Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

வாயுவைத் தருமா வாழைக்காய்?

 சத்யா, திண்டுக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'நான் கல்லூரி மாணவி. வாழைக்காயில் வாயுத் தொல்லை அதிகம் என்று வீட்டில் சமைப்பது இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த வாழைக்காயில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிடக்கூட 'வேண்டாம்’ என்று மறுக்கிறாள் என் அம்மா. வாழைக்காயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன.  வாயுத் தொல்லை என்று சாப்பிடாமல் இருப்பது சரியா?  ப்ளீஸ் விளக்குங்கள்?'

டாக்டர் கனிராஜா,  சித்த மருத்துவர், அரசு சித்த மருத்துவமனை, நெல்லை.

'உடல் என்பது வாத, பித்த, கப நாடிகளைக் கொண்டது. இதன் தன்மைக்கு ஏற்ப உடலில் பிரச்னைகள் வரலாம். எல்லோருக்குமே எப்படி சர்க்கரை நோய் வராதோ, அதுபோல எல்லோருக்குமே வாயுத்தொல்லை ஏற்படுவது கிடையாது. அதனால், அனைவரும் எல்லா காய்கறிகளையும் சாப்பிடலாம். உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது நோய் ஏற்படுவதுபோல சிலருக்கு வாழைக்காயானது வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், எதையும் சாப்பிடாமல் அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிலும், இயற்கையானதும் உடலுக்குச் சக்தி கொடுக்கக் கூடியதுமான வாழைக்காயைச் சேர்த்துக்கொள்வதில் தவறே இல்லை. அதனைச் சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மட்டும் தவிர்த்து விடுவது நல்லது. மற்றபடி வீண் பயத்துக்காக வாழைக்காயை மட்டும் அல்ல வேறு எந்தக் காயையும் தவிப்பது நல்லது அல்ல.'

கேள்வி - பதில்
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

வயதானாலும் வருமா சந்தேகம்?

 பெயர் வெளியிடாத வாசகர். திருச்சி

'எனக்கு வயது 45. என் மனைவிக்கு வயது 40. வாரம் இருமுறையாவது தாம்பத்தியத்தில் ஈடுபடுவோம். ஆனாலும் கடந்த ஒரு வருடமாக என் மனைவி என் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுகிறாள். எரிந்து விழுகிறாள். என் மீது எந்த தவறும் இல்லை. இந்தப் பிரச்னையால் சிலநேரங்களில் தாம்பத்திய உறவும் பாதிக்கிறது. இதற்கு என்ன தீர்வு?'

கேள்வி - பதில்

டாக்டர் வி.ராமானுஜம், மனநல மருத்துவர், மதுரை

'தாம்பத்திய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. மனமும் உடலும் சம்பந்தப்பட்டது. மனதும் உடலும் இணைந்தால் மட்டுமே திருப்தியான தாம்பத்திய உறவு கிடைக்கும். உங்கள் தரப்பில் தவறு ஏதும் இல்லை என்கிறீர்கள். உங்கள் மனைவியிடம் கேட்கும்போதுதான், உங்களிடம் உள்ள பிரச்னை பற்றி தெரியும். எனவே, முதலில் உங்கள் மனைவியிடம் மனம்விட்டு பேசி என்ன பிரச்னை என்று கண்டறிந்து சரிசெய்யுங்கள். அப்படியும் பிரச்னை தீரவில்லை எனில், மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடுவது பற்றி யோசிக்கலாம். பொதுவாக இந்த வயதில்தான் பெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவில் ஆண் சரியாக ஈடுபட முடியவில்லை எனில், பெண்களுக்கு கோபம் வரும். கணவனுக்கு வெளியில் எங்கோ சந்தோஷம் கிடைக்கிறதோ என்று, சந்தேகம் ஏற்படும். சண்டையில் பெண் பயன்படுத்தும் சின்னச்சின்ன வார்த்தைகள்கூட அவரது கணவருடனான தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்கும். தாம்பத்திய உறவின்போது, மனைவி சொன்ன அந்த வார்த்தை கணவன் நினைவுக்கு வந்து சரியாக இயங்க முடியாமல் போகலாம். எனவே, முதலில் உங்கள் மனைவியுடன் கலந்து பேசி தீர்வு காண முயற்சியுங்கள்!'

கேள்வி - பதில்
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

கருத்தடை ஆபரேஷனுக்குப் பிறகு  கரு உருவாக வழி உண்டா?

ஜி.சரளா, திருச்சி

எனக்கு இது தலைப்பிரசவம். குழந்தை பிறந்ததும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என நானும் என் கணவரும் முடிவுசெய்துள்ளோம். ஒருவேளை எதிர்காலத்தில் மேலும் ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தால், குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

கேள்வி - பதில்

டாக்டர் தீபா கிருஷ்ணன், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஐவி.எஃப் ஆலோசகர், கரூர்

தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நிச்சயம் கருத்தரிக்க முடியும். கருத்தடை அறுவை சிகிச்சையின்போது கருமுட்டை, விந்தணு சந்தித்து கரு உருவாகும் ஃபெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்த ஃபெலோபியன் குழாயைக் கத்தரித்து அதன் முனைகளில் முடிச்சுகள் போடப்படுகின்றன. அதனால் குழந்தைப்பேறு வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஒருவேளை மீண்டும் குழந்தை வேண்டும் என்று நினைத்தால் முடிச்சு பிரிக்கப்பட்டு குழாய்களை ஒன்றுசேர்த்துத் தைக்கும் அறுவைசிகிச்சை முறையும் உள்ளது. இந்த சிகிச்சை மேற்கொண்டாலும், கருக்குழாய் இணைப்பு எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், கர்ப்பம் தரிக்க விரும்புகிறவரின் வயது மற்றும் உடல் நலத்தைப் பொருத்துதான் மீண்டும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அமையும். இதற்கு மாற்றாக ஐவிஎஃப் எனப்படும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். இதில் கருமுட்டையானது வெளியே எடுக்கப்பட்டு, நேரடியாகக் கருப்பையில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்து கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் காலமும், வலியும், செலவும் குறைகிறது. அதிகப்பட்சமாக 42 முதல் 45 வயதினர் வரை இந்த மாதிரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.