தழும்புகள் மறைய என்ன வழி?

ஜெயஸ்ரீ, திருவனந்தபுரம்

'என் குழந்தைக்கு ஐந்து வயது. ரொம்பவும் சுட்டி. தினமும் விளையாடும்போது எங்காவது இடித்து கை, கால்களில் அடி வாங்கி வருகிறாள். இதனால் அவள் கை, கால், முட்டி என எங்கு பார்த்தாலும் தழும்பாக இருக்கிறது. தழும்புகளை நீக்க வழி சொல்லுங்கள்.'

டாக்டர் உதயசங்கர், தோல் நல மருத்துவர், புதுச்சேரி

''நம் தோல் ஒரு பட்டுத் துணி போன்றது. ஒரு சிறிய கிழிசல் எப்படிப் பட்டுத் துணியைப் பாழ்படுத்தக்கூடுமோ, அதேபோல் சிறிய கீறல்கூடத் தழும்பை ஏற்படுத்தலாம். புண் குணமாகும்போது தழும்பு ஏற்படுவது இயற்கை. காயம் ஏற்படும் பகுதியைப் பொருத்து தழும்பின் தன்மை இருக்கும். தழும்பு வராமல் தடுக்க...

குழந்தைகள் விளையாடும்போது முழுக்கை சட்டை முழுக்கால் சட்டை போட்டுவிடுங்கள்.

காயம்பட்டவுடன் உடனடியாக, அந்த இடத்தில் சுத்தமான தண்ணீரால் கழுவி, மண், அழுக்கினை அகற்ற வேண்டும்.

கிருமி நாசினி க்ரீமைத் தடவிக் கட்டுப் போடலாம். அல்லது பேண்ட்எய்டால் புண்ணை மூடி, கிருமித்தொற்றினைத் தடுக்கலாம்.

புண்ணின் மேல் படரும் பொருக்கு தானாக விழும் வரை அதைப் பிய்த்து எடுத்தல் கூடாது.

சிறு வயதில் ஏற்படும் தழும்புகள் சில வருடங்களில் தானாகவே மறைந்துவிடலாம். தழும்பின் மீது வெயில் பட்டுக் கருக்காமல் இருக்க, சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிப் பாதுகாக்கலாம். தழும்பினைக் குறைக்க சிலிக்கான் ஜெல் ஷீட் பயன்படுத்தலாம். தடித்த தழும்புகளுக்கு, ஸ்டெராய்ட் ஊசி போடலாம். மேலும் அறுவைசிகிச்சை, லேசர் சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆனால், குழந்தைகளுக்கு இது வேண்டாம்.

காலில் கட்டி வர காரணம் என்ன?

ஜானகி, மேற்கு மாம்பலம்

'எனக்கு வயது 75. என் காலில் நெல்லிக்காய் அளவுக்கு ஒரு கட்டிப்போல் இருக்கிறது. தொட்டால் நழுவுகிறது. இதனால் நடக்க முடியவில்லை. கொழுப்புக் கட்டியாக இருக்கும் என்கிறார்கள் சிலர். சிலரோ, எலும்பு வளர்ந்திருக்கும் என்கிறார்கள். எனக்கு ஆலோசனை கூறவும்.'

டாக்டர் இளவரசன்,நோய்க்கூறு இயல் (பேத்தாலஜி) மருத்துவர், தருமபுரி

'நீங்கள் சொல்வதை வைத்து அது என்ன கட்டியாக இருக்கும்? அதற்கு சிகிச்சை என்ன என்று கூறுவது சரியாக இருக்காது. பொதுவாக, வயதானவர்களுக்கு சதை வளர்ச்சி, எலும்பு துருத்துவது, வளர்ச்சி காரணமாக கட்டி ஏற்படலாம். எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் மூலம்தான் இதனை உறுதிப்படுத்த முடியும். ஆனால், உங்கள் காலில் உள்ள கட்டி நெகிழும்தன்மை என்பதால் எலும்பு சம்பந்தமான பிரச்னையாக இருக்க வாய்ப்பு இல்லை. கட்டியை சதைப் பரிசோதனை செய்து சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் போன்ற ஆபத்தான கட்டியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். எனவே, முதலில் உங்கள் அருகில் உள்ள அறுவைசிகிச்சை நிபுணரை அணுகி சிகிச்சை எடுப்பதே நல்லது.''