சென்ற இதழ் கதை சுருக்கம்

கல்லூரியில் படித்துவந்த கமலேஷ§க்கு, சில நாட்களாக மூச்சுத்திணறல், திடீர் திடீரென மயங்கி விழும் பிரச்னை. மருத்துவப் பரிசோதனையில் எல்லாம் இயல்பாக இருந்தது. ஆனாலும், மூச்சுத்திணறல், மயக்கம் போட்டு விழும் பிரச்னை மட்டும் சரியாகவில்லை. பேய் பிடித்திருக்குமோ என்று நினைத்து கோயில் பூசாரியிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு, மந்திரிக்கும்போது கமலேஷின் பேச்சு, நடவடிக்கை மாறுகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இறந்த கமலேஷின் நண்பன் முத்து, அவன் உடலில் உள்ளதாக கூறுகிறான். மேலும், 'கமலேஷ் நல்லவன் இல்லை, அவனை கொலை செய்யப் போகிறேன்’ என்றும் கூறுகிறான். நிலைமை மோசமாகவே அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர்.

''45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை அவரது குடும்பத்தினர் என்னிடம் அழைத்துவந்தனர். அவரது மகன் முதலில் பேசினார், 'என் அம்மாதான் வீட்டுல எல்லாமே. ரொம்ப கம்பீரமா இருப்பாங்க. சத்தமா பேசி அதட்டுவாங்க. அவங்களைப் பார்த்தாலே எல்லாருக்கும் ஒருவித பயம் இருக்கும். அந்த அளவுக்கு துணிச்சலாக வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுவாங்க. போன மாசம் குடும்பத்தோட திருப்பதிக்குப் போனோம். அப்ப, வீட்டு விலக்காயிடக்கூடாதுன்னு மாத்திரை எடுத்துக்கிட்டாங்க. ஆனா, மாத்திரை சாப்பிட்ட இரண்டாவது நாள்லயே அம்மாவுக்கு குழப்பம் வர ஆரம்பிச்சிடுச்சு. மாத்திரைப் போட்டும் கோயிலுக்கு போகும்போது தீட்டு வந்திட்டா என்ன செய்றதுன்னு குழப்பமாவே இருந்தாங்க. அதனால எப்போதும் பரபரப்பா எல்லோர்கிட்டயும் எரிச்சலாகவும் கோபமாகவும் நடந்துகிட்டாங்க.

கோயிலுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம், மாத்திரை எடுத்துக்கிறதை நிப்பாட்டிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க நடவடிக்கையே தலைகீழா மாறிடுச்சு. எதிலும் பிடிப்பு இல்லாம, ஆர்வம் இல்லாம இருக்காங்க. யார் என்ன சொன்னாலும் அதை காதுல வாங்க மாட்டேங்கறாங்க. வீட்டுல எந்த வேலையும் செய்யறது இல்லை. எதைச் சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்டேங்கிறாங்க. விட்டத்தையே வெறிச்சுப்பார்த்துட்டு இருக்காங்க. ஒரே இடத்துல மணிக்கணக்கா உட்கார்ந்திட்டு இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கு அவங்க முன்னாடி நின்னு பேச பயப்படுவோம். இப்போ, என்ன திட்டினாலும் அதைப்பத்தின கவலையில்லாம எங்கயோ பார்த்துக்கிட்டு இருக்காங்க. எப்பவும் சுத்தமா குளிச்சு நீட்டா டிரெஸ் பண்ணிட்டு இருந்தவங்க, இப்போ குளிக்கிறதுகூட இல்லை. ரொம்ப அழுக்காவே இருக்காங்க. ஏதோ மனப் பிரச்னை இருக்கும்னு நினைக்கிறோம்' என்றார்.

அந்த அம்மாவுக்கு என்ன நடந்தது? திடீரென நிலைமை மோசம் அடையும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? மனரீதியாக பாதிக்கப்படுவதற்கு எது காரணமாக அமைந்திருக்கும்? உங்கள் பதில்களை எழுதி அனுப்புங்கள்.

டாக்டர் செந்தில்வேலன் பதில்

கமலேஷை ஆழ்மன (மனோவசியம்) சிகிச்சைக்கு உட்படுத்தி அவனது உள் மனதில் என்ன உள்ளது என்பதை கண்டறிந்தோம். கல்லூரியில், கமலேஷின் நண்பன், முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனை ராக்கிங் செய்திருக்கிறான். அவன் முதல்வருக்கு புகார் மனு எழுதி, இதற்கென உள்ள பெட்டியில் போட்டுவிட்டான். இதனால், பயந்துபோன கமலேஷின் நண்பன் இரவு முழுக்க தூங்காமல் அழுதிருக்கிறான். அவன்மேல் பரிதாபப்பட்ட கமலேஷ், அதிகாலையில் மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில், அந்தப் பெட்டித் திறந்து கடிதத்தை எடுத்துவந்துவிட்டான்.

பிரச்னை முடிந்தது என்று நிம்மதியாக இருந்த நேரத்தில், அவனது நண்பர்கள் 'அங்கு சிசிடிவி கேமரா உள்ளது. கரென்ட் இல்லை என்றாலும் பேட்டரியில் அது இயங்கும். அதன்மூலம் உன்னை கண்டுபிடித்துவிடுவார்கள்’ என்று கூறியிருக்கின்றனர். 'மாமாவின் தயவில் படிக்கும் நம்மை, நிர்வாகம் நீக்கிவிடுமோ?’ என்ற பயம் கமலேஷ§க்கு ஏற்பட்டிருக்கிறது. பயம் அதிகரித்து மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, மயங்கி விழுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் தப்பு செய்துவிட்டோமே என்ற மனதின் வலி, வேதனை, குற்ற உணர்ச்சி மேலோங்க அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவன் மனதே இரண்டாகப் பிரித்து அதில் ஒருபகுதி வேறு ஒரு ஆளாக மாறி அவனையே தண்டிக்கிறது. பூசாரி மந்திரிக்கும்போது கமலேஷின் ஆழ்மனதில் உள்ள முரண்பாடானது முத்துவாக வெளிப்படுகிறது. இந்த முத்து என்பது வேறுயாருமல்ல கமலேஷின் இரண்டாகப் பிரிந்த மனசாட்சிதான்.

எப்போதோ இறந்த நண்பன், கமலேஷின் உடலுக்குள் சென்று இவனைத் தண்டிப்பதாக அவன் மனது ஒரு பிரமையை உருவாக்குகிறது. இதன்மூலம் அவன் செய்த தப்புக்கு பிராயசித்தம் தேடுவதாக மனதே நினைத்துக்கொள்கிறது.

முத்துவாக வெளிப்பட்ட மனசாட்சி, 'கமலேஷ் நல்லவன் இல்லை’ என்று கூறுகிறது. குங்குமத்தை குழப்பி வாயில் ஊற்றிக்கொண்டு அது ரத்தம் என்பதுபோல பயமுறுத்தியது. இவன் மனசாட்சியே தண்டனை கொடுப்பதால், ராக்கிங் செய்த பிரச்னை, கல்லூரி பிரச்னை எல்லாம் அடிபட்டுபோய்விட்டது. இதன்மூலம் உண்மைப் பிரச்னையில் இருந்து கமலேஷ் தப்பித்துக்கொள்கிறான்.

கமலேஷ§க்கு வந்திருப்பது 'ஸ்பிளிட் பர்சனாலிட்டி’ என்று கூறுவோம். சினிமாவில்கூட இதுபோன்று பார்த்திருக்கிறோம். அதெல்லாம் சமூகத்தில் நடக்கும் பிரச்னைக்காக மனது இரண்டாக, மூன்றாக பிரிந்து வெளிப்படும். சமூகத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்கும். ஆனால், இந்தச் சம்பவத்தில், அவனின் தவறுக்காக, அவன் மனதே இரண்டாகப் பிரிந்து தண்டிக்கிறது.

பொதுவாக, மன முதிர்ச்சி உடையவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பார்கள், தண்டனை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இவன் முதிர்ச்சியற்ற, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மனநிலையை உடையவன் என்பதால் இவனால் இந்தப் பிரச்னையை எளிதாக கையாள முடியவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வராது. எந்த ஒரு சூழ்நிலையிலும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை வரலாம். எந்த ஒரு பிரச்னையிலும் எதிரும் புதிருமான முரண்பாடு போராட்டம் நம் எல்லோர் மனதிலும் நடக்கும். அதை நாம் மிகவும் முதிர்ச்சியுடன் கையாள்வோம். ஆனால், கமலேஷால் அதை கையாள முடியாததுதான் பிரச்னைக்குக் காரணம். அவன் மனசாட்சியே அவனைத் தண்டிக்க ஆரம்பித்துவிட்டது.

'செய்த தவறுக்கு மன்னிப்பு கேள்; இனி இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்துக்கொள்’ என்று கவுன்சலிங் கொடுத்தோம். அதேபோல அவனும், அவனது பெற்றோரும் சென்று கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். கமலேஷ§க்கு மனப்பதற்றம் குறைப்பதற்காகவும் தூக்கம் வருவதற்காகவும், பயம் குறையவும் மருந்து மாத்திரை அளிக்கப்பட்டது. தொடர் மருந்து மாத்திரைகள் மற்றும் பல்வேறு உளவியல் சிகிச்சைக்குப் பிறகு கமலேஷ் இப்போது குணமடைந்துவிட்டான். கல்லூரிக்கு தொடர்ந்து சென்று வருகிறான்.

வாசகர் கடிதம்

'மருத்துவப் பரிசோதனையில் அவனுக்கு ஒன்றுமில்லை என்று வந்துவிட்டது. ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைப்பதற்காக கமலேஷ் நாடகம் போடுகிறான். பேய், சுடுகாடு என்று ஏமாற்றுகிறான். கல்லூரி நண்பர்களிடம் விசாரித்தால் உண்மை வெளிப்பட்டுவிடும்.'

எம்.மாலினி, கோயம்புத்தூர்.

'ஒரு வருடத்துக்கு முன் இறந்த நண்பனின் நினைவு கமலேஷ§க்கு இருந்திருக்கும். அதுதான், அவன் மனசுக்குள் ஒருவித பீதியை உண்டாக்கி, அவனுக்குள் கமலேஷ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். அவன் மனதுக்குள் உள்ள பயத்தைப் போக்கினாலே பிரச்னை சரியாகிவிடும்.'

என்.ரவி, திருச்செந்தூர்.