Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:
மனமே நலமா?

னநலப் பிரச்னைகள் வருவதற்கு உடல், மனம், சமூகம் என

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று காரணங்கள். மனநலப் பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பிரச்னை எப்படி சமூகத்தில் பிரதிபலிக்கிறது, மற்றவர்கள் அவர்களை எப்படிப் பார்க்கின்றனர், இதற்கு என்னதான் தீர்வு என்பது குறித்து தெளிவுபட நீங்கள் தெரிந்துகொள்ளும் புதிய பகுதி இது. 

இனி ஒவ்வொரு இதழிலும் மனநல மருத்துவர் செந்தில்வேலன், தன்னிடம் வந்த நோயாளிகள் பற்றிய அனுபவங்களைக் கதையாகச் சொல்கிறார். இதற்கான தீர்வுகளை வாசகர்களான உங்களிடம் இருந்தே வரவேற்கிறோம். இறுதியில் மனநல மருத்துவரின் ஆலோசனையும் இடம் பெறும்.

மனதைப் படிக்கலாம் வாருங்கள்...

'இளம் பெண்ணை அவரது கணவர் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒருவித சோகமும் பயமும். அந்தப் பெண்ணின் கணவர் என்னிடம், 'திடீர் திடீர்னு தலை சுற்றிக் கீழே விழுந்துடறா. எவ்வளவோ சிகிச்சை கொடுத்தும் சரியாகலை. கடைசியில்தான் உங்ககிட்ட அழைச்சிட்டு வந்திருக்கேன்’ என்றார். இருவரிடமும் தனித்தனியாகப் பேசும்போது, அந்தப் பெண்ணின் கடந்த கால வாழ்க்கையில் பெரும் குழப்பம் தொடர்ந்து இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண், கல்லூரி விடுதி ஒன்றில் தங்கி பி.எஸ்.சி. இரண்டாம்

மனமே நலமா?

ஆண்டு படித்திருக்கிறார். அதே கல்லூரியில் படித்துவந்த சீனியர் மாணவர் ஒருவர் இந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லியிருக்கிறார். காதலை அந்த பெண் நிராகரித்தாலும், விடாமல் தொடர்ந்து வற்புறுத்தி இருக்கிறார் அந்த சீனியர். இந்தப் பெண்ணும் பிடிகொடுக்காமல் போக, 'சரி இனி நான் உன்னைக் காதலிக்கும்படி கூற மாட்டேன். நல்ல நண்பர்களாக இருப்போம்’ என்று கூறி இருக்கிறார்.

பிறகு, இந்தப் பெண்ணின் நட்பு வட்டத்தில் அந்த சீனியர் மாணவனையும் சேர்த்திருக்கிறார். நாட்கள் செல்லச் செல்ல அந்த சீனியர் மாணவரின் வீட்டுக்கு சென்று வரும் அளவுக்கு ஆழமான நட்பு தொடர்ந்திருக்கிறது. ஆனால், அந்த மாணவரோ வீட்டில் உள்ள அனைவரிடமும் 'இவளைத்தான் நான் காதலிக்கிறேன். இவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று கூறியிருக்கிறார். இது இந்தப் பெண்ணுக்குத் தெரியாது. வீட்டாரும் அதை ஏற்றுக்கொண்டு அந்தப் பெண்ணின் மீது பாசத்தைப் பொழிந்திருக்கின்றனர்.

சீனியர் மாணவன் தனது பிறந்த நாளன்று கோயிலுக்குச் செல்வோம் என்று அந்தப் பெண்ணை அழைத்திருக்கிறான். சினிமாவில் காட்டுவதுபோல், அந்தப் பெண் கண்களை மூடி சாமி கும்பிட்டும்போதே தாலியைக் கட்டிவிட்டான். உடனே, கோபத்துடன் அவன் கட்டிய தாலியை அங்கேயே கழற்றி வீசிவிட்டு ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள். எதுவும் நடக்காததுபோல், கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடர்ந்திருக்கிறாள்.

அதன் பிறகு அந்த சீனியர் மாணவனுடன் பேசுவது இல்லை, நேருக்கு நேர் பார்ப்பதையும் தவிர்த்துவிட்டாள். ஆனால், நண்பர்களோ 'தாலி கட்டியது கட்டியதுதான், இப்படிக் கழற்றி எறிந்துவிட்டு வந்துவிட்டாயே... அவனுக்கு ஏதாவது ஆகப்போகிறது’ என்று பயம் காட்டியிருக்கிறார்கள். இவை எதையும் இந்தப் பெண் பொருட்படுத்தவில்லை.

இந்தப் பெண் கல்லூரி கடைசி வருடம் படிக்கும்போது, அவன் படிப்பை முடித்து வேறு ஓர் ஊருக்குச் சென்று முதுநிலைப் படிப்பில் சேர்ந்திருக்கிறான். சில நாட்களில் விபத்து ஒன்றில் அவன் உயிரிழந்துவிட்டான். உடனே, அந்த மாணவனின் பெற்றோர் இந்தப் பெண்ணிடம் வந்து, 'தாலி கட்டியதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவன் உன் கணவன்தான். நீ வந்து சில சடங்குகள் செய்தால்தான் அவன் ஆன்மா சாந்தியடையும்’ என்று கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, வெள்ளைப் புடவை கட்டி, பொட்டு அழித்து, வளையல் உடைத்து சில சடங்குகள் செய்திருக்கின்றனர். இவை எதுவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியாது.

மனமே நலமா?

அதன் பிறகு அந்தப் பெண் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தாலும், அவளால் முன்பு போல படிக்க முடியவில்லை. தாலியைக் கழற்றி வீசியதால்தான் அவன் இறந்துவிட்டான் என்ற எண்ணம் அந்தப் பெண்ணின் மனதில் ஆழப் பதிந்து, எப்போதும் அழுதுகொண்டே இருந்திருக்கிறாள். வெள்ளை ஆடைகளை உடுத்த ஆரம்பித்திருக்கிறாள். நண்பர்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் மாறவில்லை. இதனால் இவளின் நிலையைப் பார்த்து வேதனையடைந்த நண்பர் ஒருவரே இவளை மணக்க விரும்பி, இரு வீட்டில் பேசி திருமணம் செய்துகொண்டனர்.

இதன் பிறகும் அந்தப் பெண்ணின் மனநிலையில் மாற்றம் இல்லை. இல்லற வாழ்வும் இனிமையாக இல்லாமல், தினமும் அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அந்தப் பெண், மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். பிரச்னை பெரிதாகி திடீர் திடீர் என மயக்கம் போட்டிருக்கிறார். மருந்து மாத்திரைகளால் திடீர் மயக்கம் ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்பதால், என்னிடம் அழைத்துவந்தனர்.'' - மருத்துவர் விரிவாகச் சொல்லி முடித்தார்.  

இந்தப் பிரச்னைக்கு யார் காரணம்? இந்தப் பெண் இனி செய்ய வேண்டியது என்ன? இந்த நிலையில் நீங்கள் இருந்தால், என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்.  தெளிவாக எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் நல்ல ஆலோசனைகளுக்குப் பரிசு உண்டு.  

அடுத்த இதழில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தருவார் மருத்துவர் செந்தில்வேலன்.  

சந்திப்பு: பா.பிரவீன்குமார்

மனமே நலமா?

 மனதுக்கு மருந்திடும் மருத்துவர்

கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் மனநல மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் செந்தில்வேலன். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். மனநல மருத்துவத்திலும், குடிபோதை சிகிச்சையிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோதும் அதை மறுத்து, தன் சொந்த ஊரான கரூரில் 'விடியல்’ என்னும் உளவியல் மையத்தை நடத்திவருகிறார். அரசு சார்பிலான கரூர் மாவட்ட அரவாணிகள் வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாரியம் போன்ற அமைப்புகளில் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட செய்தவர்.