Published:Updated:

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

Vikatan Correspondent
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இலவச சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில்  மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில்  இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதையொட்டி அரசின் அறிவுறுத்தலில் ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்கு முகாம் குறித்து ஆட்டோக்களிலும் வாகனங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

போலியோ இல்லா இந்தியா உருவாக்க நாளை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுங்கள்.

- மு.செய்யது