கடந்த இதழ் கதைச் சுருக்கம்

வெளிநாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர். தன் நண்பனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், தன் மனைவியும் அப்படி சென்றுவிடக் கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார் கணவன். இதனால் மனைவியின் செல்போன் ஆரம்பித்து உள்ளாடை வரை பரிசோதனை செய்யும் அளவுக்கு அவரது சந்தேகம் சென்றது. ஒருகட்டத்தில் மனைவியை வேறு நபர்களுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது, அடிப்பது என்று பிரச்னை முற்றி இருக்கிறது. மகனுக்குப் பிரச்னை இருப்பதை உணர்ந்த தாய், அவரை இந்தியாவுக்கு வரவழைக்கிறார். சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவு, அறையைப் பூட்டி சாவியைத் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்கிறார் கணவன். அறையில் கொசுவலையைக் கட்டி, அறையில் இருந்த எல்லா கொசுக்களையும் கொல்கிறார். அடுத்த நாள் காலையில் கொசு வலைக்குள் இரண்டு முன்று கொசுக்கள் இருக்கவே, மனைவி எங்கோ வெளியே சென்று வந்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு அடிக்கிறார். மனைவிக்குப் பலருடன் தொடர்பு உள்ளது, ஆனால் கையும் களவுமாகப் பிடிக்க முடியவில்லையே என்று டாக்டரிடம் ஆதங்கப்படுகிறார்.

மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றின் இரண்டாம் நிலைப் பொறியாளர் ராஜேஷ். நடுத்தரக் குடும்பம். முதல் தலைமுறைப் பட்டதாரி. விரும்பியபடியே கப்பலில் வேலை கிடைத்தது. நேர்மையுடன், கடமை தவறாது, எந்த காரியத்தையும் கச்சிதமாய் முடிப்பார் என்பதால், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் கப்பல் நிறுவனத்தினரின் நன்மதிப்பையும் பெற்றார். நிர்வாகம் அவருக்கு அடுத்தபடியான பதவி உயர்வை அளித்தது.

கப்பலில் நான்கு மணி நேரம் வேலை, நான்கு மணி நேரம் ஓய்வு என்று பணி இருக்கும். நான்கைந்து பொறியாளர்கள் இருப்பார்கள். கப்பலை செலுத்துவதும் கண்காணிப்பதும் ராஜேஷின் வேலை.

ஒருநாள் கப்பலை செலுத்திக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு படகு எதிர்பாராமல் அருகில் வந்தது. ஆனாலும், விபத்து ஏதும் நடக்கவில்லை. இருந்தாலும், விபத்து ஏதும் நடந்திருக்குமோ என்ற படபடப்பால் ராஜேஷூக்கு பகீரென வயிற்றைக் கலக்கி, நெஞ்சை அழுத்துவதுபோல் ஆகிவிட்டது. 'அய்யோ படகை இடிச்சிட்டோமோ?’ என்று பயந்து, கப்பலின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தார். படகு அதன் வழியில் சென்றுகொண்டிருந்தது. இருப்பினும் அவரால் தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்லை. மற்றொரு பொறுப்பாளரை வரவழைத்து அவரைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து ராஜேஷால் வழக்கமாக வேலையில் ஈடுபட முடியவில்லை. 'ஏதேனும் சிறிய படகு மீது கவனக்குறைவால் மோதிவிடுவோமோ, அதனால் யாராவது இறந்துவிடுவார் களோ’ என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார். 'ஏன் இவ்வளவு டென்ஷன், ஒரு நாள் நடந்ததுக்குப்போய் இப்படித் தினமும் பயப்படுறியே. தைரியமாக் கப்பலை ஓட்டு’ என்று உடன் இருந்தவர்கள் கூறியும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், கப்பலை முன்னால் பார்த்துச் செலுத்துவதற்குப் பதில் ஏதேனும் படகை இடித்துவிட்டோமோ, படகு ஏதேனும் கவிழ்ந்துகிடக்கிறதா என்று கப்பலின் மேல் தளம், பக்கவாட்டுக்குச் சென்று பார்ப்பது, அடியில் ஏதேனும் மாட்டிக்கொண்டு சப்தம் வருகிறதா என்று கப்பலின் தரைத்தளத்துக்கு அடிக்கடி செல்வது என்று இருந்திருக்கிறார். பிரச்னை முற்றி அவரால் கப்பலை செலுத்தவே முடியாத நிலை ஏற்பட, வீட்டுக்குச் சென்று சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வரும்படி கப்பல் நிர்வாகம் அவரை அனுப்பியது.

வீட்டிற்கு வந்தும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வீட்டில் நடக்கும்போது, 'எறும்புகளை மிதிச்சுட்டா என்ன பண்றது?’ என வித்திய£சமான பயம் வந்தது. இதனால், மெல்லிய துடைப்பத்தால் பெருக்கியபடியே நடந்திருக்கிறார். சாப்பாட்டில் ஏதேனும் பூச்சி செத்துக் கிடக்கிறதா என்று லென்ஸ் வைத்து ஆராய்ந்து பார்த்து அதன் பிறகே சாப்பிடுவார். கையில் நிறையக் கிருமிகள் இருக்கின்றன என்று பயந்து கையைப் சோப் போட்டு கழுவிக்கொண்டே இருந்திருக்கிறார்.

'இது முட்டாள்தனம், இப்படி நினைக்கக் கூடாது’ என்று தலைகீழாக நின்றாலும், அவரால் அந்த நினைப்பை மாற்ற முடியவில்லை. மனதையும் மீறி, 'உயிர்களைக் கொன்றுவிடாதே, ஜாக்கிரதையாக இரு’ என்ற எண்ணம் மட்டும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது.

வீட்டில் இருந்தால்தான் இப்படி என்று பைக்கில் வெளியே சென்றாலும் யாரையாவது மோதிவிடுவோமோ என்ற பயம் ஏற்பட, அதைத் தவிர்த்திருக்கிறார். அவரது அப்பா எங்கேயாவது அழைத்துச் சென்றாலும், வழியில் யார் மீதாவது மோதியிருக்கிறோமா என்று மீண்டும் மீண்டும் வந்த பாதையிலேயே சென்று பார்த்திருக்கிறார்.

ராஜேஷூக்கு என்னதான் பிரச்னை? பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துவது தவறா? ராஜேஷூக்கு ஓய்வு மட்டும் போதுமா? உங்கள் கருத்துக்களை டாக்டர் விகடனுக்கு எழுதி அனுப்புங்கள். ராஜேஷூக்கு ஏற்பட்ட பிரச்னை, அதை சரிசெய்த விதம் பற்றி அடுத்த இதழில் டாக்டர் செந்தில்வேலன் விளக்குவார்.

டாக்டர் செந்தில்வேலன் பதில்

இவருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் இயல்பானது அல்ல. கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீதும் சந்தேகம் சூழ்நிலையைப் பொருத்து வரலாம். சில நேரங்களில் அது உண்மையாகக்கூட இருக்கலாம். உண்மை இல்லாதபட்சத்தில் ஒருவர் தவறுதலாக சந்தேகப்படும்போது, அதை நாம் தகுந்த ஆதாரத்தோடு புரியவைத்தால் அந்த சந்தேகம் நீங்கிவிடும். ஆனால் சந்தேகமே ஒரு நோயாக மாறும்போது, எத்தனை விளக்கம் கொடுத்தாலும், ஆதாரங்களைக் காட்டினாலும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நோயாளியிடம், அவர் மனைவி 'நான் செத்தாலாவது நம்புகிறீர்களா?’ என்று கேட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போதுகூட அவர், 'கையும் களவுமா மாட்டிக்கிட்டதால்தான் தற்கொலை செய்துட்டா’ என்று சொல்வாரே தவிர, 'அய்யய்யோ மனைவியைப் பற்றி தவறாக நினைச்சிட்டோமே’ என்று வருத்தப்பட மாட்டார். யாராவது ஆண்கள் அவர் மனைவிக்கு சாதகமாகப் பேசினால், அவர்களையும் அவர் மனைவியுடன் தொடர்புபடுத்திப் பேச ஆரம்பித்துவிடுவார்.

இவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு டெல்யூஷனல் டிஸ்ஆர்டர் - இன்பிடிலிட்டி (delusional disorder- infidelity) என்று பெயர். அதாவது, வாழ்க்கைத் துணை மீதான சந்தேக நோய். இந்தமாதிரியான நோயாளிகளுக்கு, இந்த வாழ்க்கைத் துணை மீதான சந்தேகத்தைத் தவிர, வேறு எந்தவிதமான மனநோய் அறிகுறியும் இருக்காது.

தவறான நம்பிக்கையால் அவரும் துன்பத்தை அனுபவித்துவருவதைப் புரிந்து அவருக்கு ஆதரவாகப் பேசி, சந்தேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டது. மேலும், மிகக் கடினமாக இருந்தாலும் சைக்கோதெரப்பி உள்ளிட்ட கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவரை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தோம். நீண்ட நாட்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் தற்போது நல்ல மனநிலையுடன், மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.