Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்

Published:Updated:

என்.சிவசங்கர், விழுப்புரம்

'வெயில் காலம் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் என் மகனுக்கு அதிகமாக வியர்க்கிறது. வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதற்குள், குளித்ததுபோல் நனைந்துவிடுகிறான். இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியுமா?''

கேள்வி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் எஸ். உமா கண்ணன், தோல் நோய் சிறப்பு மருத்துவர், தேனி.

''தைராய்டு அதிகமாகச் சுரப்பது, உடல் அமைப்பு, அதிக கவலை அல்லது பற்றம் காரணமாக உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் இப்படி அதிக அளவில் வியர்வை சுரக்கலாம்.  தோல்நோய் சிகிச்சை மருத்துவரை அணுகி எதனால் வியர்வை அதிகமாக சுரக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். இதைக் கட்டுப்படுத்த மருந்து - மாத்திரை உள்ளன. இயல்பாகவோ ஒருவருக்கு அதிக அளவில் வியர்வை சுரக்கும் உடல் அமைப்பு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பிரத்யேக மருந்து ஒன்றை தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் தடவிக்கொள்ள வேண்டும். இதில் கட்டுப்படவில்லை எனில், வியர்வைத் துளைகளை அடைக்கும் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளலாம். பதற்றம், மனக்கவலை பிரச்னை உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டாலே பிரச்னையைத் தவிர்க்கலாம். வியர்வைப் பிரச்னை உள்ளவர்கள் உடலில் உள்ள நீரின் அளவு வேகமாகக் குறையும். இதைத் தவிர்க்க போதிய அளவு நீர் அருந்த வேண்டும். தினமும் இளநீர் குடிப்பது நல்லது. உப்புடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்துவது நல்லது. இறுக்கமான உடை தவிர்த்து, மெல்லிய பருத்தி ஆடையைப் பயன்படுத்தவேண்டும். கிழங்குகள், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள் தவிர்த்து, காய்கறிகள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வியர்வையுடன் ஏதேனும் தோல் பாதிப்பு இருந்தால், ஆன்டி பாக்டீரியல் பவுடரைப் பயன்படுத்தலாம்'.