Published:Updated:

புற்றுநோய், இருதய நோயால் பாதிக்கப்பட்ட 3 பேரின் சிகிச்சைக்கு ரூ.2.25 லட்சம் பிரதமர் நிவாரண நிதி!

சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையின் பேரில் புற்றுநோய் மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் மருத்துவ சிகிச்சைக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2.25 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையின் பேரில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட திருவிதாம்கோட்டையை சேர்ந்த சுபைதா பீவியின் சிகிச்சைக்காக 75 ஆயிரம் ரூபாயும், திங்கள்சந்தையை சேர்ந்த சஜீனா பீவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாயும், நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த பரிமளன் என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ரூ.2.25 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் பொன்.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையின் பேரில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இதுவரை 15 பேருக்கு 17.63 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.