Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:
மனமே நலமா?
மனமே நலமா?

முன்கதைச் சுருக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 வயதானவர் ஒருவர், இளம் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்கிறார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்து, அவன் கல்லூரியில் படிக்கிறான். இந்த நிலையில், அந்தப் பெண்ணின் செயல்பாட்டில் மாற்றம். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது, திட்டுவது, தேவையில்லாதப் பொருட்களை வாங்கித் தரும்படி நச்சரிப்பது, பக்கத்து வீட்டு இளைஞனுடன் பழக்கம் என்று சென்றது. இதைக் கண்டித்தால் கணவரையே திட்டுகிறார்; தவறு என்று கூறிய தந்தையையே அடிக்கிறார்.' அவருக்கு மனநலப் பிரச்னை இருக்குமோ’ என்ற சந்தேகத்தில் அந்தப் பெண்ணை டாக்டர் செந்தில்வேலனிடம் அழைத்துவந்தார் கணவர். வந்த இடத்தில், 'நான் அப்படித்தான் இருப்பேன், அப்படி இருப்பதில் என்ன தப்பு?' என்று டாக்டரிடமும் தகராறு செய்கிறார்.

 தன் மனைவியை, சிகிச்சைக்காக என்னிடம் அழைத்துவந்திருந்தார் ஒருவர். அவர்களுடன் அழகான இரண்டு குழந்தைகளும், மனைவியின் தோழிகள் இருவரும் வந்திருந்தனர். அந்த நபர், 'ரொம்ப நாளா என் மனைவி ஒரு மாதிரி இருக்கா டாக்டர். அடிக்கடி அழறா, எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஒழுங்காச் சாப்பிடறதில்லை, சரியாப் பேச மாட்டேங்கிறா, எதையும் வெளியில் சொல்ல மாட்டேங்கிறா. அதனாலதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்' என்றார்.

மனமே நலமா?
##~##

அந்தப் பெண்ணுக்கு உள்ள பிரச்னை எனக்கு ஓரளவு புரிந்தது.  அவரை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் பேசினேன். 'நான் தப்புக்கு மேல தப்பு செஞ்சுட்டிருக்கேன் டாக்டர். என்கூட வேலை பார்க்கிறவர் அண்ணாமலை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துச்சு. ரொம்ப சோஷியலா, ஜோக்காப் பேசுவார். ஒரு கட்டத்தில் அவர்கூட பேசாம, அவரைப் பார்க்காமல் என்னால இருக்க முடியலை. அவர்மேல எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனா, எங்களுக்கு இடையே எந்தத் தப்பும் நடக்கலை. அவரும் அதுபோல நடந்துக்கலை.

எங்கே விபரீதமா நடந்திடுமோனு பயந்து, அவரை சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு நச்சரிக்க ஆரம்பிச்சேன். நானே ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணமும் செஞ்சுவெச்சேன். திருமண நாள் நெருங்க நெருங்க பயங்கரப் படபடப்பு, எதிலுமே ஈடுபாடு இல்லை.   ஞாபகமறதி, எந்த வேலையும் தெளிவாகச் செய்ய முடியலை.  கோபம், அழுகை, யாரைப் பார்த்தாலும் எரிச்சலா வந்தது. அவர் அந்தப் பெண்ணுக்குத் தாலி கட்டிய பிறகுதான் 'அப்பாடா நிம்மதி’னு பெருமூச்சுவிட்டேன். ஆனால், அவருக்கு முதல் இரவு, மனைவி, குடும்பம்னு போறதைப்பார்த்து என் மனசு தாங்கலை. விவரம் புரியாமல் அவருக்குத் திருமணம் செஞ்சுவெச்சு, பெரிய தப்பு செஞ்சிட்டோமோனு எண்ணம் ஏற்பட்டது. அவரையே நினைச்சுக்கிட்டு சாப்பிடாம, தூங்காம இருந்தேன். என் கணவர் கேட்டா, எதையாவது சொல்லிச் சமாளிப்பேன்.

என் நிலைமையை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க முடியலை. அவர்கிட்டேயும் சொல்ல முடியலை. இந்த நேரத்திலதான் என் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்கிட்டேயும் இதுபற்றிப் பேசினேன். அவங்க, 'உனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைங்க இருக்காங்க. இதெல்லாம் தப்பு,  அவனை மறந்திடு’னு புத்திமதி சொன்னாங்க. எல்லாம் புரியுது; ஆனா, மனசு கேட்க மாட்டேங்குதே. அவரை நினைச்சு நினைச்சு அழுது இரண்டு வாரத்துல 5-6 கிலோ எடை குறைஞ்சுட்டேன். என் நிலைமையைப் பார்த்த என் தோழிங்க, அண்ணாமலைகிட்டப் பேசினாங்க. அவரும் வந்து, 'நாம அப்படியா பழகினோம். நம்ம நட்பு தொடரும்’னு அட்வைஸ் செஞ்சார். ஆனாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றார்.

பிறகு, அந்தப் பெண்ணின் தோழிகளிடமும் பேசினேன்.   'டாக்டர், ஆசை 60 நாள், மோகம் 30 நாள்’னு சொல்வாங்க. எந்த ஒரு பொருளும் நமக்குக் கிடைக்கிற வரைக்கும்தான் ஆசை இருக்கும். கிடைச்சுட்டா அதைப்பற்றி நினைக்க மாட்டோம். அதேபோல, இவள் அவனையே நினைச்சிட்டு இருக்கிறது வெறும் ஈர்ப்புதான். அதனால ஒருமுறை அவனோட சேர்ந்து இருந்துட்டா, அதுக்கு அப்புறம் அந்த ஈர்ப்பு போயிடும்னு நினைச்சோம். இதை ஒரு ட்ரீட்மென்டா நினைச்சு, அவங்க ரெண்டு பேரையும் கொடைக்கானலுக்கு நாங்களே அனுப்பிவச்சோம். ஆனா, பிரச்னை இன்னும் அதிகமாயிடுச்சு. இப்ப, அவனோட தொடர்ந்து சேர்ந்து இருக்கணும்னு அடம்பிடிக்கிறா. 'தப்பு செஞ்சுட்டேன்.  தற்கொலை செஞ்சுக்கணும்’னு சொல்றா. சதாசர்வ காலமும் அவனைப் பத்தியே நினைச்சு குழம்பிட்டு இருக்கா. அதனால ஏதாவது தப்பா முடிவெடுத்திடுவாளோனு பயமா இருக்கு'' என்றனர்.

அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புதான் என்ன? உயிர்த் தோழிகள் செய்தது சரியா? இது பற்றி எழுதியனுப்புங்கள்.

அந்தப்  பெண்ணுக்கு என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தப்பட்டார் என்பது பற்றி அடுத்த இதழில் விளக்கமாகப் பார்க்கலாம்.

மனமே நலமா?

வாசகர் கடிதம்

வயதானவரைத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் என்ற கோபம், வெறுப்பு, குறிப்பிட்டக் காலத்துக்குப் பிறகு வெடித்துள்ளது. அதனால்தான், தன் 'வாழ்க்கையையே வீணடித்துவிட்டாரே’ என்று அப்பாவையே அடிக்கவும் துணிந்திருக்கிறார். நடுத்தர வயதைக் கடக்கும் பெண்களுக்கு, கணவரின் அருகாமை அவசியம் தேவை. கணவரின் அன்னியோன்னியம் குறையும்போது, மனம் அலைபாயத்தான் செய்யும் அந்தத் தருணத்தில் மனதைக் கட்டுக்குள்வைப்பதுதான் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும். கல்லூரியில் படிக்கும் மகனின் நிலையை விளக்கி, கணவர் அன்பால் அவரைத் திருத்தலாம். முடியாதபட்சத்தில் மனரீதியான கவுன்சிலிங் கொடுத்து, பெண்ணின் மனநிலையை மாற்றுவதன் மூலமே அழகான குடும்பத்தில் திரும்பவும் மகிழ்ச்சியைத் தக்கவைக்கமுடியும்.  

- ஜெயஸ்ரீ, திருநெல்வேலி

டாக்டர் செந்தில்வேலன் பதில்

 'இந்தப் பெண்ணின் செயல்பாட்டை ஒழுக்கம் சம்பந்தமான பிரச்னையாக சமூகம் பார்க்கிறது. ஆனால், இது ஒழுக்கம் சம்பந்தமான பிரச்னை இல்லை. குடும்பத்தைவிட்டு வேறு ஓர் ஆணோடு அல்லது பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்போது, அதை ரகசியமாகத்தான் செய்வார்கள். ஆனால், இந்தப் பெண்ணோ மிக சாதாரணமாக, எந்த பயமும் இன்றி, குற்ற உணர்ச்சியின்றி, அத்தனை பேருக்கும் தெரிவதுபோல செய்திருக்கிறார். இது தவிர, பயங்கரமான வேகம், அதிக சுறுசுறுப்பு, பொருட்களை வாங்கிக் குவிப்பது, எல்லா சொந்தபந்தங்களையும் தரக்குறைவாகப் பேசுவது, அடிக்கக் கை ஓங்குவது போன்ற விஷயங்களும் அந்தப் பெண்ணிடம் இருந்ததால்தான், இதை 'மன நோய்’ என்ற வரையறைக்குள் கொண்டுவந்தோம்.

இந்த மன நோய்க்கு 'மேனியா’ (மன எழுச்சி) என்று பெயர். அந்தப் பெண்ணை உள்நோயாளியாகச் சேர்த்து, தீவிர மன நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அதுவரை தன்னுடைய கணவரை, 'வாடா, போடா’ என்று திட்டியவர் ஏழாவது நாள்தான் தூங்கி எழுந்திருந்து, 'மாமா எதுக்கு இங்கே வந்திருக்கோம்?, ஏன் என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?’ என்று கேட்டார். நடந்தது எதுவும் அவருக்கு ஞாபகம் இல்லை. தொடர்ந்து அவருக்கு மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டன. கூடவே, 'சப்போர்ட்டிவ் சைக்கோதெரப்பி’ என்ற மனநல கவுன்சிலிங்கும் தொடர்ந்து கொடுத்தோம்.  ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நல்லபடியாக கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார்.