'பால் இருக்கும்... பழம் இருக்கும்... பசி இருக்காது...’ என்ற பாடலை உல்டாவாக்கினால், சிலருக்கு மனதின் ஜன்னலில் ஆசை எட்டிப்பார்க்கும். காமமும் தூபம் போடும். ஆனால்?

என்ன ஆனால்?

கடந்த இதழ்களில் விந்து முந்துதலைப்(Premature Ejaculation) பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இந்த இதழில் அதற்கு நேர் எதிர்மறையான ஒரு விநோதமான பாதிப்பினைப் பார்க்கப்போகிறோம்.

ஒரு சில ஆண்களுக்கு ஏற்படுகிற செக்ஸ் பிரச்னை (Retarded Ejaculation) இது. எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபட்டாலும்கூட, அவர்களுக்கு விந்து வெளியேறவே வெளியேறாது. இவர்கள் முழு வீச்சுடன் உடலுறவிலும் ஈடுபடக்கூடும். ஆனால்... விந்து மட்டும் வெளிவராது.

இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆண்களில் சிலருக்கு விதவிதமான முறைகளில் செக்ஸில் ஈடுபட்டாலும் விந்து வராது. சுய இன்பத்தில் ஈடுபடும்போது விந்து வெளிவரும் சில ஆண்களுக்குப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடும்போது வெளிவராது. இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், ஒரு சில ஆண்களுக்கு மனைவியுடன் கூடும்போது விந்து வெளிவராது. பிற பெண்களை நாடும்போது அமோகமாகச் சுரக்கும்.

விந்து வெளிவராத இந்த செக்ஸ் பிரச்னை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குச் சுகமானதாகத் தெரியும். அதாவது இந்த நிலை உள்ள ஆண் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடலாமே என்று நினைப்பார்கள். உண்மையில் இது பெரிய அவஸ்தை.

எது செய்தாலும் அதில் ஒரு பலன் கிடைக்க வேண்டும் இல்லையா? உடலுறவில் ஈடுபடுவதன் பலனே உச்சக்கட்ட இன்பம்தான். அந்த இன்பம், விந்து வெளியேறும்போதுதான் ஆண்களுக்கு ஏற்படும். இதுபோல பலன்பெறாத ஆண்கள் கடைசியில் செக்ஸ் என்றாலே வெறுப்புக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். விந்து வராத ஆண், நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபடும்போது, பெண்ணுக்குப் பிறப்புறுப்பில் வலி, எரிச்சல் ஏற்பட்டுவிடும். விந்து வெளியேறாததால் குழந்தை பாக்யமும் இல்லாமல் போகிறது.

இதற்கு என்ன காரணம்? உடல்ரீதியான அல்லது மனரீதியான காரணங்கள் இருக்கலாம்; உடலும் மனமும் சார்ந்தும் இருக்கலாம்.

உடல்ரீதியான காரணங்கள்:

பிறப்புறுப்பில் பிறவிக் குறைபாடு இருப்பது

முதுகுத்தண்டுவடத்தில் சில குறைபாடுகள்

முதுகுத்தண்டுவடத்தில் சில அறுவைசிகிச்சை செய்துகொண்டதால்

விபத்துகளில் முதுகுத்தண்டு பாதிப்பு அடைவது

கட்டுபாடற்ற சர்க்கரை நோய்

ஆண் ஹார்மோன்(டெஸ்டோஸ்டீரோன்) குறைபாடு

மனநலப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளும் சில குறிப்பிட்ட மருந்துகள்

போதைப் பொருட்களுக்கு அடிமையாவது

பெண்ணின் பிறப்புறுப்பு தளர்வடைந்து இருப்பது

ஆணின் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு

தொற்றுக் கிருமி ஏற்படுவது

உடல் பலவீனமாக இருப்பதுபோன்ற காரணங்களால் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

மனரீதியான காரணங்கள்:

விந்து அதிகம் வெளியானால் உடல் பலவீனமாகும் என்கிற பயம் சிலரின் அடிமனதில் பதிந்துப் போயிருப்பது

பெண்ணுக்கு வலிக்குமோ, அவளைத் துன்புறுத்துகிறோமோ என்று நினைத்துக்கொண்டு பயந்து பயந்து உடலுறவில் ஈடுபடுவது

பெண்ணைத் திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்கிற (Performance anxiety) மனப்பதற்றம் கொள்வது

எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பது

குழந்தை வேண்டும் என்பார் மனைவி. வேண்டாம் என்பார் கணவன். இதுபோன்ற மனக் குழப்பத்தில் உடலுறவில் ஈடுபடும்போதும் இந்த சிக்கல் ஏற்படலாம்.

முறையற்ற உறவில் பயந்து பயந்து ஈடுபடும் பழக்கம் உள்ளவர் பின்னாட்களில் முறைப்படி திருமணமாகி மனைவியுடன் ஈடுபடும்போதும் விந்து வெளிவராமல் ஆகிவிடுவது

Post Traumatic Stress எனும் தீவிரமான செய்தியைக் கேட்பதோ, பார்ப்பதோ காரணமாக ஏற்படும் மனப்பாதிப்பின் காரணமாகவும் இப்படி ஆகலாம்.

- இடைவேளை...

இதற்கு என்ன சிகிச்சை?

சிகிச்சை முறைகள் காரணத்தைப் பொறுத்தே அமையும். உடல்ரீதியான காரணங்களுக்கு மருந்து, மாத்திரை, அறுவைசிகிச்சை தேவைப்படும். இதுவே மனரீதியான காரணமாக இருந்தால், சைக்கோதெரப்பி மற்றும் செக்ஸ் தெரப்பி தேவைப்படும். சில ஆண்களுக்கு எதுவும் பலன் அளிக்க இயலாத சூழலில் செயற்கை (Vibrator, Electro ejaculator) உபகரணங்கள் மூலம் விந்து வெளியேறவைக்கலாம்.