Published:Updated:

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

Published:Updated:
##~##

'உடல் வலிகளைப் போக்குவதில், அக்குபங்க்சர் வைத்தியத்துக்கு ஈடில்லை. இதனால், அக்குபங்க்சர் உருளை, செப்பல், கற்கள், மேட் என அனைத்துப் பொருட்களும் இன்று கடைகளில் விற்பனையில் விண்ணை எட்டிக்கொண்டிருக்கிறன. அக்குபங்க்சர் வைத்தியம் மூலம், வலிகளை மட்டுமல்லாமல்; வேறு என்னென்ன நோய்களை தீர்க்கமுடியும் என்பதுகுறித்து... கரூரைச் சேர்ந்த அக்குபங்க்சர் நிபுணர் கே.செந்தில்குமார் விரிவாகப் பேசினார்.   

''அக்குபங்க்சர் மருத்துவ முறையில், ஊசியைக்கொண்டு ஒரு நோயையோ, வலியையோ குணப்படுத்தலாம் என்றாலும், வெறும் ஊசி எப்படி செயல்பட்டு  நோயைக் குணப்படுத்துகிறது என்பதில்தான் அக்குபங்க்சர் வைத்திய முறையே அடங்கி இருக்கிறது. அனைவருக்கும் ஏற்ற, சிறந்த சிகிச்சை முறை 'அக்குபங்க்சர்’. இதை 'குத்தூசி மருத்துவம்’ என்போம். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'போகர்’ எனும் சித்தர் கற்பித்ததை, நுட்பமாக ஆராய்ந்து 'அக்குபங்க்சர்’ என்ற மருத்துவ முறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

உலக நாடுகளில் உள்ள மக்களோடு சராசரி வயதை ஒப்பிடும்போது, சீனர்களின் சராசரி வயதுதான் அதிகம். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறை, மருத்துவ முறை இரண்டையுமே குறிப்பிடலாம். அவர்கள் முழுக்க முழுக்க அக்குபங்க்சர் முறையையே பின்பற்றுகின்றனர்''-என்ற செந்தில்குமார், அக்குபங்க்சர் சிகிச்சை முறையைப் பற்றி விவரித்தார்.

''நாம் சுவாசிக்கும்போது பிராண வாயுவுடன் பிரபஞ்ச உயிர்சக்தி, காற்று அறைகளை அடைந்து ரத்தத்தில் கலக்கும் போது 'உயிர்சக்தி’ உண்டாகிறது. இந்த உயிர்சக்தியை உடலுக்குள் எடுத்துச்

அக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்!

செல்லும் வேலையை, 'மெரிடியன்’ என்று சொல்லப்படும் 12 ஓடுபாதைகள் செய்கின்றன. இந்த ஓடுபாதையில் உயிர்சக்தி பயணம் செய்ய, உந்துதல் செய்வது அக்குப் புள்ளிகள். இந்தப் பாதையில் தடைகள் ஏற்படும்போது நோய் ஏற்படுகிறது என்கிறது அக்குபங்க்சர் தத்துவம். இந்தத் தடையை இரு கைகளிலும் உள்ள நாடிகளின் வழியாக கண்டறிந்து, சரியான அக்குப் புள்ளியைத் தேர்வுசெய்து, சக்தி ஓட்டத்தை சரிசெய்து நோயை குணமாக்குவதுதான் இந்த மருத்துவத்தின் அடிப்படை.

அக்குபங்க்சர் ஊசியின் மேற்பகுதியில், பல்வேறு உலோகங்கள் கலந்த காயில் ஒன்று சுற்றப்பட்டிருக்கும். இதன்செயல்பாடு முழுமை யான விஞ்ஞான அடிப்படையில் அமைந்து உள்ளது. இந்த காயிலை இயற்கையான காந்த அலைகள் கடக்கும்போது, அதில் 'மைக்ரோ’ அளவில் ஏ.சி. மின்சாரம் உருவாகிறது.  இந்த மைக்ரோ அளவிலான மின்சாரம் மறுபடியும் காந்த அலைகளாக மாற்றப்பட்டு, நம் உடலில் காந்த அலைகள் செலுத்தப்படுகின்றன.  

அக்குபங்க்சர் வாயிலாக நோய்கள் குணமாக்கப்படும்போது, அந்த நோய் மீண்டும் வருவதற்கு 10 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளது.  எந்தவித மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளாமல் மிகக் குறைந்த செலவில் நிவாரணம் பெறலாம்.  இதற்கு உணவுக் கட்டுப்பாடு, பத்தியம் அதிகம் இருக்க வேண்டியது இல்லை. எக்ஸ் ரே, ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகளுக்கு அதிகம் செலவு செய்யாமல், நோயாளிகளை சிரமப்படவைக்காமல் நோயைக் குணப்படுத்தமுடியும். ஒரு வியாதியைக் குணப்படுத்தும்போது, அதைச் சார்ந்துள்ள மற்ற நோய்களையும் ஆரம்ப நிலையில் உள்ள நோய்களையும் குணப்படுத்தலாம்.  இப்படி எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும்போது உடலினை சமச்சீரான நிலைக்குக் கொண்டுவந்து புத்துணர்ச்சி மற்றும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.  

அக்குபிரஷரைவிட அக்கு பங்க்சர் சிறப்பான பலனை தரக்கூடியது.  அக்குபங்க்சர் மருத்துவத்தின் மூலம் மனக் கட்டுப்பாடு உடல்கட்டுப்பாடு ஆகிய இரண்டையுமே சீராகவைக்க முடியும். அதிகபடியாக கழுத்து வலி, கை-கால் வலி, இடுப்பு வலி, உடல் பருமன், முடி கொட்டுதல் மற்றும் அழகு சார்ந்தப் பிரச்னைகள், மாதவிடாய் பிரச்னைகள், சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை, கண் பார்வை குறைபாடு, பெண்களின் முக அழகை மேம்படுத்துதல்... என நூற்றுக்கும் மேற்பட்ட வியாதிகளுக்கு அக்குபங்க்சர் மருத்துவமுறையின் மூலம் தீர்வு கிடைக்கும் என்கிறார் செந்தில் குமார்.

- பி. கமலா

படங்கள்: கு. கார்முகில்வண்ணன்