Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

முன்கதைச் சுருக்கம்

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கப்பலில் கேப்டனுக்கு அடுத்தபடி மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு. ஒருநாள் கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சிறிய படகு ஒன்று, கப்பல் அருகில் வந்துவிட்டது. விபத்து நடக்கவில்லை என்றாலும், இதில் நிலைகுலைந்துபோனார் அவர். அன்று முதல் வேறு ஏதேனும் சிறிய படகை இடித்துவிடுவோமோ, அதன் மூலம் யாராவது உயிர் இழந்துவிடுவார்களோ என்று பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், கப்பலை செலுத்த முடியாத அளவுக்குப் பிரச்னை போனது. இதனால் அவருக்கு ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பியது கப்பல் நிறுவனம். வீட்டில், ஈ, எறும்பு போன்ற சிறிய உயிரினங்களைக் கொன்றுவிடுவோமோ... கையில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் சென்றால் அமிலத்தில் சிக்கி உயிர் இழந்துவிடுமோ என்று யோசிக்கும் அளவுக்கு பிரச்னை முற்றியது. கிருமிகளைக் காப்பாற்றுகிறேன் என்று விடாமல் கையைக் கழுவ ஆரம்பித்தார். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர் அவருடைய பெற்றோர்.

மனமே நலமா?
மனமே நலமா?

டுத்தர வயதுப் பெண்ணை அவருடைய கணவர், அப்பா மற்றும் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து இழுத்துவந்தனர். திமிறிக்கொண்டு இருந்தார் அந்தப் பெண். 'நான் செஞ்சதுல என்ன தப்பு?, நான் அப்படித்தான் செய்வேன், யாரும் என்னை எதுவும் கேட்க முடியாது' என்று கோபப்பட்டவரை அமைதிப்படுத்த மருந்து கொடுத்தேன். பின்னர், அவருடைய கணவர் பேசினார்.

'எனக்கு இப்போ 65 வயசு. எனக்கு ஏற்கெனவே முதல் மனைவி, பிள்ளைங்க இருக்காங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி விஆர்எஸ். வாங்கிட்டேன். குடும்பத்தில் பிரச்னை. அதனால், வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். நீ சாப்பாட்டுக்கு லாட்டரிதான் அடிக்கணும், அநாதைப் பிணமாத்தான் போவ’ என மனைவியும் பிள்ளைகளும் திட்டினாங்க. இது என் மனசுல பெரிய உறுத்தலா இருந்துச்சு.

இதை என் நண்பன்கிட்ட சொன்னேன். அவன், 'இவ்வளவுதானா, வேற ஒரு கல்யாணம் செஞ்சிகிட்டாப்போச்சு’னு ஐடியா கொடுத்தான். 'இந்த வயசுல கல்யாணமா? என்னை யார் கல்யாணம் செஞ்சுக்குவாங்க. சும்மா ஜோக் அடிக்காதே’னு சொன்னேன். அவன், 'நாளைக்கே பொண்ணுப் பார்க்கப்போறோம்’னு சொல்லிட்டுப் போயிட்டான். ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவளை, இரண்டாவதாக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். அப்போ, இவளுக்கு வயசு 17. அந்தக் குடும்பத்துக்கு நிறையப் பண உதவிகளும் செஞ்சேன். இப்ப எங்களுக்கு காலேஜ் படிக்கிற ஒரு மகன் இருக்கான்.  

மனமே நலமா?

இவள், ரொம்ப நல்ல டைப். 'மாமா... மாமா...’னு என்மேல் ரொம்பப் பாசமா இருப்பா. எதிர்த்து ஒரு

மனமே நலமா?

வார்த்தைகூட பேசினது இல்லை. நான் என்ன சொன்னாலும் செய்வா. தினமும், எனக்குக் கை, கால் அழுத்திவிட்டு, நான் தூங்கினதுக்கு அப்புறம்தான் தூங்குவா. நல்லபடியாத்தான் வாழ்க்கை போயிட்டிருந்துச்சு.

திடீர்னு, இரண்டு மாசத்துக்கு முன்னாடி இவளோட செயல்பாட்டில் மாற்றம். யாரையும் மதிக்கிறது இல்லை. எல்லாரையும் எடுத்தெரிஞ்சு பேசுறா. சரியாத் தூங்குறது இல்லை. எப்போபார்த்தாலும் போன்ல பேசிக்கிட்டு இருக்கா. ரொம்ப வேகமா இருக்கிறா. வண்டி வாங்கிக்கொடு, அதை வாங்கிக்கொடு, இதை வாங்கிக்கொடுனு தொந்தரவு செய்றா. எப்போ பார்த்தாலும் டி.வி.யில் காதல் பாட்டுக்களை சத்தமா வச்சு கேட்கிறா. வெளியே போனா, தேவையில்லாத பொருட்களை வாங்கிட்டு வந்திடுறா. பக்கத்து வீட்டுப் பையனோட வெளியில போறது வரதுனு இருந்தா. இப்படியெல்லாம் தப்பு செய்றோமேனுகூட அவளுக்குப் புரியுறது இல்லை. இதை நான் கண்டிச்சப்ப, எடுத்தெறிஞ்சுப் பேசினா. 'கிழட்டுப் பயலே, உனக்கு இந்த வயசுலப் பெண்ணு கேட்குதா? என் வாழ்க்கையையே சீரழிச்சிட்டே’னு திட்டிச் சண்டை போட ஆரம்பிச்சுட்டா.

பிரச்னையைக் கேள்விபட்டு இவளோட அப்பா பேச வந்தாரு. அவர் சொன்னதையும் கேட்காம, 'நான் அப்படித்தான் நடந்துப்பேன். என் வாழ்க்கையை சீரழிச்சுட்டு, என்கிட்ட வந்து பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’னு எல்லாம் பேசினா. ஒருகட்டத்தில பிரச்னை அதிகமாகி அப்பாவையே அடிக்க கை ஓங்கிட்டா. சரி, சண்டை போடுறதைவிட சரண் அடைஞ்சுடலாம்னு முடிவுசெஞ்சு, 'நான் செய்தது தப்புதான். அதுக்காக நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். பக்கத்துவீட்டுப் பையனோட தொடர்பை நிறுத்திடு’னு கால்லயும் விழுந்துட்டேன். ஆனா, வெளிப்படையா அந்த பையனோடயே தங்குற அளவுக்குப் போயிட்டா.

இந்த நேரத்துலதான், இவள் தம்பியோட ஃப்ரெண்ட் மூலமா உங்களைப் பத்தி கேள்விப்பட்டு, ட்ரீட்மென்ட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கோம்'' என்றார் பரிதாபமாக.

ஒரு பெண் தன் விருப்பப்படி வாழ நினைப்பது தவறா? அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை? உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புகள். பதில் அடுத்த இதழில்...

டாக்டர் செந்தில்வேலன் பதில்,

இவருக்கு வந்திருப்பது அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர் (OCD).இது ஒரு வகையான பதற்ற நோய். இந்த நோயானது ஒருவரது திறமை, ஆற்றலைப் பாதித்துவிடும். மனதுக்கு ஒவ்வாத, வேண்டாத, மனதை உறுத்தக்கூடிய, அருவருப்பான எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். தடுக்க நினைத்தாலும் முடியாது. முட்டாள்தனம் என்று தெரிந்தும் அந்த எண்ணத்தை மாற்ற முடியாது. இந்த எண்ணங்கள் என்பது தத்துவார்த்த ரீதியானதாகவோ, அருவெறுப்பானதாகவோ, முட்டாள்தனமாகவோ, சுத்தம் தொடர்பானதாகவோ, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பாலியல் உறவு தொடர்பானதாகவோ இருக்கலாம். சிலருக்கு, எங்கேயோ பார்த்த அருவெறுக்கத்தக்கக் காட்சி கண் முன் வந்து வந்து செல்வதாக இருக்கலாம். இதுபோல தோன்றும் எண்ணமானது ஒருகட்டத்தில் பெரிய உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், பயத்தையும் கொடுக்கும். தவறாக நினைத்துவிட்டோம் என்று அதைச் சரிசெய்ய, தோப்புக்கரணம் போடுவது, கன்னத்தில் போட்டுக்கொள்வது, சுவற்றில் முட்டிக்கொள்வது என்று தன்னைத் தானே வருத்திக்கொள்வார்கள். சுத்தம் தொடர்பான எண்ணம்கொண்டவர்கள் தொடர்ந்து கையைக் கழுவுவார்கள் அல்லது குளித்துக்கொண்டே இருப்பார்கள்.

சமூக, உடல்நிலை, மனரீதியான பாதிப்புகளால் மூளையில் 'செரட்டோனின்’ என்ற வேதிப் பொருள் குறைந்துவிடுவதால், இந்த வியாதி ஏற்படுகிறது. எனவே, இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு 'செரட்டோனின்’ அதிகப்படுத்தும் மாத்திரை மருந்துகளுடன், சில மன வழிப் பயிற்சிகளும் அளிக்கப்படும். சிலருக்கு இந்த நோய் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அவர்களுக்கு இந்த நோயுடன் எப்படி வாழ்வது என்று கற்றுக்கொடுக்கிறோம்.

கப்பல் செலுத்த முடியாமல், கையைக் கழுவிக்கொண்டே இருந்த இந்த நோயாளிக்கு நிறைய மருத்துவ சிகிச்சை, மாத்திரை மருந்துகள், நடத்தை மாற்று தெரப்பி (பிஹேவியர் தெரப்பி), மன வழி சிகிச்சைகள் அளித்தோம். தற்போது அவர் குணம் அடைந்து கப்பலில் வேலை செய்துவருகிறார். தொடர்ந்து மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டும் வருகிறார்.

மனமே நலமா?

 வாசகர்  கடிதங்கள்

அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் பாராட்டத்தக்கது. எந்த ஒரு உயிருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று அவர் நினைப்பது சரியாக இருக்கலாம். அதற்காக கிருமிகள் அளவுக்கு அந்த அன்பு சென்றிருக்க வேண்டாம். ஏதோ ஒரு விபரீதமான சம்பவம் நடக்கப்போவதாக அவர் எண்ணியிருக்கலாம்.  அந்த நேரத்தில் படகு மீது மோதுவது போல் ஒரு சூழ்நிலை ஏற்பட, அந்தச் சம்பவம் நடந்துவிட்டதாக நினைத்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இளகிய மனம், சட்டென ஒரு பாதிப்பைத் தாங்கிக்கொள்ளாது.    

- ஐ.சிவராமன், பொள்ளாச்சி.