Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்

சுவாசம் சீராக என்ன வழி?

என்.கார்த்திகேயன், ஈரோடு

'என்னுடைய அப்பாவுக்கு 52 வயது. சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்து, இப்போது விட்டுவிட்டார். சமீபகாலமாக இளைப்பு, இருமல் பிரச்னை அதிகமாக இருக்கிறது. மூச்சுவிட சிரமப்படுகிறார். மாத்திரை மருந்துகள் சாப்பிட்டும் கட்டுப்படவில்லை. இது என்ன பிரச்னை? ஆலோசனை கூறுங்கள்.'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேள்வி பதில்

ர..பிரபாகரன், நுரையீரல் நோய்கள் சிறப்பு மருத்துவர், மதுரை

'உங்கள் தந்தைக்கு சி.ஓ.பி.டி. (chronic obsessive pulmonary disease)எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 100ல் 95 பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாகவும், மீதி ஐந்து சதவிகிதம் பேருக்கு தொடர்ந்து தூசு நிறைந்த சூழலில் வேலை புரிவதால் ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இளைப்பு நோய் அதிகரித்துக்கொண்டே இருக்கும். மேலும் இருமல், அதிக சளி, ஆஸ்துமா போல் வீசிங் பிரச்னையும் இருக்கும்.

சி.ஓ.பி.டி. உள்ளதா என்பதை நுரையீரல் திறன் பரிசோதனை மூலம் கண்டறிவோம். ஸ்பைரோமெட்ரி என்ற கருவியைக் கொண்டு முதலில் பரிசோதித்து அவரது நுரையீரலின் திறனை கண்டறிவோம். சுவாசிக்கும் திறன் 12 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா என்றும், மிக மிகக் குறைந்த அளவு அல்லது அதிகரிக்கவே இல்லை எனில் அவர்களுக்கு சி.ஓ.பி.டி. உள்ளது என்றும் கண்டறிவோம். நுரையீரலின் திறனைப் பொருத்து மைல்ட், மாடரேட், சிவியர் என்று மூன்று வகையாகப் பிரிப்போம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் சி.ஓ.பி.டி.யைக் குணப்படுத்த முடியாது. இதுவரை நுரையீரலில் ஏற்பட்ட மாறுதல்களை சரி செய்ய முடியாவிட்டாலும், இந்த நோயால் ஏற்படக்கூடிய தொந்தரவுகளைக் கட்டுப்படுத்தவும், நுரையீரல் இன்னும் மோசம் அடையாமல் பாதுகாக்கவும் முடியும். எனவே, உங்கள் தந்தையை நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதியுங்கள்.'