது. அதையும் மீறிப் பெண் உறுப்புக்குள் ஆணுறுப்பைச் செலுத்தி அரை மணி நேரம் முயங்க முடிகிறது என்றால், அவருக்கு விந்து தாமதமாக வெளியேறும் பிரச்னை (Retarded ejaculation) உள்ளதாகத்தான் அர்த்தம்.

விந்துமுந்துதலுக்கு என்ன சிகிச்சை?

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை உடலுறவின்போது வலி ஏற்படுத்துவது, 100-ல் இருந்து 1 வரை மனசுக்குள் எண்ணுவது போன்று மனதின் கவனத்தை மாற்றி (mental distraction), விந்துமுந்துதலைக் கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த சிகிச்சையால் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் நவீன செக்ஸுவல் மருத்துவத்தில் விந்துமுந்துதலைக் கட்டுப்படுத்த பல மருந்துகள் வந்துவிட்டன. இவை எல்லாருக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. விந்துமுந்துதல் பிரச்னை பல ஆண்களுக்கு இருந்தாலும் அதற்கான காரணங்கள் வெவ்வேறானவை. எனவே, மருத்துவரின் ஆலோசனையில் பேரில்தான் இந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதனுடன், இவர்களுக்கு செக்ஸ் தெரப்பியும் தேவைப்படும். செக்ஸ் தெரப்பி மூலம் தம்பதிகளுக்கு உறவின் சமயத்தில் கையாள்வதற்குச் சில நுட்பமான முறைகள் சொல்லித்தரப்படும். அதன் மூலம் விந்து வெளியாவதை முன்பே அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

- இடைவேளை...

உடல்ரீதியான காரணங்கள்:

ஆணுறுப்பின் முன்னும் பின்னும் போய் வரும் முன் தோலை, ஆணுறுப்புடன் இணைக்கும் மெல்லிய தசைப் பகுதியும் (Frenulum), ஆணுறுப்பின் முன் பகுதியும் அதிக அளவில் உணர்வுவசப்படும் பகுதியாக இருந்தால் விந்துமுந்துதல் நிகழலாம்.

புராஸ்டேட் சுரப்பித் தொற்று, சிறுநீரகத் தொற்று இருந்தால், விந்துமுந்துதல் நிகழலாம்.

சிலருக்குச் சர்க்கரை நோய் காரணமாகவும் விந்துமுந்துதல் ஏற்படலாம்.

மனரீதியான காரணங்கள்:

பரபரப்பான மனநிலை.

சீக்கிரம் தனக்கு விந்து வெளியாகிடுமோ என்கிற பயம் (Anticipatory Anxiety).

சட்டென்று உணர்ச்சிவசப்படுகிற நிலை.

நீண்ட நாட்களுக்கு ஒரு தடவை உடலுறவுகொள்ளுதல்.

இளமைப் பருவத்தில் யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று பயந்து அவசர அவசரமாக சுயஇன்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு,(Conditioned response) திருமணத்துக்குப் பின்பு விந்துமுந்துதல் ஏற்படலாம்.